பங்குனி மாத ராசி பலன் 2024: மீன ராசியில் ராகு சூரியன் கூட்டணி.. தேடி வரும் குபேர யோகம் யாருக்கு?
சென்னை: பங்குனி மாதம் வசந்த காலத்தின் தொடக்கம். தமிழ் மாதங்கள் 12ல் கடைசி மாதம். பங்குனி மாதம் முழுவதும் சூரியன் மீன ராசியில் பயணம் செய்வதால் மீன மாதம் என்று அழைக்கப்படுகிறது. சூரியன் மீன ராசியில் ராகு உடன் சஞ்சரிக்கிறார். செவ்வாய் 2 ஆம் தேதி கும்ப ராசிக்கு செல்கிறார். புதன் 12 ஆம் தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம் மாறுகிறார். 27 ஆம் தேதி வக்ரகதி அடைந்து புதன் மீன ராசிக்கு வருகிறார். குரு மேஷ ராசியில் இருக்கிறார். கும்ப ராசியில் இருக்கும் சுக்கிரன் 17 ஆம் தேதி மீன ராசிக்கு செல்கிறார். சனி கும்ப ராசியில் அமர்ந்திருக்கிறார். ராகு மீன ராசியில் பயணம் செய்கிறார். கேது கன்னி ராசியில் இருக்கிறார். இந்த கிரகங்களின் மாற்றங்களினால் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம்,கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
துலாம்: தர்ம அதர்மங்களுக்கு ஏற்ப பலன்தரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே...
உங்கள் கோபத்தைத் தூண்ட மற்றவர்கள் முயற்சி செய்வாங்க. அதற்கு இடம் கொடுக்காதீங்க. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் அன்பாகப் பழகுவது நல்லதுங்க. பிள்ளைகள் உங்களுடைய ஆலோசனையைக் கேட்டு நடந்து கொள்வாங்க. வியாபாரம் முன்னேற்றமாக நடக்குமுங்க. நடைபாதை வியாபாரிகளுக்கு இது யோகமான காலகட்டமுங்க. ஏற்றுமதி இறக்குமதி தொழில் கணிசமான லாபத்தைக் கொண்டு வருமுங்க. கடினமாக வேலை செய்து காரியத் தடைகளை தகர்த்தெறிவீங்க. பொதுநலப் பணிகள் மூலம் மரியாதையும் அந்தஸ்தும் அதிகரிக்குமுங்க. வியாபாரம் தொடர்பான பயணங்கள் நல்ல லாபத்தைக் கொடுக்குமுங்க. மருதமலை முருகனை வழிபடுங்க. துரிதமாகக் காரியங்கள் நடக்குமுங்க.

விருச்சிகம்: போர்க்குணம் கொண்ட பூமிகாரகன் செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே...
உங்களின் அன்பான நடவடிக்கையால் குடும்பத்திலுள்ளவர்களை சந்தோஷப்படுத்துவீங்க. புதிய நண்பர்கள் பழக்கம் ஏற்படுமுங்க. அவர்கள் மூலமாக தொழிலுக்குத் தேவையான உதவி கிடைக்குமுங்க. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தோடு வேலை செய்வீங்க. சிலருக்கு பதவி உயர்வோ புதிய பொறுப்போ கிடைக்கலாமுங்க. கமிஷன் வியாபாரங்களில் கணிசமான லாபம் பார்ப்பீங்க. பொருட்களை வாங்கி வைத்து விற்பதன் மூலம் பெரும் பணம் கிடைக்குமுங்க. சகோதரர் வழியில் ஏதாவது பிரச்சனை உண்டாகலாமுங்க. அதையும் அனுசரணையோடு தீர்த்து வைப்பீங்க. மதுரை மீனாட்சி அம்மனை மனதால் வழிபடுங்க. துரத்தும் துயரங்கள் மறைந்து போகுமுங்க.
தனுசு: வினைப்பயனை அறுக்கின்ற வியாழ பகவானை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே...
ஒரு முடிவை எடுக்கும் முன்னதாக இரு முறை ஆலோசனை செய்து கொள்ளுங்க. இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தை எளிதாக முடிப்பீங்க. இந்த மாத வாஸ்து நாளில் புதிய வீடு கட்டுவதற்கான பூஜை போடுவீங்க. எதிர்பார்த்த வங்கி லோன் தடையில்லாமல் வந்து சேருமுங்க. முடங்கிக் கிடந்த காரியங்கள் வேகமெடுக்குமுங்க. இரவு பகல் பார்க்காமல் வேலை பார்த்து தொழிலில் முன்னேற்றம் காண்பீங்க. அரசாங்க பொதுப்பணி வேலைகளில் ஒப்பந்தம் பெறுவீங்க. வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வருமுங்க. உறவினர்களை மகிழ்ச்சிப்படுத்த ஆடம்பரமாகச் செலவு செய்வீங்க. பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தியை வழிபடுங்க. தொட்ட காரியம் துலங்குமுங்க.
மகரம்: வியூகங்கள் மூலம் வெற்றிகளை காணும் மந்தனின் ஆதிக்கம் கொண்ட மகர ராசி அன்பர்களே....
வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்படுமுங்க. வேலை பார்த்த இடத்தில் சுமத்தப்பட்ட வீண் பழி அகலுமுங்க. தொழிலை விரிவாக்கம் செய்ய பெருமுயற்சி எடுத்துக் கொள்வீங்க. குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு அனுசரணையாக நடந்து மகிழ்ச்சியை ஏற்படுத்துவாங்க. உங்கள் பேச்சுக்கு மரியாதை கிடைக்குமுங்க. முதலாளி கோபித்துக் கொள்கிறார் என்று அவசரப்பட்டு வேலையை விட்டுவிட வேண்டாமுங்க. வரன் தேடுவோருக்கு இந்த காலகட்டத்தில் கைகூடிவருமுங்க. திருமணப் பேச்சுவார்த்தை தடையின்றி நடக்குமுங்க. காண்ட்ராக்ட் தொழில் மூலம் கணிசமான லாபம் பார்ப்பீங்க. கடந்த காலங்களில் இருந்த மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்குமுங்க. ஆஞ்சநேயர் பெருமானை வழிபடுங்க. அவஸ்தைகள் நீங்குமுங்க.
கும்பம்: சாணக்கியத்தனத்தால் சாதனை புரியும் சனிபகவானை அதிபதியாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே...
ஆன்மீகச் சிந்தனைகள் மனதில் அதிகரிக்குமுங்க. முக்கிய நபரின் அறிமுகத்தால் அரசாங்க வேலை நடக்குமுங்க. பணவரவு அதிகரித்து பழைய கடன்களை அடைக்கும் சூழ்நிலை உருவாகுமுங்க. குடும்பத்தினருடன் கோடை வாச ஸ்தலங்களுக்குச் செல்வீங்க. கடுமையாகப் படித்து கல்வியில் வெற்றி பெற மாணவர்கள் துடிப்புடன் செயல்படுவீங்க. வீட்டில் உள்ளவர்களுக்கு விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சிப்படுத்துவீங்க. தொழில் வியாபாரம் நல்ல நிலைக்கு உயருமுங்க. வீடு வாகனம் வாங்கும் யோகம் சித்திக்குமுங்க. சகோதரர்கள் பக்கபலமாக இருப்பாங்க. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படலாமுங்க. திருநள்ளாறு தர்ப்பாரண்ய ஈஸ்வரரை வழிபடுங்க. நினைப்பது நிறைவேறுமுங்க.
மீனம்: பார்வையால் பலன்களை அள்ளித்தரும் குரு பகவானை அதிபதியாகக் கொண்ட மீனராசி அன்பர்களே...
வாகனங்களில் செல்லும்போது கவனச்சிதறல் ஏற்படக்கூடாதுங்க. கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டுமுங்க. கைத்தொலைபேசியை காதில் ஒட்ட வைத்துக் கொள்ளாதீங்க. விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதுங்க. பெண்கள் புத்திசாலித்தனமாக குடும்பத்தை நடத்துவீங்க. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாகப் பணிகளை முடிப்பீங்க. வேலை அலைச்சல் காரணமாக நேரம் தவறி உணவு உண்ண வேண்டியிருக்குமுங்க. அடுத்தவர் மேல் அதிக நம்பிக்கை வைக்க வேண்டாமுங்க. நெருங்கிய நண்பராக இருந்தாலும் கைப்பொருளை யோசித்துக் கொடுங்க. ஆண் பெண்கள் இருபாலினரும் எல்லை தாண்டிப் பழகாதீங்க. அதனால் அவமானம், தலைகுனிவு ஏற்படலாமுங்க. திருமோகூர் காளமேகப் பெருமாளை வழிபடுங்க. கவலைகள் விலகி மகிழ்ச்சி கூடுமுங்க.
உங்கள் ஜோதிடர் கவிஞர்
அ.பெர்னாட்ஷா, காரைக்குடி..
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications