சிம்ம ராசிக்கு இனி எல்லாமே ஜெயம்தான்.. புரட்டாசியில் பணவரவு, வெற்றி தூள் கிளப்பும் காலம்!

Subscribe to Oneindia Tamil

புரட்டாசி மாத பலன்: கன்னி ராசிக்குள் சூரியன் வரக்கூடிய இந்த புரட்டாசி மாதத்தில் சிம்ம ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கன்னி ராசியில் சூரியன் அமர்ந்திருக்கும் மாதமே புரட்டாசி மாதமாகும். இது கன்னியா மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சூரியனுடைய வலிமை இந்த மாதத்தில் குறைந்து காணப்படும். வெயிலும், மழையும் மாறி மாறி காணும் காலம் என்பதால் இந்த மாதத்தில் அசைவம் தவிர்க்கப்படுகிறது.

purattasi-matha-palan-simmam-rasi-to-see-career-growth-financial-gains-and-property-luck

கிரகங்களின் தலைவன் என்று அழைக்கப்படக்கூடிய சூரியன் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகி உள்ளார். அக்டோபர் 17 ஆம் தேதி வரை சூரியன் சஞ்சரிக்கும் இந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் பல்வேறு வகையில் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், வேலை, தொழிலில் ஏற்படும் மாற்றங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் பயணிப்பதால் நிறைய மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும் அமைப்பு. சுக்கிரன் மூன்றாம் இடத்திலேயே அமர்ந்திருப்பதால் விலை உயர்ந்த பொருள்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். விருந்தினர், நண்பர்கள் வருகை அதிகரிக்கும். வீடு கலகலப்பாக மாறும்.

அறிவுத்திறன் கூடும்

தனாதிபதியாக இருக்கக்கூடிய புதன் இந்த புரட்டாசி மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் பண வரவு அற்புதமாக இருக்கும். பணம் சார்ந்த எல்லா பிரச்சனைகளையும் சமாளிப்பீர்கள். ராசிநாதன் சூரியன் கடந்த ஒரு மாதகாலமாக கேதுவுடன் சிக்கியிருந்ததால் அவ்வப்போது உடல்நலக் குறைபாடு ஏற்பட்டிருந்திருக்கும். இப்போது கேது விலகி 2 ஆம் வீட்டுக்குள் புதனுடன் வந்து அமர்கிறார். அறிவுத்திறன் கூடும்.

பண வரவு

எல்லா வகையிலும் சாதுரியமாக பேசுவீர்கள். செயல்படத் தொடங்குவீர்கள். எதிர்பார்த்த பண வரவு உண்டு. தனிப்பட்ட முறையில் செல்வாக்கு அதிகரிக்கும். எங்கு சென்றாலும் எடுத்த காரியங்களில் வெற்றி பெறக்கூடிய யோகம் ஏற்படும். செவ்வாய் இதுவரை 11 ஆம் இடத்தில் அமர்ந்திருந்த நிலையில், இப்போது ராசிக்கு 12 ஆம் இடமான விரய ஸ்தானத்தில் வந்து அமர்ந்துள்ளார். எனவே, சிக்கனமாக செயல்படுவது நல்லது.

சிக்கனம் நல்லது

வீண் செலவுகளைக் குறைக்க வேண்டும். சகோதரர்களைப் பகைத்துக் கொள்ளக் கூடாது. உங்கள் ராசி, ஜாதகப்படி சகோதரர்களுக்கு வெளிநாடு, வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பூர்வீக சொத்து விவகாரத்தில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. அஷ்டமத்து சனி தொடர்ந்து கொண்டிருப்பதால் திடீரென டென்ஷன் ஏற்படும்.

வெற்றி மேல் வெற்றி

ராசிநாதன் சூரியன் வலுவாக இருப்பதால் எல்லா வகையிலும் வெற்றி பெறக்கூடிய யோகம் உண்டு. ராசிநாதன் சூரியன் 2 ஆம் இடத்தில் இருப்பது நல்லது தான். அதே நேரத்தில் சனி பகவானின் பார்வையைப் பெறுவதால் வியாபாரத்தில் கூட்டு முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. தனிப்பட்ட முறையில் வியாபாரம் செய்வது நல்லது.

வழிபாடு

உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள், போட்டிகள் இருந்தாலும் அதையும் தாண்டி வெற்றி பெறக்கூடிய அற்புதமான அமைப்பு. ஸ்ரீ விநாயகரை வழிபாடு செய்வது நன்மை பயக்கும். ஏழை நோயாளிகளுக்கு மருந்து மாத்திரை வாங்கிக் கொடுப்பது, மொச்சைப் பயிறு தானமாகக் கொடுப்பது சகலவித நன்மைகளையும் அள்ளித் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+