புரட்டாசி மாத பலன் 2025: மேஷ ராசிக்கு அதிர்ஷ்டத்துக்கு மேல் அதிர்ஷ்டம்.. தங்கத்தை குவிக்கும் யோகம்
Purattasi matha palan: ஆவணி மாதம் நிறைவடைந்து பெருமாளுக்கு உரிய மாதமான புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. இந்த புரட்டாசி மாதத்தில் மேஷ ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
புரட்டாசி மாதம்
புரட்டாசி மாதம் இன்று பிறந்துள்ளது. பெருமாள் மாதம், வைணவ மாதம், புண்ணிய மாதம், முன்னோர்களின் ஆசிர்வாதத்தைப் பொழியும் மாதம் என்று அழைக்கப்படுகிறது. மாதங்களில் 6 ஆவது மாதமாக வரக்கூடிய மாதம். சூரிய பகவான் ராசி மண்டலத்தில் 6 ஆவது ராசியாகிய கன்னி ராசியில் அமரும் மாதமே புரட்டாசி மாதம்.

பண்டிகைகள்
பொதுவாக புரட்டாசி மாதம் என்றாலே முதலில் நியாபகத்துக்கு வருவது நவராத்திரி தான். ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி என ஏகப்பட்ட விசேஷங்கள் வரவுள்ளன. கொழு பொம்மைகளைக் கொண்டு பூமியில் கடவுளை வைத்து மனதிலே ஏற்ற கொண்டாடக்கூடிய மாதமாகும். இந்த மாதத்தில் அம்பாளுக்கு ஏராளமான விசேஷங்கள் கொண்டாடப்படும்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம்
புரட்டாசி மாதத்தில் முக்கியமான மஹாளய அமாவாசை. நீண்ட நாட்களாக முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்காமல் இருப்பவர்கள் புனித நதிகள், ஆற்றோரங்களில், கடலோரங்களில், குளக்கரைகளில் முன்னோர்களை நினைத்து வழிபட்டு ஆசிர்வாதம் பெறும் மாதமாகும். சூரியன் கன்னியில் அமர்ந்துள்ளதால் இந்த மாதத்தில் முன்னோர்களை நினைத்து வழிபடுவதால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.
இந்த புரட்டாசி மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே சுக்கிரன் 5 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கும்போது புரட்டாசி பிறந்திருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் மனதிற்குள் நிம்மதி ஏற்படும். பழைய வீட்டைக் கொடுத்துவிட்டு புதிய வீடு வாங்கலாமா என்ற எண்ணங்கள் வரும். நாளுக்கு நாள் தங்கம் விலை கூடுவதால் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக தங்கம் வாங்குவது, முதலீடு செய்வது போன்ற யோகம் உண்டாகும்.
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு
உங்கள் ராசிநாதனாகிய செவ்வாய் உங்களை நேருக்கு நேர் பார்த்துக் கொண்டிருக்கும்போது புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளதால் ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் போன்றவை அற்புதமாக இந்த மாதம் இருக்கும். பூர்வ புண்ணியாதிபதியான சூரியன் 6 வது வீட்டில் அமர்ந்திருப்பதால் பிள்ளைகளுக்கு வெளிமாநிலம், வெளிநாட்டில் வேலை கிடைப்பதற்கான யோகம் உண்டாகும்.
அலைச்சல் ஏற்படும்
சூரியனை சனி பகவான் பார்த்துக் கொண்டிருப்பதால் பிள்ளைகளால் சிறு சிறு அலைச்சல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஆனாலும், உங்களுக்கு எல்லா வகையிலும் வெற்றியைத் தரக்கூடிய வகையில் செவ்வாய் இருக்கிறார். எடுத்த காரியங்களில் வெற்றி காண்பீர்கள். ராகுவும் இந்த மாதம் முழுவதும் வலுத்து இருக்கிறார். புதனுடைய போக்கு முன் பின் இருப்பதால் பழைய நண்பர்கள், உறவினர்களிடத்தில் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும்.
கவனம்
உறவினர்கள், நண்பர்களிடையே சிறு சிறு மோதல்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரத்தைப் பொருத்தவரை அக்டோபர் 8 ஆம் தேதி வரை அற்புதமான காலகட்டமாக இருக்கும். 9 ஆம் தேதிக்குப் பிறகு சுக்கிரன் 6 ஆம் இடத்தில் மறையவுள்ளதால் அது முதல் வண்டி, வாகனங்களில் மிகுந்த கவனம் தேவை. விபத்துகள், வண்டிகளில் பழுதுகள் வரும் வாய்ப்புள்ளது.
வழிபாடு
உத்தியோகத்தைப் பொருத்தவரை இந்த மாதம் முழுவதும் நன்றாக இருக்கும். ஆனாலும், அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்றிருப்பது நல்லது. ஸ்ரீ நரசிங்க பெருமாளை வழிபடுவது உங்களுக்கு நன்மையை ஏற்படுத்தும். ஏழை மாணவரின் கல்விக்கு உதவுவது, மாதுளம் பழம் தானமாகக் கொடுப்பது நன்மையைத் தரும்.












Click it and Unblock the Notifications