கன்னி ராசியினரே ரெடியா?.. வீடு, நிலம், தங்க நகை வாங்கும் யோகம்.. புரட்டாசியில் பணவரவும் கொட்டும்

Subscribe to Oneindia Tamil

Purattasi Matha Palan: ஆவணி மாதம் முடிவடைந்து புரட்டாசி மாதம் ஆரம்பிக்கவுள்ளது. புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் நற்பலன்கள், அதிர்ஷ்டங்கள், வேலை, தொழில் வாய்ப்பு, திருமண யோகம், வழிபட வேண்டிய தெய்வம், பரிகாரங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளுக்கு அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப மாற்றங்களையும் ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு அசுப மாற்றத்தையும் ஏற்படுத்தும். அந்த வகையில், வரும் செப்டம்பர் 18 ஆம் தேதியன்று கன்னி ராசிக்குள் சூரிய பகவான் சஞ்சாரம் செய்கிறார்.

purattasi-matha-palan-what-kind-of-benefits-will-get-kanni-rasi-people-during-this-month

கன்னி ராசிக்குள் சூரியன் வரும் இந்த மாதமே கன்னி மாதம் என்றும், புரட்டாசி மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. பெருமாளுக்கு உகந்த மாதமாகும். செப்டம்பர் 18 ஆம் தேதி புரட்டாசி மாதம் பிறக்கிறது. புதன் தான் கன்னி ராசிக்கு அதிபதி. சூரியன் புதன் வீட்டிற்கு வந்தாலும் கன்னி பகை வீடாகும். மீனத்தில் உள்ள சனியும், கன்னியில் உள்ள சூரியனும் சமசப்தமப் பார்வையாக உள்ளது.

எனவே, புரட்டாசி மாதத்தில் பெரிய தலைவர்கள் எல்லாம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஆட்சியாளர்கள், அதிபர்கள், பிரதமர்கள், குடியரசுத் தலைவர்கள், ராணுவத் தளபதிகள், காவல் துறை உயரதிகாரிகள், தொழிலதிபர்கள் தாங்கள் செல்லும் வாகனங்களில் மிகுந்த கவனம் தேவை. விமானம், ஹெலிகாப்டரில் செல்லும்போது மிகுந்த கவனம் தேவை.

அந்த வகையில், புரட்டாசி 1 முதல் 30 ஆம் தேதி (செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 17) வரையிலான தமிழ் மாதத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசியினர் விலை உயர்ந்த பொருள்களைக் கையாளும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நியாப மறதியால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. யோகம், தியானம் செய்வது நன்மையைத் தரும். குடும்பத்தில் அந்நியோன்யக் குறைபாடுகள் எல்லாம் சரியாகும். துணை மீண்டும் ஒன்று சேரக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.

சுபவிரயம்

விவாகரத்து வரை சென்றவர்கள் மீண்டும் மனம் மாறி துணையுடன் ஒன்று சேர்வதற்கான வாய்ப்பு ஏற்படும். தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது, தோப்புக் கரணம் போடுவது நன்மையைத் தரும். உடல் ரீதியாக, மன ரீதியாக மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நிறைய சுப வியரயங்கள் ஏற்படும். ஆடை, ஆபரணங்கள், தங்க நகைகள் வாங்கும் யோகம் ஏற்படும்.

சொத்துகள் சேரும்

வீடு வாங்குவது, நிலம் வாங்குவது, வீடு கட்டுவது, வண்டி வாகனம் வாங்குவது போன்ற அற்புதமான அமைப்பு உள்ளது. கன்னி ராசியினர் வீட்டில் அடுத்தடுத்து சுப காரியங்கள் நடக்கும். திருமண அமைப்பில் பாதிப்படைந்தவர்களுக்கு மறுமணம் நடைபெறுவதற்கான யோகம் ஏற்படும். தொழில் ரீதியாக இடமாற்றம் ஏற்படும் அமைப்பு உள்ளது. பண வரவு அற்புதமாக இருக்கும்.

முன்னேற்றம்

தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றங்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவார்கள். மேலதிகாரிகளுக்கு உங்கள் மீது முழு நம்பிக்கை ஏற்படும். எப்போதும் வேலை, தொழில், வியாபாரம் என்றிருக்காமல் உங்களையும் கவனித்துக் கொள்வது நல்லது. முன்னேற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.

வழிபாடு

பொருளாதாரத்தில் ஏற்றம் காணப்படும். கழுத்து, சுழுக்கு, தோள்பட்டை தொடர்பான பாதிப்புகளில் கவத்துடன் இருப்பது நன்மையைத் தரும். விஷ்ணு வழிபாடு, விஷ்ணு சஹஸ்ஹர நாமம், விஷ்ணு காயத்ரியை வழிபாடு செய்வது ஏற்றத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும். ஞாயிற்றுக்கிழமை மதிய வேளைகளில் ஏழைகளுக்கு உணவு தானமளிப்பது விரயங்களில் இருந்து காப்பாற்றும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+