Mithunam Rasi Palan: மிதுன ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. திடீர் அதிர்ஷ்டத்தால் திக்குமுக்காடுவீங்க
மிதுனம் ராசி பலன்: 2025 அக்டோபர் மாதத்தில் முக்கிய கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறவுள்ளன. இந்த கிரகங்களின் மாற்றத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் நிறைவடைந்து அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது. இந்த காலகட்டத்தில் சுக்கிரன் இந்த மாதம் நீச்சம் எனும் பலவீன நிலையை அடைகிறார். புதன் பகவான் மாறினாலும் குருவின் பார்வையில் வருகிறார். இந்த மாதம் பெரும்பால நாட்களில் செவ்வாய் குருவின் பார்வையிலேயே சுப அமைப்பில் நல்லவிதமாக இருக்கிறார்.

அதிசாரம் என்கிற முறையில் குரு பகவான் அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி உச்சம் என்கிற நிலைமையை அடைகிறார். ஏறத்தாழ 50 நாட்களுக்கு கடகத்தில் உச்சம் என்கிற நிலையை அடைவது 12 ராசிக்காரர்களுக்கும் சாதகமான பலன்களைக் கொடுக்கும். கெடுதல் நடந்து கொண்டிருப்பவர்களுக்கு கெடுதல் நிற்கக்கூடிய நிலைமை உண்டாகும்.
ஒன்றுமே நல்லவை நடக்கவில்லை என்பவர்களுக்கு ஓரளவு நல்லது நடக்கும் அமைப்பு உண்டாகும். 12 ராசிக்காரர்களுக்கும் ஏதோ ஒரு வகையில் நன்மையைத் தரும் அமைப்பில் இந்த அக்டோபர் மாதம் அமையும். பெரிய அளவில் தீமைகள் எதுவும் தரும் அமைப்புகள் இல்லை. அந்த வகையில், இந்த அக்டோபர் மாதத்தில் மிதுன ராசிக்காரர்கள் பெறப்போகும் நன்மைகள், பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு அட்டகாசமான மாதமாக இருக்கும். கனவுகள் அனைத்தும் நிறைவேறும் காலகட்டம். நினைத்தது அனைத்தும் கிடைக்கும் காலம். ஆயிரம் யானையின் பலத்தைப் பெறுவீர்கள். தைரியமும், தன்னம்பிக்கையும் நிறைந்த காலகட்டமாக இருக்கும். ராசியும் குருவின் இருப்பால் புனிதப்படும். ராசிநாதன் புதனும் குருவின் பார்வையில் புனிதப்படுவதால் அற்புதமான மாதமாக இருக்கும்.
புதன் உச்சம்
மாதத்தின் தொடக்கத்திலேயே புதன் பகவான் உச்சத்தில் இருந்து மாறி 5 ஆம் இடத்துக்கு வருகிறார். குருவின் பார்வையிலும் இருக்கிறார். எதிரியும் நண்பனாக மாறும் அற்புதமான காலகட்டம். உங்களை எதிர்த்துக் கொண்டிருந்தவர்கள், பொறாமைப்படுபவர்கள் எல்லாம் உங்களைத் தேடி வருவார்கள். புத்திசாலித்தனத்தால் வெற்றி பெறும் யோகம் உண்டு.
அதிர்ஷ்டம்
புதன் 5 ஆம் இடத்திற்கு மாறி அதிர்ஷ்ட பாவத்துக்கு மாறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதையும் சாதிக்கலாம் என்கிற சூழல் உண்டாகும். பிள்ளைகளால் யோகம் உண்டாகும். 2020 முதல் 3 ஆண்டுகளுக்கு பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்திருப்பீர்கள். இனி அந்த நிலைமைகள் எல்லாம் மாறும். எந்தெந்த இடங்களில் பாதிப்புகளை அடைந்தீர்களோ, அந்த பாதிப்புகளை நீங்களே உங்கள் புத்திசாலினத்தால் சமாளித்து மீண்டு வருவீர்கள்.
பாக்கியங்கள்
உங்களுக்குத் தேவையான பாக்கியங்கள் கிடைக்கும். நிச்சயார்த்தம் நடக்கும். கணவன், மனைவி யார் என்பது குறித்த தீர்மானங்கள் உண்டாகும். மன அழுத்தம் நீங்கும், பிரிந்தவர்கள் சேரும் யோகம் உண்டாகும். காதல் நிறைவேறும். கணவன், மனைவி அந்நியோன்யம் அதிகரிக்கும். பிரிதலில் மனமாற்றம் உண்டாகும்.
உத்தியோகம், படிப்பு, தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலையே போனாலும் அதை விட அற்புதமான வேலை கிடைக்கும். படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். எல்லா விதமான நன்மைகளும் வயதிற்கேற்ப நடக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டதெல்லாம் துலங்கக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications