அக்டோபர் மாத ராசி பலன் 2022: இந்த ராசிக்காரர்களுக்கு அற்புத பலன்கள் நிகழும்..என்ஜாய் மக்களே!
சென்னை: அக்டோபர் மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு சாதனைகள் நிறைந்த மாதமாக இருக்கப்போகிறது. உங்களுக்கு வரப்போகும் சோதனைகளை சாதனைகளாக்கி வெற்றி பெறப்போகிறீர்கள். அக்டோபர் மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் கிடைக்கப் போகும் பலன்களை விரிவாகப் பார்க்கலாம்.
அக்டோபர் மாதத்தில் ரிஷப ராசியில் உள்ள செவ்வாய் மிதுன ராசிக்கு செல்கிறார். சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். ஜென்ம ராகு, ஏழாம் வீட்டில் கேது உள்ளது. சூரியன் பாதி நாட்கள் கன்னி ராசியிலும் பின்னர் துலாம் ராசியிலும் பயணம் செய்வார். சூரியன், சுக்கிரன், செவ்வாய் கிரகங்கள் இந்த மாதம் இடப்பெயர்ச்சி அடைகின்றன.
மேஷ ராசிக்காரர்களுக்கு அற்புதமான மாதம். ராசியில் ராகு, இரண்டாம் வீட்டில் செவ்வாய் 9ஆம் தேதி மூன்றாம் வீட்டிற்கு செல்கின்றனர். ஆறாம் வீட்டில் சூரியன், புதன், சுக்கிரன் பயணம் செய்கின்றனர். ஏழாம் வீட்டில் கேது பகவான் இருக்க 18ஆம் தேதியன்று சூரியன் இடப்பெயர்ச்சியாகி ஏழாம் வீட்டிற்கு செல்கிறார். சுக்கிரனும் 19ஆம் தேதி ஏழாம் வீட்டிற்கு சென்று சூரியனுடன் கூடவே பயணம் செய்கிறார். பத்தாம் வீட்டில் சனி, 12ஆம் வீட்டில் குரு பகவான் பயணம் செய்கின்றனர். மாத துவக்கத்தில் அஷ்டமத்தில் சந்திர பகவான் பயணம் செய்கிறார். சந்திராஷ்டமத்துடன் தொடங்குகிறது.

வேலை கிடைக்கும்
மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் ஸ்தான அதிபதி சனிபகவான் பத்தாம் வீட்டில் பயணம் செய்வதால் புது வேலை கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். சுக்கிரன் நீச்ச பங்க ராஜயோகம் அடைகிறார். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். திருமண முயற்சிகளில் சற்று சுணக்கமாகவே இருக்கும். காதலிப்பவர்களுக்கு சின்னச் சின்ன சண்டைகள் வந்து போகும்.

தைரியம் தன்னம்பிக்கை
செவ்வாய் இடப்பெயர்ச்சியால் மனோ தைரியம் அதிகரிக்கும். இளைய சகோதரர்களின் உதவி கிடைக்கும். கணவன் மனைவி இடையேயான பிரச்சினைகள் இந்த மாதம் முடிவுக்கு வரும். பயணங்களால் நன்மை உண்டாகும். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். ஆறாம் வீட்டில் புதன் உச்சம் பெற்று பயணம் செய்வதால் பங்கு சந்தை முதலீடுகள் லாபத்தை தரும்.

உடல் ஆரோக்கியம்
ஆறாம் வீட்டில் 3கிரகங்கள் உள்ளதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாத பிற்பகுதியில் சூரியன் சுக்கிரன் இணைந்து கேது உடன் பயணம் செய்வதால் திடீர் உடல் நல பாதிப்பை ஏற்படுத்தும். நரம்பு தொடர்பான பிரச்சினைகள் வந்து போகும். சுப செலவுகள் அதிகரிக்கும். இல்லத்தரசிகள் கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். 18ஆம் தேதி சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டிற்கு வந்து கேது உடன் இணைகிறார்.

செலவுகள் அதிகரிக்கும்
மாத முற்பகுதியில் நிதானம் அவசியம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். வயிறு தொடர்பான பிரச்சினைகள் வந்து செல்லும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். தடைகளை தாண்டி வெறி பெறுவீர்கள். எவ்வளவு சம்பாதித்தாலும் செலவுகள் கையை மீறி செல்வது கலக்கத்தை தரும். மாணவர்களுக்கு புத ஆதித்ய யோகம் கை கூடி வரப்போகிறது.

திருமண சுப காரியம்
மாத பிற்பகுதியில் ஆட்சி பெற்ற சுக்கிரனால் வெற்றிகள் தேடி வரும். திருமண சுபகாரியம் தொடர்பாக பேசலாம். நல்ல வேலை கிடைக்கும். ராகு பகவான் பிரம்மாண்ட வெற்றியைத் தருவார். சந்திராஷ்டம நாட்களில் மன அமைதி முக்கியம். இந்த மாதம் காளியை வழிபட பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.
-
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications