அக்டோபர் மாத பலன்: மிதுன ராசிக்கு அடுத்த 4 ஆண்டுகள் அட்டகாசம்.. அதிர்ஷ்ட காலம் ஆரம்பம்

Subscribe to Oneindia Tamil

அக்டோபர் மாத பலன்: செப்டம்பர் மாதம் நிறைவடைந்து அக்டோபர் மாதம் நாளை பிறக்கவுள்ளது. இந்த அக்டோபர் மாதத்தில் மிதுன ராசியினருக்கு குடும்பம், தொழில், வேலைவாய்ப்பு எப்படி இருக்கும், என்னவிதமான பலன்கள் கிடைக்கும், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

நவக்கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக நிலை மாற்றமானது மிதுனம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும்.

october-matha-palan-what-kind-of-benefits-will-get-mithunam-rasi-people-in-this-month

அக்டோபர் மாதம் நாளை பிறக்கவுள்ள நிலையில், கிரகங்கள் அனைத்தும் நல்ல நிலையில் உள்ளன. செவ்வாய் நீச்சபங்க ராஜயோகத்தில் உள்ளது. சுக்கிரன் ஆட்சி பெற்றுள்ளது. புதன் வலுவாக உள்ளது. சூரியன், புதன், சுக்கிரனுடைய வீட்டில் உள்ளது. செவ்வாயும், குருவும் உச்ச குருவின் தொடர்பில் உள்ளது. ராகு கேதுவைத் தவிர மற்ற எல்லா கிரகங்களும் சுபத்துவமாக உள்ளது. இதனால், 12 ராசிக்காரர்களுக்கும் நன்மைகளைத் தரக்கூடிய நல்ல மாதமாக இருக்கும்.

அந்த வகையில், இந்த அக்டோபர் மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நற்பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசிக்காரர்களுக்கு 5 ஆம் இடத்தில் சுக்கிரனும், புதனும் சேர்ந்திருக்கின்றனர். ராசிநாதன் சுபத்துவமாக இருக்கிறார். 2 ஆம் இடத்தில் நீச்சபங்க ராஜயோகத்தில் செவ்வாய் வலுவிழந்த நிலையில் குருவுடன் அமர்ந்திருக்கிறார். இதனால், எதிர்ப்புகள் அடங்கியிருக்கும். புதன் சுக்கிரன் சேர்க்கை மிகவும் வலிமையாக இருப்பதால் தொட்டது துலங்கக்கூடிய மாதமாக இருக்கும்.

அடுத்த 4 ஆண்டுகள்

உங்களுடைய புத்திசாலித்தனம் கைகொடுக்கக் கூடிய யோகம் உண்டாகும். கனவு உலகிலேயே இருந்து கொண்டிருப்பீர்கள். ஒன்றிரண்டு வருடங்களில் உங்களுக்கு அற்புதமான யோகங்கள் ஏற்படும். அடுத்த சனிப்பெயர்ச்சி 11 ஆம் இடத்திற்கு வருவதால் 4 வருடங்கள் அட்டகாசமாக இருக்கும். வேலை, தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் பெருவீர்கள்.

அனுகூலம்

அடுத்தடுத்து 4 வருடங்கள் இப்போது சாதகமான தன்மையில் உள்ளதால், இந்த அக்டோபர் மாதத்தில் இருந்தே உங்களுக்கு படிப்படியாக நன்மைகள் நடக்க ஆரம்பிக்கும். 2 இல் செவ்வாய் இருப்பதால் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் இருக்கும். மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத நிலை, கணவருக்கு பொருளாதார சிக்கல் போன்ற சிறு சிறு பிரச்சனைகள் இருக்கும். இருப்பினும், அவற்றை எல்லாம் சமாளிப்பீர்கள்.

எதிர்காலம்

5 ஆம் இடத்தில் 3 ஆம் அதிபதி சூரியன் வந்து அமர்ந்திருப்பதால் கிழக்கு திசையில் இருக்கும் குழந்தைகளால் நல்ல தகவல்கள் வந்து சேரும். இளைஞர்களால் பெற்றோர்களுக்கு சந்தோஷம் ஏற்படும். பெற்றோர்களால் பிள்ளைகளுக்கு சந்தோஷம் ஏற்படும். ராசிநாதன் வலுவாக இருப்பதால் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பதை இப்போது நிச்சயம் செய்வீர்கள்.

காதல் கைகூடும்

எந்த துறையை படிக்கலாம், எந்த வேலைக்கு செய்யலாம், எந்த துறை உங்களுக்கு ஏற்றது என்பதை உறுதி செய்யும் இந்த அக்டோபர் மாதம் அமைந்திருக்கும். சிலருக்கு பெண் வழி உறவுகளால் நன்மைகள் உண்டாகும். காதல் கைகூடும். காதல் வாழ்க்கை இனிக்கும். காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கு கூட புதிய காதல் அமைவதற்கான யோகம் ஏற்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+