Dhanusu Rasi Palan: தனுசு ராசிக்கு குருவின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம்.. வேலையை விட்டுடாதீங்க

Subscribe to Oneindia Tamil

புரட்டாசி மாத பலன்: ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் தொடங்கவுள்ளது. இந்த புரட்டாசி மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. கன்னி ராசிக்கு சூரியன் செல்லக்கூடிய மாதமான இந்த புரட்டாசி மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாகும். இந்த பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். ஆவணி மாதம் முடிந்து புரட்டாசி மாதம் தொடங்கவுள்ளது. கன்னி ராசியில் சூரியன் வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம். செப்டம்பர் 17 ஆம் தேதி இந்த பிரவேஷம் நடக்கிறது.

purattasi-maatha-palan-what-kind-of-benefits-and-fortunes-will-get-dhanusu-rasi-people-in-this-mont

சூரியனும் புதனும் இணைந்து இந்த புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் அமர்கின்றனர். சுக்கிரன், கேது பஞ்சம ஸ்தானம் எனும் சிம்ம ராசியில் அமர்ந்திருக்கின்றனர். சனி வக்கிரம் பெற்று சனி வக்கிரப் பார்வையால் சூரியனும், புதனும் மாட்டிக் கொள்ளும் சூழல் உள்ளது. சூரியனால் சனி பாதிக்கப்படும் நிலை உள்ளது. குரு மிதுனத்திலும், ராகு கும்பத்திலும் அமர்ந்திருக்கின்றனர்.

புதன் என்றால் பெருமாள். புரட்டாசி மாதத்தில் பசு மாடுகளுக்கு, மீன்களுக்கு அன்னதானம் கொடுப்பது அற்புதமான பலன்களைத் தரும். சனிக்கிழமை தோறும் விரதம் இருப்பது நன்மை பயக்கும். இந்த புரட்டாசி மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தனுசு

தனுசு ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. வேலையை விட்டு விடாமல் இருப்பது நல்லது. குரு பார்வையில் இருக்கும் வரை உங்களுக்கு எந்தவித பிரச்சனையும் வராது. நல்ல வாய்ப்புகள் தேடி வரும். நிறைய பிரச்சனைகள் தீரும் காலகட்டமாக இருக்கும். தேவையில்லாத அதீத பயம் இருக்கும். ஆனால், ஒரு பாதிப்பும் நடக்காது.

மேலதிகாரியால் பிரச்சனை

தொழில் ஸ்தானத்தில் 10 ஆம் இடத்தில் சூரியன், புதன் அமர்ந்திருக்கின்றனர். சனி வக்கிரப் பார்வையில் இருக்கிறார். உங்களுடைய மேலதிகாரி டாக்சிக்கான நபராக இருப்பார். சனி வக்கிரப் பார்வையில் இருப்பதால் வன்மத்தினால் அடி வாங்கும் நிலை உண்டாகும். வேலையில் பயங்கரமான டார்ச்சர்களை அனுபவிப்பீர்கள். கால் தொடையில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

ஆரோக்கியம்

மாமியார், தந்தையின் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் வரும் தன்மை உண்டு. பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன், கேது இருப்பதால் உடலில் அமிலத் தன்மை உண்டாகும். ரத்தத்தில் சர்க்கரை பாதிப்பு, குறை சர்க்கரை, வண்டி வாகனங்களில் பழுது, கிட்னியில் கல், சிறுநீரகப் பிரச்சனை போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது. இந்த ஒரு மாதம் தனுசு ராசியினர் கவனமாக இருப்பது நல்லது.

குரு பார்வை

தனுசு ராசிக்காரர்களுக்கு பொதுவாக ராசி, லக்கினத்துக்கே குரு பார்வை இருப்பதால் பெரிய பாதிப்புகள் எதுவும் உங்களுக்கு வராது. நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். 2026 ஜூன் மாதம் வரை அற்புதமான காலகட்டமாக இருக்கும். குரு வக்கிரமாகும்போது கோடீஸ்வர யோகம் உண்டாவதற்கான வாய்ப்புள்ளது. 2 கிரக சேர்க்கைகள் இந்த புரட்டாசி மாதத்தில் நன்றாக இல்லை என்பதால் சிறிது கவனமாக இருப்பது நல்லது.

வழிபாடு

ரங்கநாதர், தாயாரை வழிபாடு செய்வது உங்களுக்கு நல்ல மாற்றத்தையும் ஏற்றத்தையும் ஏற்படுத்தும். சந்தோஷம், பொருளாதாரம் ரீதியாக 80 சதவீதம் நன்றாக உள்ளது. முன்னேற்றம் பெறும் யோகம் உண்டாகும். சுக்கிரன், கேது இணைவதால் வண்டி, வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனமாக செல்வது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+