மேஷ ராசிக்கு இனி ஏறுமுகம் தான்.. புரட்டாசியில் எதிரிகளும் நண்பர்களாகும் யோகம்!

Subscribe to Oneindia Tamil

Purattasi Matha Palan: ஆவணி மாதம் முடிவடைந்து புரட்டாசி மாதம் ஆரம்பிக்கவுள்ளது. புரட்டாசி மாதத்தில் மேஷ ராசியினருக்கும் கிடைக்கும் நற்பலன்கள், அதிர்ஷ்டங்கள், வேலை, தொழில் வாய்ப்பு, திருமண யோகம், வழிபட வேண்டிய தெய்வம், பரிகாரங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளுக்கு அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப மாற்றங்களையும் ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு அசுப மாற்றத்தையும் ஏற்படுத்தும். அந்த வகையில், வரும் செப்டம்பர் 18 ஆம் தேதியன்று கன்னி ராசிக்குள் சூரிய பகவான் சஞ்சாரம் செய்கிறார்.

purattasi-matha-palan-what-kind-of-benefits-will-get-mesham-rasi-people-during-this-month

கன்னி ராசிக்குள் சூரியன் வரும் இந்த மாதமே கன்னி மாதம் என்றும், புரட்டாசி மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. பெருமாளுக்கு உகந்த மாதமாகும். செப்டம்பர் 18 ஆம் தேதி புரட்டாசி மாதம் பிறக்கிறது. புதன் தான் கன்னி ராசிக்கு அதிபதி. சூரியன் புதன் வீட்டிற்கு வந்தாலும் கன்னி பகை வீடாகும். மீனத்தில் உள்ள சனியும், கன்னியில் உள்ள சூரியனும் சமசப்தம பார்வையாக உள்ளது.

எனவே, புரட்டாசி மாதத்தில் பெரிய தலைவர்கள் எல்லாம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஆட்சியாளர்கள், அதிபர்கள், பிரதமர்கள், குடியரசுத் தலைவர்கள், ராணுவத் தளபதிகள், காவல் துறை உயரதிகாரிகள், தொழிலதிபர்கள் தாங்கள் செல்லும் வாகனங்களில் மிகுந்த கவனம் தேவை. விமானம், ஹெலிகாப்டரில் செல்லும்போது மிக கவனமாக இருக்க வேண்டும்.

அந்த வகையில், புரட்டாசி 1 முதல் 30 ஆம் தேதி (செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 17) வரையிலான தமிழ் மாதத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசியினருக்கு ஏழரை சனியால் பல மாதங்கள் உங்களுக்கு சிரமமாக இருந்தாலும், இந்த மாதம் தனிக்காட்டு ராஜாவாக இருப்பீர்கள். கெளரவம் ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். பெரிய பொறுப்புகளுக்கு வரக்கூடிய அமைப்பு ஏற்படும். மன அழுத்தங்கள் தீரும். யாரெல்லாம் உங்களை ஏளனமாகப் பேசினார்களே அவர்கள் ஏதவாவது பிரச்சனையில் சிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

பண வரவு

உங்கள் எதிரிக்கு தீராத சங்கடம் வரக்கூடிய அளவுக்கு கிரகம் அமைப்புள்ளது. செவ்வாய் நீச்சமாக இருப்பதால் அச்சம் கொள்ளத் தேவையில்லை. குருவுடன் இருப்பதால் பண வரவு நன்றாக இருக்கும். எல்லா விதத்திலும் ஏற்றம் ஏற்படும். பொருளதவி கிடைக்கும். அரசாங்கத்தில் இருப்பவர்கள், அரசுத் துறையில் இருப்பவர்கள், அரசியல்வாதிகளுக்கு பெரிய கெளரவங்கள் ஏற்படும்.

யோகம்

ஒதுக்கி வைத்தவர்கள் எல்லாம் உங்களைத் தேடி வருவார்கள். எதிரிகள் கூட நட்பு பாராட்டக்கூடிய அமைப்பு ஏற்படும். வண்டி வாகனங்களை மாற்றுவதற்கான அமைப்பு உள்ளது. குடும்பத்திற்கும், பிள்ளைகளுக்கும், உங்களைச் சார்ந்தவர்களுக்கும் நீங்கள் கொடுத்திருந்த அனைத்து வாக்குறுதிகளையும் காப்பாற்றக்கூடிய அற்புதமான யோகம் உண்டாகும்.

வழிபாடு

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொலைதூரப் பயணங்கள் மூலமாக அனுகூலம் ஏற்படும். ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பான பரிசோதனைகளை செய்து கொள்வது நன்மையைத் தரும். உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. செவ்வாய்க்கிழமை தோறும் பெருமாள், முருகர், துர்க்கை வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+