Kadagam Rasi Palan: கடக ராசிக்கு கோடியில் புரளும் யோகம்.. பணத்தில் நீச்சலடிக்கப் போறீங்க
Panguni matha palangal 2026: மாசி மாதம் நிறைவடைந்து பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த பங்குனி மாதத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாகும். இந்தப் பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சூரியன் பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சியின் நடைபெற்று நிலையில் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். பங்குனி மாதம் பிறந்துள்ள நிலையில் சில ராசிகளுக்கு அதிகப்படியான நன்மைகள் நடக்கும்.

சூரியன் பெயர்ச்சியுடன் பிறக்கும் பங்குனி மாதம் சில ராசியினருக்கு அற்புதமான மாற்றத்தைக் கொடுக்கும். பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம், ஸ்ரீராம நவமி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், அனுமன், பெருமாள், ராமருக்கு விசேஷம் நிறைந்த மாதம். இந்த பங்குனி மாதத்தில் கடக ராசிக்கான பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
கடகம் ராசி பலன் (Kadagam matha palangal)
கடகம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு தனாதிபதியான சூரியன் இந்த பங்குனி மாதம் முழுவதும் 9 ஆம் இடத்தில் இருக்கிறார். 2, 9 ஆம் இடத்தில் தொடர்புகள் இருக்கும்போது பண வரவு அற்புதமாக இருக்கும். அந்த வகையில் இந்த பங்குனி மாதத்தில் உங்களுக்கு நிறைவான பணங்கள் வந்து சேரும். ராஜயோகாதிபதியான செவ்வாயும் பங்குனி மாதத்தின் பிற்பகுதிக்குப் பிறகு அவரும் 9 ஆம் இடத்துக்குச் செல்கிறார்.
பணவரவு
தொழில், வேலை அற்புதமாக இருக்கும். வியாபாரம், விவசாயம் நன்றாக இருக்கும். பணம் எந்த விஷயங்களில் இருந்தெல்லாம் வருகிறதோ அந்த துறைகளில் எல்லாம் நீங்கள் சாதிக்கக்கூடிய மாதமாக இருக்கும். கடந்த சில வருடங்களாக இருந்து வந்த வேதனைகள், சோதனைகள் அனைத்தும் பரிபூரணமாக விலகும். 2026 ஆம் ஆண்டு உங்களுக்கு சாதனை செய்யக்கூடிய ஆண்டாக இருக்கும்.
ஆரோக்கியம்
அடிப்படை நன்மைகள் அனைத்தும் நடக்கும் மாதமாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். எதிர்பாராத வகையில் பண வரவு உண்டாகும். பங்குச்சந்தை போன்றவற்றில் ஏற்கனவே பணத்தை இழந்தவர்களுக்கு இழந்த பணம் மீண்டும் வந்து சேரும். குடும்ப நன்மைகள், குடும்ப ஒற்றுமைகள் மேலோங்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கி, ஆரோக்கியம் மேம்படும். அதற்கான சில விஷயங்கள் நடைபெறும்.
அனுகூலம்
இழந்த பணங்கள் எல்லாம் மீண்டும் வந்து சேரும். கடனை அடைக்கும் யோகம் உண்டு. கடன் சார்ந்த முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். நன்மைகள், அனுகூலங்கள் நடக்கும் நல்ல காலகட்டம். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். தொட்டது துலங்கக்கூடிய நன்மையான காலகட்டம்.
முன்னேற்றம்
பெரிய வகையிலான சோதனைகள் எதுவும் ஏற்படாது. 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கடன் சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த சோதனைகள் பரிபூரணமாக நீங்கும். உடல்நலத்தில் இருந்து வந்த பாதிப்புகள் எல்லாம் நீங்கும். தன்னம்பிக்கையும், உற்சாகமும் பிறக்கும். நல்ல ஆரோக்கியமும், பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications