அப்படிப்போடு..! மிதுன ராசியினரே உங்க வாழ்க்கையில் நடக்கப் போகும் 3 சூப்பர் மாற்றம்
அக்டோபர் மாத பலன்: அக்டோபர் மாதத்தில் பல்வேறு கிரக மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த கிரக மாற்றங்கள் 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், மிதுன ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதத்தில் ஏற்படும் நன்மைகள், வழிபட வேண்டிய தெய்வம், பரிகாரம் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், அக்டோபர் மாதத்திலும் முக்கியமான கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறுகின்றன. மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் தாய் வழி, தந்தை வழி உறவுகளின் தேக ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். அவர்களுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்வதை தவிர்க்க வேண்டும். எதிர்பார்த்த அனுகூலங்கள் பெரிய அளவிலான நம்பிக்கையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும்.
ஆரோக்கியம்
ரத்தத்தில் பரவும் தொற்று நோய், காய்ச்சல் போன்ற விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இடமாற்றங்கள் வந்தால் அதனைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. வியாபாரம், தொழிலில், படிப்பில், உத்தியோகத்தில் நினைத்த காரியங்கள் நடக்கக்கூடிய அற்புதமான காலகட்டம். மகான்கள் ஆசிர்வாதம் வாங்கினால் மிகப்பெரிய வெற்றி, மகிழ்ச்சி உண்டாகும்.
அனுகூலம்
மேலதிகாரிகளால் அனுகூலங்கள் ஏற்படும். குடும்பத்தில் புதிய வரவுகள் உண்டாகும். எல்லா விதமான சுப காரியங்களும், குடும்பத்திலும், வெளியிடத்திலும் ஒன்றன் பின் ஒன்றாக நடக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தடைகள் அனைத்தும் தவிடு பொடியாகும் யோகம் உண்டாகும்.
வழிபாடு
சுப காரியத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். அடுத்தடுத்து நன்மைகள் ஏற்படும் காலகட்டம். பிள்ளைகளுக்கான சுப காரியங்களை நடத்தி முடிக்கும் யோகம் உண்டாகும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் வெற்றி நிச்சயமாக ஏற்படும். ராகவேந்திரர் வழிபாடு மகிழ்ச்சியை உண்டாக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.












Click it and Unblock the Notifications