Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பங்குனி மாதத்தில் சூரிய கிரகணம்.. மீன ராசியில் 4 கிரகங்கள் கூட்டணி.. யாரெல்லாம் கவனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நவகிரகங்களின் தலைவனான சூரியன், ஆசிரியராகிய குரு பகவானின் வீட்டில் அதாவது, மீனத்தில் சஞ்சரிக்கும் மாதம் பங்குனி மாதம். மீன ராசியில் ராகு உடன் சூரியன், சந்திரன், சுக்கிரன் இணைந்து பயணம் செய்யப்போகும் இந்த மாதத்தில் சூரிய கிரகணம் நிகழப்போகிறது. மீன ராசியில் 4 கிரகங்கள் சேர்க்கையால் என்னென்ன பலன்கள் யாருக்கு கிடைக்கப்போகிறது. யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

சூரிய கிரகணம்: பங்குனி மாதம் 26ஆம் தேதி ஏப்ரல் 8ஆம் தேதி திங்கட்கிழமை இரவு சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இந்திய நேரப்படி இரவு நேரத்தில் நிகழும் சூரிய கிரகணம் என்பதால் இங்கு தெரியாது. ராகு உடன் சூரியன் சந்திரன் இணைந்து ராகு கிரஹஸ்த சூரிய கிரகணம் நிகழப்போகிறது.

Panguni matha rasi palan Tamil Solar Eclipses 4 Planets Conjunction in Meenam rasi Prediction for 12 zodiac signs

மேஷம்: சூரியன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அப்பாவுக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.
புதன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுக்காக செலவுகள் அதிகரிக்கும், ஷேர் மார்க்கெட் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. அஷ்டலட்சுமி கடாட்சம் உண்டாகும். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பை எற்படுத்தி கொடுக்கும். படிப்புக்காக சிலர் வெளிநாடு செல்வார்கள். பணவரவு அதிகரித்தாலும் விரைய ஸ்தானத்தில் சுக்கிரன் பயணம் செய்வதால் வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவார்கள். வாழ்க்கை துணையுடன் அந்நியோன்னியம் அதிகரிக்கும். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள்.

ரிஷபம்: அரச கிரகமான சூரியன் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் ராகு, சுக்கிரன், சந்திரன் உடன் இணையப்போவதால் இந்த மாதம் தனியார் மற்றும் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அதிகரிக்கும், வீட்டு வாடகை மூலம் பண வரவு உண்டாகும். பிதுரார்ஜித சொத்திலிருந்து பங்கு கிடைக்கும், தொழில் நுட்ப கல்வியில் மேன்மை நிலை உருவாகும். தரகு கமிஷன் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும், குடும்ப வருமானம் அதிகரிக்கும்.

மிதுனம்: அரச கிரகமான சூரியன் உடன் ராகு, சுக்கிரன், சந்திரன் கூட்டணி சேருகின்றன. தொழில் ஸ்தானமான பத்தாமிடத்தில் கிரகங்கள் கூட்டணி சேருவதால் அபரிமிதமான பலன்கள் கிடைக்கப்போகிறது. மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். செல்வம், செல்வாக்கு புகழ் கூடும். செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களின் செயல்கள் மனகஷ்டத்தை கொடுக்கும், வாகன போக்குவரத்தில் மிகவும் கவனமாக இருக்கவும். உங்கள் ராசிநாதன் புதன் பத்தாமிடத்தில் செயல்கள் எல்லாம் வெற்றி பெறும், சொந்தமாக செய்யும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

கடகம்: உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானத்தில் ராகு உடன் சூரியன், சந்திரன், சுக்கிரன் சேரப்போகின்றன. நான்கு கிரகங்கள் கூட்டணி சேருவதால் அந்த நாளில் சூரிய கிரகணமும் உருவாகிறது. நீங்கள் செய்யும் தொழிலில் முதலீடுகள் அதிகரிக்கும், தொழில் சம்பந்தமாக வெளிநாடு செல்லும் நிலை உண்டாகும். ரியல் எஸ்டேட் தொழிலில் மேன்மை நிலை உண்டாகும், புதிதாக வீடு நிலம் வாங்குவீர்கள். புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாட்டு தொழில் தொடர்புகள் நல்ல லாபத்தைக் கொடுக்கும், உயர் கல்வியில் மேன்மை நிலை உண்டாகும். நீண்ட பயணத்திற்கு வாய்ப்பு உண்டு. குடும்பத்தோடு சுற்றுலா சென்று வரலாம். காதலி நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கும் காலம் இது.

சிம்மம்: உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு எட்டாமிடத்தில் ராகு உடன் இணையப்போகிறார். அஷ்டம ஸ்தானத்தில் நான்கு கிரகங்கள் இணைந்து பயணம் செய்யப்போவதால் அலுவலகத்தில் வேலையில் மனம் ஈடுபாடு இருக்காது. எதிலும் வெற்றி கிடைக்கும். உடன் பிறப்புகளுடன் சச்சரவு உண்டாகும், கூர்மையான பொருட்களால் காயம் ஏற்படும் கவனம் தேவை. புதன் எட்டாமிடத்திற்கு வரப்போவதால் தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகும், சூரிய கிரகணம் நாளில் சிம்ம ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

கன்னி: அரசு கிரகமான சூரியன் ஏழாமிடத்தில் ராகு, சுக்கிரன், சந்திரன் உடன் சேரப்போகிறார். அரசு வேலைக்காக வெளியூர் செல்லும் நிலை உண்டாகும், அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத் தொழில் சிறப்படையும். செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளால் சந்தோஷம் உண்டாகும். சிறு உல்லாசப் பயணம் செல்வீர்கள். உச்சமடைந்த சுக்கிரன்.. நீச்ச பங்க ராஜயோகம் பெற்ற புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும், தாய் மாமனின் உதவி கிடைக்கும். தொழில் விசயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும் எதையும் எழுத்துப்பூர்வமாகவே ஹேண்டில் செய்யுங்கள். 4 கிரகங்களின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்படும் கவனம் தேவை.

துலாம்: அரசு கிரகமான சூரியன் ஆறாமிடத்தில் ராகு, சுக்கிரன், சந்திரன் உடன் பயணம் செய்யும் காலத்தில் சிறு உல்லாசப் பயணம் செல்வீர்கள். கண் நோய்களை கவனமாக கையாளுங்கள். புதிதாக வண்டி வாகனம் வாங்குவீர்கள். நல்ல செய்திகள் தேடி வரும். ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் கவனம் தேவை, எதிரிகள் பிரச்சினை, வம்பு வழக்குகளில் கவனம் தேவைப்படும். பணியிடங்களில் கடும் உழைப்பை கொடுக்க வேண்டிய காலமிது. கவலைகள், சங்கடங்கள் சூழும் காலமிது

விருச்சிகம்: பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நான்கு கிரகங்கள் கூட்டணி சேருகின்றன. சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன், சந்திரன் உடன் பயணம் செய்வதால் கல்வி பயிலும் மாணவர்களுக்குத் தேர்வில் மதிப்பெண் அதிகரிக்கும், நுண்கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். புதிதாக வண்டி வாகனம் வாங்குவீர்கள். நிலம் வீடு வாங்கலாம் லாபம் கிடைக்கும். ஊக வணிகம் சிறப்படையும், புத்திக் கூர்மை அதிகரிக்கும். மாணவர்கள் உயர்கல்விகாக எழுதும் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். அரசாங்க துறையிலும் வேலை வாய்ப்பில் பதவி உயர்வு கிடைக்கும்.

தனுசு: சூரியன் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் ராகு, சந்திரன், சுக்கிரன் உடன் பயணம் செய்யும் காலத்தில் அரசாங்க ஒதுக்கீட்டில் வீடு நிலம் வாங்கும் யோகம் வரும். அரசு வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும் திருமணப்பேச்சுவார்த்தையில் வெற்றி கிடைக்கும். தேவையற்ற வீண் பேச்சினை தவிர்க்கவும், வாயை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டாகும், தாய் மாமனின் உதவி கிடைக்கும். தாயாரின் உடல் நலத்தில் சற்றே கவனம் வைக்க வேண்டிய நேரமிது. மனைவி குழந்தைகளினால் மகிழ்ச்சி ஏற்படும். சிவபெருமான் பார்வதியை பச்சரிசி கொண்டு வணங்கலாம்

மகரம்: சூரியன் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் ராகு, சந்திரன், சுக்கிரன் உடன் கூட்டணி சேரப்போவதால் அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை ஏற்படும், அலுவலகத்திலிருந்து நல்ல தகவல் வரும். கோபத்தை கட்டுப்படுத்தவும் வீண் பேச்சினை தவிர்க்கவும். பேச்சில் கவனம் தேவை. தகவல் தொடர்பு சிறப்படையும், வியாபார வாடிக்கையாளர்களுடன் நல்லுறவு நீடிக்கும். உடல் நலத்தில் சின்னச் சின்ன பாதிப்புகள் ஏற்படும். எனவே அவ்வப்போது கவனம் தேவை. சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும் வாகன பயணத்தில் கவனமும் நிதானமும் தேவைப்படும்.

கும்பம்: சூரியன் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் ராகு, சந்திரன் அரசாங்க அதிகாரிகளால் நன்மை உண்டாகும், அரசாங்கத்திடமிருந்து வர வேண்டிய பணம் கைக்கு கிடைத்து விடும். செவ்வாய் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் பழைய வீட்டை விற்றுவிட்டு புது வீட்டை வாங்குவீர்கள் அல்லது பழைய வீட்டை புதுப்பீர்கள். 24ஆம் தேதிக்குப் பின்னர் பேச்சில் கோபத்தை குறைத்துக்கொள்ளவும். வீண் வாக்குவாதம் தவிர்க்கவும். வாக்கு வன்மை அதிகரிக்கும், பேச்சில் நகைச்சுவை உணர்வு அதிகரிக்கும்.
சூரிய கிரகண நாளில் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை.

மீனம்: சூரியன் உங்களுடைய ஜென்ம ராசியில் ராகு, சந்திரன்,சுக்கிரன் உடன் பயணம் செய்யப்போவதால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும். பதவி உயர்வு தேடி வரும் அதிகாரம் மிக்க பதவியில் அமரப்போகிறீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும், வங்கி சேமிப்பு உயரும். ஜென்ம ராசியில் 4 கிரகணங்கள் இணைவதால் மதி நுட்பம் அதிகரிக்கும். சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். எதிலும் அகலக்கால் வைக்க வேண்டாம். தொழில் வியாபாரத்தில் முதலீடு செய்யும் முன்பாக முன்யோசனை அவசியம். சூரிய கிரகண நாளில் புதிய தொழில் தொடங்குவது தொடர்பான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+