ஆட்டத்தை ஆரம்பிக்கும் சிம்ம ராசி.. அக்டோபர் மாதத்தில் அடிக்கும் ஜாக்பாட்
அக்டோபர் மாத பலன்: செப்டம்பர் மாதம் நிறைவடைந்து அக்டோபர் மாதம் நாளை பிறக்கவுள்ளது. இந்த அக்டோபர் மாதத்தில் சிம்ம ராசியினருக்கு குடும்பம், தொழில், வேலைவாய்ப்பு எப்படி இருக்கும், என்னவிதமான பலன்கள் கிடைக்கும், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
நவக்கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக நிலை மாற்றமானது சிம்மம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும்.

அக்டோபர் மாதம் நாளை பிறக்கவுள்ள நிலையில், கிரகங்கள் அனைத்தும் நல்ல நிலையில் உள்ளன. செவ்வாய் நீச்சபங்க ராஜயோகத்தில் உள்ளது. சுக்கிரன் ஆட்சி பெற்றுள்ளது. புதன் வலுவாக உள்ளது. சூரியன், புதன், சுக்கிரனுடைய வீட்டில் உள்ளது. செவ்வாயும், குருவும் உச்ச குருவின் தொடர்பில் உள்ளது. ராகு கேதுவைத் தவிர மற்ற எல்லா கிரகங்களும் சுபத்துவமாக உள்ளது. இதனால், 12 ராசிக்காரர்களுக்கும் நன்மைகளைத் தரக்கூடிய நல்ல மாதமாக இருக்கும்.
அந்த வகையில், இந்த அக்டோபர் மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நற்பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசிக்காரர்களுக்கு குருவும், செவ்வாயும் மறைந்துள்ளதால் நீச்சபங்க ராஜயோகம் இந்த மாதம் கிடைக்கும். ராசிநாதன் 15 ஆம் தேதிக்குப் பிறகு நீச்சமடைகிறார். அக்டோபர் 15 ஆம் தேதி வரை 2 ஆம் இடத்தில் பணத்தை தரக்கூடிய அமைப்பில் சூரியன் இருக்கிறார். அதன் பிறகு சூரியன் நீச்சமாகி சுக்கிரனோடு இணைகிறார்.
முன்னேற்றம்
செவ்வாயும் நீச்சபங்கமாவதால் முதல் ஒரு பாதி சுமாராகத்தான் இருக்கும். பிற்பகுதி 15 நாட்கள் நல்ல பலன்களைத் தரக்கூடிய அமைப்பு உள்ளது. படிப்படியாக முன்னேற்றங்கள் வரக்கூடிய காலகட்டம். கடந்த 2 ஆண்டுகளாக தோற்றுப் போன விஷயங்களில் இருந்து வெளியில் வந்து வெற்றி பெறுவீர்கள். வடக்கு, வடமேற்கு திசையில் இருந்து நல்ல பலன்கள் வந்து சேரும்.
வெளிநாடு யோகம்
வெளிநாடு, வெளிமாநிலம் போன்ற தூர இடத்தில் இருப்பவர்களுக்கு சிட்டிசன்ஷிப், வேலைவாய்ப்பு கிடைப்பது, தொழில் அமைவது போன்ற யோகம் உண்டாகும். போன வருடம் இருந்த மன அழுத்தங்கள் பரிபூரணமாக நீங்கும். புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீச்சபங்க ராஜயோகம் உண்டாவதால் புதிய சொத்துகள் சேரும்.
அனுகூலம்
பங்காளி தகராறுகள் விலகும். அப்பாவின் மீது இருந்து வந்த வருத்தங்கள் விலகும். அப்பாவுடன் இணக்கமாகச் செல்லக்கூடிய அமைப்பு ஏற்படும். அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். அரசாங்கத்தின் அனுமதிகள் கிடைக்கும். உயர்ந்த நிலையில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். நல்ல அனுகூலங்கள் கிடைக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
முன்னேற்றம்
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை, தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். அஷ்டமசனி விலகிச் செல்லும் காலகட்டம் என்பதால் எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கும். இதுவரை இருந்து வந்த மன அழுத்தங்கள் நீங்கும். 90 சதவீத கஷ்டங்கள் விலகக்கூடிய மாதமாக இந்த அக்டோபர் மாதம் உங்களுக்கு அமையும்.


Click it and Unblock the Notifications
