Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rasi Palan: புரட்டாசியில் 3 ராசியினருக்கு ஆரோக்கியத்தில் காத்திருக்கும் ஆபத்து.. முழு விவரம் இதோ

Subscribe to Oneindia Tamil

புரட்டாசி மாத பலன்: ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளது. இந்த புரட்டாசி மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறவுள்ளன. கன்னி ராசிக்கு சூரியன் செல்லக்கூடிய மாதமான இந்த புரட்டாசி மாதத்தில் ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும் ராசிகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாகும். இந்த பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். ஆவணி மாதம் முடிந்து புரட்டாசி மாதம் தொடங்கவுள்ளது. கன்னி ராசியில் சூரியன் வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம். செப்டம்பர் 17 ஆம் தேதி இந்த பிரவேஷம் நடக்கிறது.

purattasi-maatha-palan-which-3-zodiac-peoples-should-be-careful-during-this-purattasi-month

சூரியனும் புதனும் இணைந்து இந்த புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் அமர்கின்றனர். சுக்கிரன், கேது பஞ்சம ஸ்தானம் எனும் சிம்ம ராசியில் அமர்ந்திருக்கின்றனர். சனி வக்கிரம் பெற்று சனி வக்கிரப் பார்வையால் சூரியனும், புதனும் மாட்டிக் கொள்ளும் சூழல் உள்ளது. சூரியனால் சனி பாதிக்கப்படும் நிலை உள்ளது. குரு மிதுனத்திலும், ராகு கும்பத்திலும் அமர்ந்திருக்கின்றனர்.

புதன் என்றால் பெருமாள். புரட்டாசி மாதத்தில் பசு மாடுகளுக்கு, மீன்களுக்கு அன்னதானம் கொடுப்பது அற்புதமான பலன்களைத் தரும். சனிக்கிழமை தோறும் விரதம் இருப்பது நன்மை பயக்கும். இந்த புரட்டாசி மாதத்தில் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் இந்த புரட்டாசி மாதத்தில் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தொழில் ரீதியாக இருந்த பழைய எதிரிகள் தொந்தரவுகள் அனைத்தும் நீங்கும். வழக்குப் போன்ற பிரச்சனைகள் உங்களுக்கு சாதகமாக முடியும். அரசுத் துறை, அரசியல்வாதிகள் புதிய பொறுப்புகளுக்கு வருவார்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் ஒன்றன்பின் ஒன்றாக வரும். வியாபாரத்தில் இருந்த பாதிப்புகள் பரிபூரணமாக நிவரத்தியாகும்.

நீண்ட நாட்களாக தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்த விஷயங்கள் எல்லாம் நிவர்த்தியாகும். வேலையை விட்டுவிட்டு சொந்த தொழிலுக்கு மாறும் அமைப்பு உள்ளது. தனிப்பட்ட முறையில் செல்வாக்கு அதிகரிக்கும் அற்புதமான காலகட்டம். பண வரவு அதிகரிக்கும். பெரிய காரியங்களை எல்லாம் எளிமையாக செய்து முடிப்பீர்கள்.

இந்த காலகட்டத்தில் தோல்பட்டை வலி, தலைச் சுற்றல், கை கால்களில் சுழுக்கு ஏற்படுவது போன்றவற்றில் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. சிறுநீரகக் கோளாறு, உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. துர்க்கை வழிபாடு செய்வது மேன்மையை ஏற்படுத்தும். பசு மாடுகளுக்கு உணவு தானம் அளிப்பது மாற்றத்தையும், ஏற்றத்தையும் கொடுக்கும்.

சிம்மம்

சிம்ம ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. சுக்கிரனும், கேதுவும் ராசி லக்கினத்தில் இணைவதால் சளி பிரச்சனை அதிகமாக இருக்கும். எந்த ஆட்களுடன் பேசக்கூடாதோ அவர்களுடன் பேசும் நிலைமை ஏற்படும். ஆண்களாக இருந்தால் தவறான உறவுகள் உண்டாகும் வாய்ப்புள்ளது. பெண்களுக்கு ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மற்றவர்களை நம்பி மோகத்தில் சிக்கும் சூழல் உள்ளது.

2, 8க்கு உரிய பாவங்களில் கெட்ட கிரகங்களின் பார்வை இருந்தால் குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளதால் கவனமாக இருப்பது நல்லது. இதில் ஒரு அதிர்ஷ்டம் என்றால் லாபத்தில் குரு அமர்ந்திருப்பதுதான். பெரிய வெற்றி, விடிவுகாலம் அதுதான்.

ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சிறுநீரகக் கோளாறு, உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்ய செய்ய அற்புதமான நற்பலன்களைப் பெறுவீர்கள். சந்தோஷம் ரீதியாகவும், பொருளாதாரம் ரீதியாகவும் 70 சதவீத நன்மைகளும் கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படும். குரு பார்வை இருப்பதால் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. கால் தொடையில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. மாமியார், தந்தையின் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் வரும் தன்மை உண்டு. பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன், கேது இருப்பதால் உடலில் அமிலத் தன்மை உண்டாகும்.

சிறுநீரகக் கோளாறு, உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ரத்தத்தில் சர்க்கரை பாதிப்பு, குறை சர்க்கரை, வண்டி வாகனங்களில் பழுது, கிட்னியில் கல், சிறுநீரகப் பிரச்சனை போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது. இந்த ஒரு மாதம் தனுசு ராசியினர் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. ரங்கநாதர், தாயாரை வழிபாடு செய்வது உங்களுக்கு நல்ல மாற்றத்தையும் ஏற்றத்தையும் ஏற்படுத்தும். சுக்கிரன், கேது இணைவதால் வண்டி, வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனமாக செல்வது நல்லது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+