சொந்த வீடு வாங்கும் யோகம் பெறும் மேஷம் ராசி.. அக்டோபர் மாதத்தில் குவியும் நன்மைகள்
அக்டோபர் மாத பலன்: செப்டம்பர் மாதம் நிறைவடைந்து அக்டோபர் மாதம் நாளை பிறக்கவுள்ளது. இந்த அக்டோபர் மாதத்தில் மேஷ ராசியினருக்கு குடும்பம், தொழில், வேலைவாய்ப்பு எப்படி இருக்கும், என்னவிதமான பலன்கள் கிடைக்கும், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
நவக்கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக நிலை மாற்றமானது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும்.

அக்டோபர் மாதம் நாளை பிறக்கவுள்ள நிலையில், கிரகங்கள் அனைத்தும் நல்ல நிலையில் உள்ளன. செவ்வாய் நீச்சபங்க ராஜயோகத்தில் உள்ளது. சுக்கிரன் ஆட்சி பெற்றுள்ளது. புதன் வலுவாக உள்ளது. சூரியன், புதன், சுக்கிரனுடைய வீட்டில் உள்ளது. செவ்வாயும், குருவும் உச்ச குருவின் தொடர்பில் உள்ளது. ராகு கேதுவைத் தவிர மற்ற எல்லா கிரகங்களும் சுபத்துவமாக உள்ளது. இதனால், 12 ராசிக்காரர்களுக்கும் நன்மைகளைத் தரக்கூடிய நல்ல மாதமாக இருக்கும்.
அந்த வகையில், இந்த அக்டோபர் மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நற்பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் ராசி பலன்
மேஷ ராசிக்காரர்களுக்கு ராசிநாதன் நீச்சத்தில் இருக்கிறார். இதனால், எந்த விஷயங்களை செய்தாலும் அவை இழுபறியாகத்தான் நடக்கும். இருப்பினும், செவ்வாய் நீச்சபங்க ராஜயோகத்தை ஈடுசெய்யும் வகையில் மாதம் முழுவதும் சுக்கிரன் ராசியைப் பார்ப்பது அற்புதமான பலன்களைத் தரும். 8, 10, 12 ஆம் இடத்தை குரு பார்ப்பதால், 7 ஆம் இடத்தில் சுக்கிரன் இருப்பதாலும் வயதுக்கேற்ப நல்ல பலன்களைக் கொடுக்கும்.
முன்னேற்றம்
5, 6, 7 ஆம் அதிபதி இணைந்து மாதத்தில் பெரும்பாலான நாட்களில் ராசியைப் பார்க்கின்றனர். இதனால், தனியாக செய்யும் விஷயங்களை விட கூட்டாக இணைந்து செய்யக்கூடிய விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். அந்நியோன்யம், புரிந்துகொள்ளும் தன்மை அதிகரிக்கும். மனைவியின் உடல்நிலை மேம்படும்.
வீடு கட்டும் யோகம்
வேலையில் அதிகத் துன்பம், அலைச்சலை அனுபவித்து வந்த கணவன்மார்களுக்கு அக்டோபர் மாதத்தில் நல்ல விடிவு காலம் பிறக்கும். வேலையில் இருந்து வந்த பிரச்சனை தீரும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். 4 ஆம் இடம் சுபத்தன்மையுடன் இருப்பதாலும், 4 ஆம் இடத்தில் செவ்வாய் இருப்பதாலும் வீடு கட்டுவதற்கான தைரியம் ஏற்படும்.
வாகன யோகம்
செலவுக்கு மேல் செலவுகள் வந்தாலும் வீடு கட்டக்கூடிய அமைப்பு உள்ளது. வீடு வாங்குவது, அப்பார்ட்மெண்ட் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். சிலர் இந்த அக்டோபர் மாதத்தில் புதிய வாகனங்களை வாங்குவீர்கள். தொழிலில் முன்னேற்றம் பெறுவீர்கள். இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு புத்துணர்ச்சி உங்களுக்கு ஏற்படும்.
பணவரவு
செவ்வாய் பலவீனமான நிலையில் நீச்சம் பெறுவதால் கோபம் எல்லாம் குறையக்கூடிய மாதமாக இருக்கும். எந்த விஷயத்தை எடுத்தாலும் யோசித்து செயல்படுவீர்கள். இளைஞர்களுக்குப் புகழ் கிடைக்கும் யோகம் உண்டாகும். பண வரவு நன்றாக இருக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும் நல்ல காலகட்டமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications
