Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிலவ வருட தமிழ் புத்தாண்டு ராசி பலன் 2021: தனுசு, மகரம், கும்பம், மீன ராசிக்காரர்களுக்கு ராஜயோகம்

பிலவ தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி பிறக்கப்போகிறது. இந்த தமிழ் புத்தாண்டில் தனுசு,மகரம், கும்பம்,மீன ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மங்களகரமான பிலவ ஆண்டு சித்திரை 1ஆம் தேதி புதன்கிழமை சுக்கிலபட்சம் துவிதியைத் திதி பரணி நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபயோக சுப தினத்தில் பிறக்கிறது. பிலவ ஆண்டு பிறக்கும் போது மேஷ ராசியில் ராஜ கிரகமான சூரியன் உச்சம் பெற்றிருக்க கூடவே சுக்கிரன், சந்திரன் இணைந்துள்ளனர். ரிஷபத்தில் செவ்வாய் ராகு, விருச்சிகத்தில் கேது, மகரத்தில் சனி, கும்ப ராசியில் குரு, மீன ராசியில் புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் தனுசு,மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு பிலவ வருடத்தில் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

சார்வரி வருடம் பலருக்கும் கொரோனா அச்சத்துடன் கடந்து விட்டது. இந்த பிலவ ஆண்டிலாவது மன அழுத்தம் நீங்கி மகிழ்ச்சி கிடைக்குமா என்று பலரும் நினைக்கலாம். நல்ல வேலை கிடைக்க வேண்டும், திருமண யோகம் அமைய வேண்டும் என்றும் பலரும் இறைவனை வேண்டிக்கொண்டிருக்கின்றனர்.

நவ கிரகங்களின் சஞ்சாரம், கிரகங்களின் கூட்டணி, பார்வையால் பிலவ ஆண்டில் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு ராஜயோகங்கள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது.

தனுசு

தனுசு

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு பிலவ வருடத்தில் ஆரம்பமே அமர்களம் என்பது போல இருக்கிறது. உங்கள் ராசி அதிபதி குரு பகவான் மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். கஷ்டங்கள் கவலைகள் மாறக்கூடிய காலம் வந்து விட்டது. ஏழரை சனியில் பாத சனி நடைபெறுகிறது என்றாலும் சனியால் ஏற்படும் சங்கடங்கள் நீங்கும். கடன், நோய், வம்பு வழக்குப் பிரச்சினைகள் நீங்கும். ஆரோக்கியமான நோயற்ற வாழ்க்கை உண்டாகும். எதிரிகள் தொந்தரவு நீங்கும். ஆண்டு பிறக்கும் போது பாக்யாதிபதி சூரியன் உச்சம் பெற்றிருப்பதால் நிறைய பாக்கியங்கள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. திருமண யோகம் கை கூடி வரும். திருமணம் முடிந்தவர்களுக்கு புத்திரபாக்கியம் கை கூடி வரும். வேலை இழந்து தவிப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.

மகரம்

மகரம்

சனிபகவானை ராசி நாதனாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே பிலவ ஆண்டு பிறக்கும் போது உங்களுக்கு நவ கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. ஏழரை சனி காலமாக இருக்கிறதே என்று கவலைப்பட தேவையில்லை. காரணம் இரண்டாவது வீடான தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சுக கிரகமான குரு அதிசாரமாகக் குடியேறியுள்ளார். சூரியன் சுக ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். சுக்கிரனும் உச்ச சூரியனுடன் இணைந்திருப்பார். தொழில் ஜீவன அமைப்பு நன்றாக உள்ளது. வேலையிழப்பு ஏற்பட்டவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நல்ல காரியங்கள் நடைபெறுவதற்கான அம்சங்கள் நிறைந்துள்ளன. உறவுகள், நட்புகளால் சில சங்கடங்கள் வந்தாலும் அதை எளிதாக அடையாளம் கண்டு கொள்வீர்கள். சனிபகவான் இந்த ஆண்டில் சில படிப்பினைகளை கொடுத்து விட்டு செல்வார். இந்த ஆண்டு எத்தகைய பாதிப்புகள் வந்தாலும் அதை எளிதில் எதிர்கொள்வீர்கள். பிலவ ஆண்டு நன்மைகள் அதிகம் நிறைந்த ஆண்டாக உள்ளது.

கும்பம்

கும்பம்

சனிபகவானை ராசி நாதனாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே பிலவ வருடம் பிறக்கும் போதே உங்கள் ராசிக்கு ஜென்ம ஸ்தானத்தில் குரு சஞ்சரிக்கிறார். விரைய ஸ்தானத்தில் ராசி அதிபதி சனிபகவான் ஆட்சி பெற்று வலுவான நிலையில் சஞ்சரிக்கிறார். தன வருமானம் அதிகரிக்கும் கூடவே வரவுக்கு மீறிய செலவு ஏற்படும். சுப விரைய செலவுகளாக மாற்றுங்கள். கடன் பிரச்சினைகள் நீங்கும் அளவிற்கு பொருளாதார வரவு அதிகரிக்கும். எதையும் எளிதாக சமாளிக்கும் தைரியம் பிறக்கும். கணவன் மனைவி உறவில் இருந்த சிக்கல்கள் நீங்கும். திருமண சுப காரியங்கள் நடைபெறும். காதல் திருமணம் நடைபெறும். பிள்ளைகளினால் சந்தோஷம் அதிகரிக்கும். பிறந்த ஜாதகத்தில் சனி நல்ல நிலையில் இருந்து தசாபுத்தி நடக்கும் பட்சத்தில் நிறைய நன்மைகள் நடைபெறும். சுப காரியங்கள் தடைகள் இன்றி நடைபெறும். தடைகளைத் தாண்டி இந்த ஆண்டு முன்னேற்றம் உண்டாகும்.

மீனம்

மீனம்

குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே. பிறக்கப் போகும் பிலவ வருட தமிழ் புத்தாண்டு அற்புதமான யோகங்களைத் தரப்போகிறது. ராஜகிரகங்கள் அற்புதமான நிலையில் உள்ளன. சூரியன் சுக்கிரன் இரண்டாம் வீட்டில் பயணிக்கின்றனர். செவ்வாய் பகவானுக்கு குருவின் பார்வை கிடைப்பது சிறப்பம்சம். ராசி நாதன் குரு பகவான் புது வருடத்தில் முதல் ஐந்து மாதங்கள் விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். திடீர் சுப விரைய செலவுகள் ஏற்படும். பிள்ளைகளுக்கு திருமண சுபகாரியம் நடைபெறும். ஆவணி மாதத்தில் மீண்டும் குரு சனியோடு மீண்டும் இணைந்து லாப ஸ்தானத்தில் பயணிப்பார். தொழில் முன்னேற்றம் உண்டாகும். சவால்களை சாதனையாக மாற்றுவீர்கள். ராகுவின் பயணமும் உங்களுக்கு நிறைய லாபத்தை தரப்போகிறது. இந்த பிலவ ஆண்டு புத்துணர்ச்சியையும் உற்சாகத்தையும் தரப்போகிற ஆண்டாக அமைந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+