Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அக்டோபர் மாத ராசி பலன் 2021: கும்பம், மீன ராசிக்காரர்களுக்கு அமைதியும் ஆனந்தமும் கிடைக்கும்

அக்டோபர் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி மற்றும் பார்வையால் கும்பம் மற்றும் மீனம் ராசிக்காரர்களுக்கு கவனமும் விழிப்புணர்வும் தேவைப்படும் மாதமாகும்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அக்டோபர் மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் 15 நாட்களும் துலாம் ராசியில் 15 நாட்களும் பயணம் செய்யப்போகிறார். சூரியனுடன் செவ்வாயும், புதனும் இணைந்தே பயணிக்கப் போகின்றனர். நவ கிரகங்களின் சஞ்சாரம் கூட்டணியால் அக்டோபர் மாதத்தில் கும்பம் மற்றும் மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகிறது. அதே நேரத்தில் கவனமும் விழிப்புணர்வும் தேவைப்படும் மாதமாக அமைந்துள்ளது.

அக்டோபர் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ரிஷப ராசியில் ராகு, கன்னி ராசியில் சூரியன்,செவ்வாய், துலாம் ராசியில் புதன், சுக்கிரன்,விருச்சிக ராசியில் கேது, மகர ராசியில் சனி,குரு என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. அக்டோபர் 1ல் புதன் கன்னி ராசிக்கு மாறுகிறார். அக்டோபர் 2ஆம் தேதியன்று சுக்கிரன் விருச்சிக ராசிக்கு மாறுகிறார். சனிபகவானின் வக்ர சஞ்சாரம் முடிவுக்கு வருகிறது.

October matha rasi palan 2021: Kumbam and Meenam rasi predictions for the month of October

சூரியன் 17ஆம் தேதி துலாம் ராசியில் நீசமடைகிறார். மாத பிற்பகுதிகளில் குருபகவான் வக்ர கதியில் இருந்து நேர்கதியில் பயணம் செய்யப்போகிறார். அக்டோபர் 21ஆம் தேதி செவ்வாய் துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். மாத இறுதியில் புதன் துலாம் ராசியில் செவ்வாயுடன் இணைந்து பயணம் செய்யப்போகிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் கூட்டணியால் கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

கும்பம்

அக்டோபர் மாதத்தில் கும்பம் ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் நான்காம் வீட்டில் ராகு, எட்டாம் வீட்டில் சுக்கிரன், செவ்வாய், புதன், பத்தாம் வீட்டில் கேது, சுக்கிரன், விரைய ஸ்தானத்தில் குரு, சனி என கிரகங்கள் பயணம் செய்கின்றன. இந்த மாதம் பயணங்களும் அதனால் செலவுகளும் அதிகரிக்கும். வேலை தொழிலில் பெரிய அளவில் முதலீடுகளைத் தவிர்த்து விடவும். சுப காரியங்கள் நடைபெறுவதில் தடைகள் ஏற்படும். வரன் அமைவதில் சில பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன வாக்குவாதங்கள் வந்து செல்லும் விட்டுக்கொடுத்து செல்லவும்.

காதல் வாழ்க்கையில் பிரிவினைகள் வரலாம் கவனம் தேவை. உறவுகளில் எச்சரிக்கை தேவை. வாகனங்களில் போகும் போது கவனம் தேவை. வேகத்தை விட நிதானம் தேவை. எதிர்பாலினத்தவர்களுடன் பேசும் போது கவனம் தேவை. அமைதியாக செல்வதே இந்த மாதம் நிம்மதியைத் தரும். குடும்பத்தில் உறவினர்களுடன் பேசும் போது சண்டை ஏற்படுவதைத் தவிர்க்கவும். உணவு விசயத்தில் விழிப்புணர்வு அவசியம்.

மாத பிற்பகுதியில் சூரியன், செவ்வாய் இடப்பெயர்ச்சியாகி ஒன்பதாம் வீட்டிற்கு நகர்ந்து விடும். மாத பிற்பகுதியில் புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். மாத முற்பகுதியில் புது முயற்சிகள் வேண்டாம் தவிர்த்து விடவும். மாணவர்களுக்கு இந்த மாதம் கவனச்சிதறல் மன குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்வது அவசியம். பெற்றோர்கள், ஆசிரியர்களுடன் ஆலோசனை செய்து முடிவு செய்வது நல்லது. பெண்கள் இல்லத்தரசிகளுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அக்டோபர் மாதத்தை அமைதியாக இந்த மாதத்தை கடந்து விடுவது நல்லது.

மீனம்

மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சனி, குரு, மூன்றாம் வீட்டில் ராகு, ஏழாம் வீட்டில் சூரியன், செவ்வாய், புதன், ஒன்பதாம் வீட்டில் சுக்கிரன், கேது என கிரகங்கள் பயணம் செய்கின்றன. இந்த மாதம் கிரங்களின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாகவே உள்ளது. லாப ஸ்தானத்தில் உள்ள குரு, சனி கூட்டணியால் பண வருமானம் அபரிமிதமாக இருக்கும். உங்களுடைய யோக கிரகமான செவ்வாய் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து உங்கள் ராசி மற்றும் தொழில் ஸ்தானம், குடும்ப ஸ்தானத்தின் மீது விழுகிறது. குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். பண வரவு இந்த மாதம் அபரிமிதமாக இருக்கும்.

வேலையில் அற்புதமான மாற்றங்கள் நிகழும். வீடு கட்ட முயற்சி செய்யலாம். புது வீடு வாங்கலாம். குடும்ப உறவுகளின் ஆதரவு கிடைக்கும். புதன் வக்ரமடைந்தும் பின்னர் வக்ர நிவர்த்தியாகியும் ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். ஆட்சி உச்சம் பெற்ற புதன் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பது அற்புதமாக உள்ளது. மாணவர்களுக்கு இது நல்ல மாதம் தைரியம் வீரியம் அதிகரிக்கும். சுக போக வாழ்க்கை அமையப்போகிறது.

இந்த மாதம் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்கலாம். சூரியன் மாத பிற்பகுதியில் எட்டாம் வீட்டிற்கு செல்கிறார். திடீர் அலர்ஜி வரலாம். தோல் நோய் பாதிப்புகள் லேசாக எட்டிப்பார்க்கும். இல்லத்தரசிகளுக்கு நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். மொத்தத்தில் அக்டோபர் மாதத்தில் ஆனந்தம் ஆனந்தமே என்று உற்சாகமாகப் பாடப்போகிறீர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+