புரட்டாசி மாத ராசி பலன்..யாருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்?
சென்னை: புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். காரணம் கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம். இந்த மாதத்தில் சூரியனுடன், சுக்கிரன், புதன் கூட்டணி அமைத்து பயணம் செய்கின்றனர் இந்த கிரகங்களின் கூட்டணியால் பல ராசிக்காரர்களுக்கு மாற்றங்கள் ஏற்படும். மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
புரட்டாசியில் கிரகங்களின் மாற்றம் உள்ளது. 7ஆம் தேதி சுக்கிரன் கன்னி ராசியில் சென்று நீச்சமடைகிறார். 15ஆம் தேதியன்று புதன் வக்ரம் முடிவுக்கு வருகிறது. மாத இறுதியில் ரிஷப ராசியில் இருக்கும் செவ்வாய் மிதுன ராசிக்கு நகர்கிறார்.
ஆன்மீக அலைகள் வீசும் இந்த புரட்டாசி மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். புத்திசாலித்தனம் அதிகரிக்கப்போகிறது. புரட்டாசி மாதத்தில் சனி,புதன், குரு பகவான் வக்ரம் பெற்றிருக்கின்றனர். ஆறாம் வீட்டில் சூரியன், புதன், சுக்கிரன் கூட்டணி அமைந்துள்ளது. புரட்டாசி மாதத்தில் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு கிரகங்களின் சஞ்சாரத்தையும் பார்வையையும் பொறுத்து பலன்களைப் பார்க்கலாம்.

மேஷம்
குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். ராசி நாதன் குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் மன திருப்தி அதிகரிக்கும். இரண்டாம் அதிபதி சுக்கிரன் ஆறாம் வீட்டில் அமர்ந்து நீச்சம் பெற்று அமரப்போகிறார் எனவே பொறுப்புகளும் கடமைகளும் அதிகரிக்கும். வேலைப்பளு கூடும். எனவே எதையும் சமாளிக்க தயாராகுங்கள். ஏழாம் வீட்டில் கேது பயணம் செய்கிறார் எனவே கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன உரசல்கள் வந்து செல்லும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

வேலைவாய்ப்பு
பத்தாம் வீட்டில் சனி பகவான் ஆட்சி பலம் பெற்றிருப்பதால் நல்ல வேலை கிடைக்கும். உங்களுக்கு வேலையில் மாற்றம் கிடைக்கும். வார்த்தைகளில் கவனம் தேவை. வேலைப்பளு அதிகரிக்கும். ராசியில் ராகு இருப்பதால் அவ்வப்போது மனக்குழப்பங்கள் வந்து போகும். மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல வேண்டியிருக்கும்.
செவ்வாய் பகவான் மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவதால் வேலை இல்லாதவர்களுக்கு நிச்சயம் நல்ல வேலை கிடைக்கும்.

வேலையில் புரமோசன்
தொழில் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். முதலீடுகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். பேச்சில் வேகத்தையும் கோபத்தையும் கட்டுப்படுத்துங்கள். சூரியன் ஆறாம் வீட்டில் பயணம் செய்வதால் அரசு வேலைக்காக தேர்வு எழுதுபவர்களுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல புரமோசன் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும்.

திருமணம் சுபகாரியம்
திருமணம் முடிந்து குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். சூரியன் ஆறாம் வீட்டில் அமர்ந்துள்ளதால் நோய் பாதிப்புகள் நீங்கும். உங்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரப்போகிறது. மாணவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். இந்த மாதம் வீடு நிலம் வாங்க யோகம் வந்துள்ளது. சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். ராகு பகவான் ராசியில் இருப்பதால் வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபத்தை தரும்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம்
ஆறுக்குடைய புதன் ஆறாம் வீட்டில் ஆட்சி உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் கடன் விசயத்தில் கவனம் தேவை. மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்து போட்டு கடன் வாங்கி தராதீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனமும் எச்சரிக்கையும் தேவை. உடல் சூடு, எலும்பு, நரம்பு பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. உடற்பயிற்சியும் உணவு கட்டுப்பாடும் அவசியம். மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு புரட்டாசி மாதம் மேன்மை நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications