அக்டோபர் மாத பலன்: ரிஷபம் ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் 3 கிரகங்கள்.. தொட்டதெல்லாம் துலங்கும் யோகம்

Subscribe to Oneindia Tamil

அக்டோபர் மாத பலன்: செப்டம்பர் மாதம் நிறைவடைந்து அக்டோபர் மாதம் நாளை பிறக்கவுள்ளது. இந்த அக்டோபர் மாதத்தில் ரிஷப ராசியினருக்கு குடும்பம், தொழில், வேலைவாய்ப்பு எப்படி இருக்கும், என்னவிதமான பலன்கள் கிடைக்கும், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

நவக்கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக நிலை மாற்றமானது ரிஷபம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும்.

october-matha-rasi-palan-what-kind-of-benefits-will-get-rishabam-rasi-people-in-this-month

அக்டோபர் மாதம் நாளை பிறக்கவுள்ள நிலையில், கிரகங்கள் அனைத்தும் நல்ல நிலையில் உள்ளன. செவ்வாய் நீச்சபங்க ராஜயோகத்தில் உள்ளது. சுக்கிரன் ஆட்சி பெற்றுள்ளது. புதன் வலுவாக உள்ளது. சூரியன், புதன், சுக்கிரனுடைய வீட்டில் உள்ளது. செவ்வாயும், குருவும் உச்ச குருவின் தொடர்பில் உள்ளது. ராகு கேதுவைத் தவிர மற்ற எல்லா கிரகங்களும் சுபத்துவமாக உள்ளது. இதனால், 12 ராசிக்காரர்களுக்கும் நன்மைகளைத் தரக்கூடிய நல்ல மாதமாக இருக்கும்.

அந்த வகையில், இந்த அக்டோபர் மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நற்பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்கிரனும், புதனும் சேர்ந்து 6 ஆம் இடத்தில் வலுத்து இருப்பது நல்ல அமைப்பாகும். சனி குருவின் பார்வையில் இருக்கிறார். 3 ஆம் இடத்தில் நீச்சபங்க ராஜயோகம் செவ்வாயுடன் சேர்ந்திருக்கிறது. சுகாதிபதி 7 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். கேந்திரங்களில் 3 கிரகங்கள் இருப்பது பெரிய யோகத்தை ஏற்படுத்தும்.

புதிய கடன்

சிலருக்கு புதிய கடன்கள் அமையக்கூடிய வாய்ப்புள்ளது. தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டம். 2 ஆம் அதிபதி 6 ஆம் வீட்டில் இருப்பதால் கடன்களால் சுபச் செலவுகள் இருக்கும். வீட்டில் மங்களகரமான விஷயங்கள் நடக்கும். மகளுக்குத் திருமணம், ஆண்களுக்கு வேலை கிடைப்பது போன்ற யோகம் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருமானங்கள் வரக்கூடிய அமைப்பு உள்ளது.

நல்ல பலன்

மாதத்தின் பாதி நாட்கள் சூரியன் 6 ஆம் இடத்திற்கு வருகிறார். 3, 6, 10, 11 ஆம் இடத்தில் சூரியன் இருந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். தற்போது நீச்சமாக இருந்தாலும் சூரியன் சுபத்துவமாக இருக்கிறார். அரசாங்கத்தில் இருந்து வர வேண்டிய அனுமதி, அரசாங்கம் சார்ந்த விஷயங்கள், சலுகைகள் போன்றவை எல்லாமே நடக்கக்கூடிய அமைப்பு உள்ளது.

தொழிலில் முன்னேற்றம்

உங்களது வீடு தேடி வந்து அனுமதி கிடைக்கக்கூடிய அமைப்பு உள்ளது. நெருப்பு சார்ந்த தொழில் அமைப்புகளில் தொடர்புடையவர்களுக்கு மேன்மையைத் தரக்கூடிய காலகட்டமாக இருக்கும். ஹோட்டல், ரியல் எஸ்டேட், கட்டடத் தொழில் செய்யக்கூடியவர்கள், அன்றாடம் உழைத்து பிழைப்பவர்கள் போன்ற துறைகளில் இருப்பவர்களக்கு முன்னேற்றம நிறைந்த காலகட்டமாக இருக்கும்.

வருமானம் பெருகும்

இதன் மூலமாக பெரிய அளவில் வருமானம் பெறக்கூடிய யோகம் உண்டாகும். பெரிய அளவில் கஷ்டங்கள், சிரமங்கள் இருக்காது. பிள்ளைகளால் ஆனந்தம் உண்டாகும். பிள்ளைகள் தூர இடத்திற்குச் செல்லும் அமைப்பு உள்ளது. சுபப் பிரிவுகள் உண்டாகும். பிள்ளைகளை வேலைக்காக வீட்டை விட்டு வெளியில் அனுமதி கொடுப்பீர்கள். அதற்கான தைரியம் உண்டாகும். சிலருக்கு ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+