கூட இருப்பவர்களால் வரும் பேராபத்து.. கடக ராசிக்கு வார்னிங்
அக்டோபர் மாத பலன்: அக்டோபர் மாதத்தில் பல்வேறு கிரக மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த கிரக மாற்றங்கள் 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், கடக ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதத்தில் ஏற்படும் நன்மைகள், வழிபட வேண்டிய தெய்வம், பரிகாரம் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், அக்டோபர் மாதத்திலும் முக்கியமான கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறுகின்றன. கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு மனதில் இனம்புரியாத ஒரு பய உணர்வு ஏற்படும். பொறுமையாக இருப்பதும், தைரியத்துடன் முன்னோக்கிச் செல்வதும் நன்மை பயக்கும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவுடன் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. தொடர்ச்சியாக இருந்து வந்த மனத் தாங்கல்கள் தீரும். யாரிடமும் எந்தவித வாக்குவாதங்களும் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
கவனம்
சிலரை நம்பி மோசம் போகக்கூடிய வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. எந்த விஷயமாக இருந்தாலும் தனிப்பட்ட விஷயத்திலும், துணை விஷயத்திலும் பெற்றோர் பெரியவர்களின் ஆசிர்வாதம் பெற்றும் ஆரம்பிப்பது நன்மையை ஏற்படுத்தும். முதுகு, அடிவயிறு, கழிவுப் பாதை, மன அழுத்தம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
பண வரவு
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். மனப் பதற்றம், மன அழுத்தம் போன்றவை தீரும். எடுத்த காரியங்களில் முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். பேச்சில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களுடன் இணக்கமாகச் செல்வது நல்லது.
வழிபாடு
நவக்கிரகத்தில் இருக்கும் குருவுக்கு விளக்கேற்றி வழிபட்டு வந்தால் அற்புதமான முன்னேற்றங்கள் ஏற்படும். பதட்டமான சூழ்நிலைகள் இருந்தாலும் விரைவில் மகிழ்ச்சியாக அதிலிருந்து மீளக்கூடிய அமைப்பு உண்டாகும். யோக பலத்தை அதிகளவில் பெறும் யோகம் உண்டு. பண விஷயங்களில் கனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் ஏதாவது மோசடிகளில் சிக்க வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications