தனுசு ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. நினைச்சது நடக்கும் யோகம்

Subscribe to Oneindia Tamil

அக்டோபர் மாத பலன்: செப்டம்பர் மாதம் நிறைவடைந்து அக்டோபர் மாதம் நாளை பிறக்கவுள்ளது. இந்த அக்டோபர் மாதத்தில் தனுசு ராசியினருக்கு குடும்பம், தொழில், வேலைவாய்ப்பு எப்படி இருக்கும், என்னவிதமான பலன்கள் கிடைக்கும், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

நவக்கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக நிலை மாற்றமானது தனுசு முதல் மீனம் வரையிலான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும்.

october-matha-rasi-palan-what-kind-of-benefits-will-get-dhanusu-rasi-people-in-this-month

அக்டோபர் மாதம் நாளை பிறக்கவுள்ள நிலையில், கிரகங்கள் அனைத்தும் நல்ல நிலையில் உள்ளன. செவ்வாய் நீச்சபங்க ராஜயோகத்தில் உள்ளது. சுக்கிரன் ஆட்சி பெற்றுள்ளது. புதன் வலுவாக உள்ளது. சூரியன், புதன், சுக்கிரனுடைய வீட்டில் உள்ளது. செவ்வாயும், குருவும் உச்ச குருவின் தொடர்பில் உள்ளது. ராகு கேதுவைத் தவிர மற்ற எல்லா கிரகங்களும் சுபத்துவமாக உள்ளது. இதனால், 12 ராசிக்காரர்களுக்கும் நன்மைகளைத் தரக்கூடிய நல்ல மாதமாக இருக்கும்.

அந்த வகையில், இந்த அக்டோபர் மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நற்பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசிக்காரர்களுக்கு 8 ஆம் இடத்தில் குருமங்கள யோகம் ஏற்பட்டிருக்கும் நல்ல மாதமாகும். 5 ஆம் அதிபதி நீச்சமாகியுள்ளார். 12 ஆம் அதிபதியாகவும் வருவதாலும், 2 ஆம் இடத்தைப் பார்ப்பதாலும் வெளிநாடு, வெளிமாநிலம், தொலைதூர இடங்கள், ஏற்றுமதி, இறக்குமதி, கூரியர் டெலிவரி, டிரான்ஸ்போர்ட் துறைகளில் இருப்பவர்களுக்கு பண வரவுகள் அற்புதமாக இருக்கும்.

கவலை விலகும்

பாக்கியாதிபதியான சூரியன் 11 ஆம் இடத்தில் வலுத்து இருக்கிறது. சூரியன் புதன் சுக்கிரன் 11 ஆம் இடத்தில் வலுத்திருப்பது நல்ல அமைப்பாகும். தந்தை சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த கவலைகள் விலகும். அப்பாவின் ஆதரவு கிடைக்கும். தந்தையின் வழி சொத்தை அனுபவிக்க முடியாமல் இருந்த நிலைமைகள் அக்டோபர் 15 ஆம் தேதிக்குப் பிறகு.

வீடு, கார் யோகம்

போட்டிகளில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். நேர்காணலுக்குச் செல்பவர்கள் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். அக்டோபர் 15 ஆம் தேதிக்குப் பிறகு வேலையில் சேரக்கூடிய அமைப்பு உள்ளது. திருமண யோகம் உண்டாகும். திருமணம் உறுதியாவது, நிச்சயம் செய்யும் அமைப்பு உள்ளது. குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு, கார் வாங்கும் யோகம் உண்டாகும்.

பணவரவு சூப்பர்

பண வரவு அபரிமிதமாக இருக்கும். சோஷியல் மீடிவா மூலமாக பிரபலமாவீர்கள். திடீர் லாபம் கிடைக்கும். அக்டோபர் 15 ஆம் தேதிக்குப் பிறகு சூரியன் 11 ஆம் இடத்திற்கு மாறுவது நல்ல யோகத்தைக் கொடுக்கும். 9, 10, 11 ஆம் இடத்துக்கு உரியவர்கள் மூவரும் 11 ஆம் இடத்தில் இருப்பதால் எல்லா விஷயங்களிலும் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். கடனை அடைப்பீர்கள்.

குடும்பம்

ஆரோக்கியத்தை கவனிப்பீர்கள். குடும்பத்தின் மேல் அக்கறை, பாசம் அதிகரிக்கும். நல்ல மாற்றங்கள் தெரியக்கூடிய, நற்பலன்கள் அனுபவிக்கக்கூடிய மாதமாக இருக்கும். ராசிநாதன் உச்சமாக இருப்பதால் எதிர்பாராத மாற்றங்கள், முன்னேற்றங்கள் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய காலகட்டம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+