நவம்பர் மாத ராசி பலன் 2022: ஒளிமயமான எதிர்காலம் யாருக்கு? நவ கிரகங்கள் யாருக்கு சாதகம்?
சென்னை: நவம்பர் மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் சில ராசிக்காரர்களுக்கு பண மழை அடை மழையாக கொட்டப்போகிறது. சிலருடைய வாழ்க்கையில் எதிர்பாராத சம்பவங்கள் வந்து போகும். துலாம் ராசியில் நான்கு கிரகங்கள் சேர்ந்திருக்க குரு பகவானும், சனி பகவானும் நேர்கதியில் ஆட்சி பெற்று பயணம் செய்கின்றனர். துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளில் பிறந்தவர்களுக்கு நவம்பர் மாதத்தில் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
நவம்பர் மாதத்தில் சூரிய பகவான் துலாம், விருச்சிகம் ராசிகளில் பயணம் செய்வார். துலாம் ராசியில் பயணிக்கும் புதனும், சுக்கிரனும் விருச்சிக ராசிக்கு ராசிக்கு இடம் மாறுவார்கள். மகரம் ராசியில் சனி, மீன ராசியில் குரு, மேஷ ராசியில் ராகு, மிதுனத்தில் செவ்வாய், துலாம் ராசியில் கேது என கிரகங்கள் பயணம் செய்கின்றன.
நவ கிரகங்களின் இடப்பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு நன்மைகளை செய்யும். சில ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை கொடுக்கும். சிலருக்கு திடீர் ஜாக்பாட் அடிக்கும். நவம்பர் மாதத்தில் யாருக்கெல்லாம் நவ கிரகங்கள் சாதகமான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

துலாம்
சுக்கிரபகவானை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே..நவம்பர் மாதத்தில் பாதி நாட்கள் நான்கு கிரகங்கள் உங்கள் ராசியில் கூடியுள்ளன. மாத பிற்பகுதியில் கிரகங்கள் இடப்பெயர்ச்சி அடைகின்றன. உங்களுக்கு வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். மாத பிற்பகுதியில் அற்புதமான மாற்றங்கள் ஏற்படும். புதிய மாற்றங்கள் ஏற்படும். பண வருமானம் அதிகரிக்கும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கி புரமோசன் கிடைக்கும்.

குடும்பத்தில் சண்டை
நவம்பர் 14ஆம் தேதிக்குப் பிறகு மந்த நிலையில் மாற்றம் ஏற்படும். நாம் நினைத்த காரியம் நிறைவேறும். வெளிநாட்டு யோகம் கைகூடி வரும். ராகு ஏழாம் வீட்டிலும் கேது ராசியிலும் இருப்பதால் உங்களுக்கு சின்னச் சின்ன மனக்குழப்பங்கள் வந்து போகும். மன ரீதியாகவும் சில மாற்றங்கள் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிணக்குகள் வந்து போகும். காதல் விவகாரங்கள் சண்டையில் முடியும். மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்டுவது அவசியம்.

விருச்சிகம்
வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். திருமணம் சுப காரியம் கைகூடி வரும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சொத்துக்கள் வாங்கலாம். நவம்பர் மாத பிற்பகுதியில் உங்களுக்கு நற்காரியங்கள் நிறைய நடைபெறும். குரு பகவான் 5ஆம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுவது சிறப்பு. மன திருப்தி அதிகரிக்கும். காதல் கைகூடும் திருமணத்தில் முடியும்.

ஒளிமயமான எதிர்காலம்
கார்த்திகை மாதம் தொடங்கும் போதே ஒளிமயமான எதிர்காலம் தெரியத் தொடங்கியுள்ளது. சுப காரியங்கள் அதிகம் நடைபெறும். உங்களுடைய மனதில் திருப்தி ஏற்படும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பண வருமானம் இயல்பாக இருக்கும். கொடுத்த கடன்கள் திரும்ப கிடைக்கும். மொத்தத்தில் நவம்பர் மாதம் சாதகமும் சந்தோஷமும் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.

தனுசு
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே.. உங்களுக்கு வேலையில் மாற்றங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை. இருக்கும் வேலையில் கவனம் தேவை. பிரச்சினைகளே வாழ்க்கையாக வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களுக்கு நவம்பர் மாதம் சாதாரணமாதமாக கடந்து விடும். பணம் விசயத்தில் கவனம் தேவை. பணத்தை கடனாக கொடுத்து ஏமாந்து விட வேண்டாம். இல்லத்தரசிகள் நிம்மதி பெருமூச்சு விடும் காலம் வந்து விட்டது.

திடீர் செலவுகள்
என்னதான் பண வருமானம் அதிகமாக வந்தாலும் திடீர் செலவு வரும். சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். கால சூழ்நிலை உங்களுக்கு இப்போதைக்கு சாதகமாக இல்லை. உங்களுக்கு எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று யாராலும் கணிக்க முடியவில்லை. மாணவர்களுக்கு இந்த மாதம் சாதகமாக உள்ளது. மாணவர்கள் படிப்பில் அக்கறையோடு இருப்பது அவசியம். வண்டி வாகனம் வாங்க முடிவு செய்யலாம். மன நிம்மதிக்கான காலம் நெருங்கி வருகிறது மகிழ்ச்சியோடு அனுபவிக்கத் தயாராகுங்கள்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications