Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பங்குனி மாத ராசி பலன் 2024: வசந்த காலத்தில் கோடி கோடியாக தேடி வரும் வருமானம் யாருக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பங்குனி மாதம் வசந்த காலத்தின் தொடக்கம். தமிழ் மாதங்கள் 12ல் கடைசி மாதம். பங்குனி மாதம் முழுவதும் சூரியன் மீன ராசியில் பயணம் செய்வதால் மீன மாதம் என்று அழைக்கப்படுகிறது. சூரியன் மீன ராசியில் ராகு உடன் சஞ்சரிக்கிறார். செவ்வாய் 2 ஆம் தேதி கும்ப ராசிக்கு செல்கிறார். புதன் 12 ஆம் தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம் மாறுகிறார். 27 ஆம் தேதி வக்ரகதி அடைந்து புதன் மீன ராசிக்கு வருகிறார். குரு மேஷ ராசியில் இருக்கிறார். கும்ப ராசியில் இருக்கும் சுக்கிரன் 17 ஆம் தேதி மீன ராசிக்கு செல்கிறார். சனி கும்ப ராசியில் அமர்ந்திருக்கிறார். ராகு மீன ராசியில் பயணம் செய்கிறார். கேது கன்னி ராசியில் இருக்கிறார்.

மேஷம்: வீரத்தை அணிகலனாகக் கொண்ட செவ்வாயை அதிபதியாக பெற்றுள்ள மேஷ ராசி அன்பர்களே...
கடல் கடந்து பயணம் போவீங்க. வியாபாரத்தில் சில பிரச்சனைகளைச் சந்தித்த நீங்கள் இந்த மாத மத்தியில் மிகப்பெரிய மாற்றத்தைக் காணப் போறீங்க. போட்ட முதலுக்கு பாதகமில்லாமல் வருமானம் வருமுங்க. வங்கியில் சேமிப்பு அதிகரிக்குமுங்க. கலகலப்பான பேச்சு வார்த்தையால் உறவினர்களை ஒன்று சேர்ப்பீங்க. மற்றவர்களுக்கு உதவி செய்து நல்ல பெயர் எடுப்பீங்க. மனம் விட்டுப் பேசி குடும்பத்திலிருந்த சிக்கலைத் தீர்ப்பீங்க. அரசுப் பணியாளர்கள் திறமையாக வேலை பார்ப்பீங்க. வாகன விற்பனை அதிகரிக்குமுங்க. புதிய வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் போடுவீங்க. போட்டி பந்தயங்கள் சாதகமாக அமையுமுங்க. ஆன்லைன் ரம்மி விளையாடாதீங்க. திருச்செந்தூர் முருகனை வழிபடுங்க. தடை இல்லாமல் காரியங்கள் நடக்குமுங்க.

Panguni matha rasi palan Tamil Rasi Palan for Tamil Month of Panguni Prediction for 6 zodiac signs


ரிஷபம்: கலைநயம் மிளிரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே....
தொழிலை எப்படி நடத்தப் போகிறோம் என்று மனம் சங்கட்டப்படுவீங்க. நல்ல நண்பர்களின் ஆலோசனையால் சிக்கலில் இருந்து விடுபடுவீங்க. மனையிடம் வாங்கி மகளுக்குக் கொடுப்பீங்க. சிலர் குடும்பத்துடன் உல்லாசப் பயணம் மேற்கொள்வீங்க. ஏதாவது ஒரு எதிர்ப்பு தொழிலுக்கு உண்டாகுமுங்க. புத்திசாலித்தனத்தால் அதை முறியடிப்பீங்க. வெளிநாட்டிலிருந்து பண உதவி கிடைக்குமுங்க. மாணவர்கள் கல்வியில் அக்கறை காட்டுவீங்க. பெண்கள் பொறுப்புடன் நடந்து கொள்வீங்க. சகோதரர்கள் சலசலப்பை உண்டாக்குவாங்க. வியாபாரம் திருப்திகரமாக நடக்குமுங்க. கையிருப்பு கணிசமாக உயருமுங்க. திருத்தணி முருகனை வழிபட்டால் திருப்தி உண்டாகுமுங்க.

மிதுனம்: எதிர்ப்புகளை புத்திசாலித்தனத்தால் முறியடிக்கும் புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே...
மற்றவர்களை மட்டம் தட்ட நினைக்காதீங்க. மேலிடம் சொல்வதைக் கண்ணை மூடிக்கொண்டு கேளுங்க. பெண்களுக்கு எதிர்பார்த்த காரியம் நடக்குமுங்க. குடும்பத்தில் ஏதாவது சில்லறைச் சண்டை தோன்றுமுங்க. புதிய வீடு கட்டுவதற்கான முயற்சியில் இறங்குவீங்க. பகைவர்கள் தொல்லை நீங்குமுங்க. இனிமையாகப் பேசி வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்வீங்க. பார்ட்னர்களிடம் பக்குவமாக நடந்து அனுசரித்துச் செல்வீங்க. பணத்தைக் கையாளும் போது கவனம் தேவை. கணவன் மனைவியிடையே உறவு திருப்திகரமாக இருக்குமுங்க. எந்த ஒரு காரியமும் சுலபமாக நடக்குமுங்க. கற்பக விநாயகரை கைதொழுது நில்லுங்க. காரியசித்தி உண்டாகுமுங்க.

கடகம்: வளர்ச்சிகளை சீராக அள்ளித் தருகின்ற சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே...
அவசரப்பட்டு பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாமுங்க. கையில் வாங்கிய காசு பையில் போடும் முன் மாயமாகுமுங்க. இந்த மாத பிற்பகுதியில் தொட்ட காரியங்கள் வெற்றியடையுமுங்க. வீட்டு மனைகளைத் தாராளமாக வாங்கலாமுங்க. பங்குச்சந்தை உங்களுக்குச் சாதகமான நிலையில் உள்ளதுங்க. வெளியூர்ப் பயணங்களால் தொழிலுக்குத் தேவையான உதவிகளைப் பெறுவீங்க. குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடக்குமுங்க. நெருங்கிய நண்பருக்கு உதவி செய்வீங்க. மனைவி மக்கள் மகிழ்ச்சியாக இருப்பாங்க. பணவரவு தாராளமாக இருக்குமுங்க. பழைய கடன்களை அடைப்பீங்க. திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாளை வழிபடுங்க. திருப்பங்கள் உண்டாகுமுங்க.

சிம்மம்: அரசரைப் போல் கோலோச்சும் ஆற்றல்மிக்க சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே...
உத்தியோகத்தில் புதிய உத்திகளைக் கையாண்டு அசத்துவீங்க. மறைமுகமான எதிர்ப்புகளை முறியடிப்பீங்க. சேமிக்கும் பழக்கம் பெண்களுக்கு அதிகரிக்குமுங்க. கூடுதலான பணிச்சுமை வந்து சேருமுங்க. வாகனங்கள் வாங்கி விற்பதன் மூலம் நல்ல லாபம் பார்ப்பீங்க. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஆர்டர்கள் கைக்கு வந்து சேருமுங்க. அரசியல்வாதிகள் புகழ் அடை வீங்க. இலக்கியவாதிகளுக்குப் பாராட்டும் பெருமையும் கிடைக்குமுங்க. வேலையில் புதிய பொறுப்புகள் கிடைத்து பணிச்சுமை கூடுமுங்க. இனிமையாகப் பேசி வாடிக்கையாளர்களை இழுப்பீங்க. தொழில் வியாபாரத்தில் திடீர்ப் போட்டிகள் உருவாகலாமுங்க. வைத்தீஸ்வரனை வழிபடுங்க. வியாபார விருத்தி உண்டாகுமுங்க.

கன்னி: அறிவுத் திறனை அள்ளித்தரும் புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே...
வாக்கு வன்மையால் வழக்குகளை பேசித் தீர்ப்பீங்க. அரசாங்க ரீதியில் இருந்து வந்த தேக்க நிலை மாறுமுங்க. மேலதிகாரிகள் கொடுக்கும் வேலையை தட்டாமல் செய்து நன்மதிப்பு பெறுவீங்க. குடும்பத்தில் மங்கலகரமான நிகழ்ச்சிகள் நடக்குமுங்க. பழைய பாக்கிகளை அக்கறையோடு வசூல் செய்வீங்க. அரசாங்க ஊழியர்கள் நேர்மையாகப் பணியாற்றி பொதுமக்களின் வாழ்த்தைப் பெறுவீங்க. கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்குமுங்க. தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியுமுங்க. இரும்பு சம்பந்தப்பட்ட வேலையில் இருப்பவர்கள் கவனமாகப் பணியாற்ற வேண்டுமுங்க. ஒத்தக்கடை யோக நரசிம்ம பெருமாளை வழிபடுங்க. நோய் நொடிகள் விலகுமுங்க.

உங்கள் ஜோதிடர் கவிஞர்
அ.பெர்னாட்ஷா, காரைக்குடி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+