மகரம் ராசியினரே.. புரட்டாசியில் உங்கள் நேரம் மாறப்போகுது.. காத்திருக்குது அதிர்ஷ்டம்

Subscribe to Oneindia Tamil

Purattasi Matha Palan: ஆவணி மாதம் முடிவடைந்து புரட்டாசி மாதம் பிறந்துவுள்ளது. கன்னி ராசிக்குள் வரும் சூரியனால் புரட்டாசி மாதத்தில் மகரம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளுக்கு அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப மாற்றங்களையும் ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு அசுப மாற்றத்தையும் ஏற்படுத்தும். அந்த வகையில், வரும் செப்டம்பர் 18 ஆம் தேதியன்று கன்னி ராசிக்குள் சூரிய பகவான் சஞ்சாரம் செய்கிறார்.

purattasi-matha-palan-what-kind-of-benefits-will-get-magaram-rasi-people-in-purattasi-month

கன்னி ராசிக்குள் சூரியன் வரும் இந்த மாதமே கன்னி மாதம் என்றும், புரட்டாசி மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. பெருமாளுக்கு உகந்த மாதமாகும். செப்டம்பர் 18 ஆம் தேதி புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. புதன் தான் கன்னி ராசிக்கு அதிபதி. சூரியன் புதன் வீட்டிற்கு வந்தாலும் கன்னி பகை வீடாகும். மீனத்தில் உள்ள சனியும், கன்னியில் உள்ள சூரியனும் சமசப்தம பார்வையாக உள்ளது. அந்த வகையில், இந்த புரட்டாசி மாதத்தில் மகர ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

மகரம் ராசி

மகரம் ராசியினருக்கு 7 ஆம் இடத்தில் செவ்வாய் நீச்சமாகியும், குரு உச்சமாகவும் இருப்பதால் குடும்பத்தில் இணக்கமாகச் செல்வது நல்லது. சண்டை சச்சரவுகளைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. உறவுகளுக்கும், உங்களுக்கும் வாக்குவாதங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. ஆனால், அனுகூலமான காலகட்டமாக இருக்கும்.

முன்னேற்றம்

தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு அற்புதமாக இருக்கும். குரு பார்வையில் இருப்பதால் சுபகாரியங்கள் அடுத்தடுத்து நடக்கும். ஆக்ரோஷப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. யார் என்ன சொன்னாலும் மன அழுத்தத்திற்கு ஆளாவது, மன வருத்தப்படுவது, அவர்களைப் பற்றியே யோசித்துக் கொண்டிருப்பது, அவர்களுடைய நட்பு போய்விடுமான என்று நினைப்பதைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்டம்

நட்பு, உறவு எந்த உறவாக இருந்தாலும் கெஞ்சிக் கொண்டிருப்பதைத் தவிர்ப்பது நல்லது. நீங்கள், நீங்களாகவே தூய மனத்துடன் இருப்பது நன்மை பயக்கும். சனி விலகி இருப்பதாலும், சனி 3 ஆம் இடத்தில் அமர்ந்து சூரியப் பார்வையில் படுவதாலும் உங்களுக்கு அற்புதமான நன்மைகளையும், அதிர்ஷ்டத்தையும் ஏற்படுத்தும். வண்டி வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

கவனம்

இளைஞர்கள் வாகனங்களை இயக்கும்போது மிகுந்த எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. இதுவரை இருந்து வந்த சங்கடங்கள் நீங்கும். தனிப்பட்ட செல்வாக்குகள் கூடும். ஏற்றமும், அனுகூலமும் ஏற்படும். புதிய நபர்களிடம் பேசும்போது, பழகும்போது அதீத கவனத்துடன் இருப்பது நன்மை பயக்கும். ஞாயிற்றுக்கிழமையில் பெருமாள் தாயார் வழிபாடு, விநாயகர் வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும்.

வழிபாடு

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எந்த காரியத்தை செய்தாலும் அதை கவனத்துடன் செய்வது ஏற்றத்தைத் தரும். வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், வயிற்றுகளில் உள்ள உறுப்புகள் விஷயத்தில், கழிவுப்பாதை தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பெற்றோர், பெரியவர்களின் ஆரோக்கியத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+