பங்குனி மாத பலன் 2026: ரிஷப ராசிக்கு பங்குனி மாதத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பார்த்து செலவு பண்ணுங்க
Panguni matha palangal 2026: மாசி மாதம் நிறைவடைந்து பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த பங்குனி மாதத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாகும். இந்தப் பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சூரியன் பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சியின் நடைபெற்று நிலையில் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். பங்குனி மாதம் பிறந்துள்ள நிலையில் சில ராசிகளுக்கு அதிகப்படியான நன்மைகள் நடக்கும்.

சூரியன் பெயர்ச்சியுடன் பிறக்கும் பங்குனி மாதம் சில ராசியினருக்கு அற்புதமான மாற்றத்தைக் கொடுக்கும். பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம், ஸ்ரீராம நவமி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், அனுமன், பெருமாள், ராமருக்கு விசேஷம் நிறைந்த மாதம். இந்த பங்குனி மாதத்தில் ரிஷப ராசிக்கான பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
ரிஷபம் ராசி பலன் (Panguni matha palangal)
ரிஷபம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு 2, 10 ஆம் இடங்கள் வலிமையாக இருக்கும் நிலையில் இந்த பங்குனி மாதம் அற்புதமாக ஆரம்பமாகியுள்ளது. ராசிநாதன் தன்னுடைய வீட்டை தொடர்பு கொள்கிறார். அங்கேயே உச்சமாகவும் இருக்கும் அமைப்பு என மாதம் முழுவதும் வலிமையாக இருக்கிறார். மாதக் கடைசியில் பங்குனி மாத 20 ஆம் தேதிக்குப் பிறகு கூடுதல் செலவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
வருமானம் பெருகும்
கூடுதல் செலவுகள் வந்தாலும் அதற்கேற்ப நல்ல வருமானங்கள் வரககூடிய மாதமாக இருக்கும். பேச்சை வைத்து தொழில் செய்வர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், மார்க்கெட்டில் துறையில் இருப்பவர்கள், செல்போன் மூலமாக பேசியே பணம் சம்பாதிப்பவர்கள் எல்லோருக்குமே இந்த மாதத்தில் நல்ல திருப்புமுனையான சம்பவங்கள் நடக்கக்கூடிய அமைப்புள்ளது.
பிரச்சனைகள் நீங்கும்
மாதத்தின் பெரும்பகுதி நாட்களில் செவ்வாய் 10 ஆம் இடத்தில் இருப்பது, அதன் பிறகு 11 ஆம் இடத்தில் வலிமையாக இருப்பது என்பது அற்புதமான காலகட்டமாக இருக்கும். வீட்டில் நிம்மதி ஏற்படும். மனைவிக்கு ஆரோக்கிய குறைவுகள் சரியாகும். கணவன் சம்பந்தப்பட்ட கவலைகள், பிரச்சனைகள் பரிபூரணமாக நீங்கும்.
பணவரவு
மனைவியின் பெயரில் தொழில் நடத்துபவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். மனைவி சார்ந்த மச்சான், மாமன் போன்ற உறவுகள் மூலமாக நல்ல வருமானங்கள், பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்படும். பெண்கள் அனைவருக்கும் குடும்பத்திலும், வேலை செய்யும் இடத்திலும் நிம்மதியான சூழல் ஏற்படும். சிலருக்குப் பண வரவுகள் கிடைக்கக்கூடிய யோகங்கள் உண்டாகும்.
வழிபாடு
11 ஆம் இடத்தில் சூரியன் இந்த மாதம் முழுவதும் வலிமையாக இருப்பதால் அம்மா, அப்பாவுடன் சுமூகமான உறவுகள் இல்லாமல் இருந்தவர்களுக்கு இனி சுமூகமான உறவு ஏற்படும். தூர இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு அதற்கான அனுமதிகள் கிடைக்கும் நல்ல மாதமாக இருக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும். முன்னேற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications