புரட்டாசி மாத ராசி பலன் 2023: சூரியன் + செவ்வாய் கூட்டணி.. உச்சம் பெறும் புதன்.. திடீர் லக் யாருக்கு
சென்னை: புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் பயணம் செய்வதால் கன்னிகா மாதம் என்று அழைக்கப்படுகிறது. புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் சூரியன், செவ்வாய் புதன் கூட்டணியால் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். செவ்வாய் கன்னி ராசியில் அமர்ந்திருக்கிறார். புரட்டாசி 17 ஆம் தேதி துலாம் ராசிக்கு செல்கிறார். புதன் சிம்மத்தில் அமர்ந்திருக்கிறார். புரட்டாசி 15ஆம் தேதி கன்னி ராசிக்கு செல்கிறார். குரு மேஷ ராசியில் இருக்கிறார். சுக்கிரன் கடக ராசியில் நிற்கிறார். புரட்டாசி 15ஆம் தேதி சிம்ம ராசிக்கு மாறுகிறார். சனி கும்ப ராசியில் அமர்ந்திருக்கிறார். ராகு மேஷ ராசியில் இருக்கிறார். கேது துலா ராசியில் இருக்கிறார்.

மேஷம்: வீரத்தை அணிகலனாகக் கொண்ட செவ்வாயை அதிபதியாக பெற்றுள்ள மேஷ ராசி அன்பர்களே...
எதிரிகளை முறியடித்து சமுதாயத்தில் செல்வாக்கை உயர்த்தி கொள்வீங்க. ரியல் எஸ்டேட் பிசினஸில் அதிக லாபம் பார்ப்பீங்க. மாணவர்கள் மிகச் சிரமப்பட்டு கல்வியில் அக்கறை காட்ட வேண்டுமுங்க. வாழ்க்கையில் சில சிக்கலான பிரச்சனைகளை சந்திப்பீங்க. அதிலிருந்து விடுபட்டு வருவீங்க. நடைபெறுமா என்று இருந்த திருமணம் கண்டிப்பாக அடுத்த மாதத்தில் நடக்குமுங்க. வீடு கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு அதற்கான எல்லா வேலைகளையும் செய்து முடிப்பீங்க. மனைவியோடு சண்டை போடாதீங்க. வீட்டில் நிம்மதி இல்லாம போகுமுங்க. வெளியூர் பயணங்களுக்காக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்வீங்க. வெளிநாட்டில் இருந்து உங்களுக்கு நல்ல செய்தி வருமுங்க.
திருச்செந்தூர் முருகனை வழிபடுங்க. விருப்பமான காரியங்கள் நிறைவேறுமுங்க.
ரிஷபம்: கலைநயம் மிளிரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே....
பெற்றோர் சொல்லை கேட்டு நடப்பது நல்லதுங்க. மீறி நடந்தால் சில நஷ்டங்களை சந்திப்பீங்க. யாரிடமும் கடுமையாக நடந்து கொள்ளாதீங்க. தொழில்துறையில் ஏற்ற இறக்கமான பலன்களை காண்பீங்க. சகோதரருக்கும் உங்களுக்கும் மன சங்கடம் உருவாகி சொத்து பிரச்சனை பஞ்சாயத்தில் போய் முடியுமுங்க. படிப்புக்காக பிள்ளைகளுக்கு அதிகம் செலவு செய்வீங்க. அவங்களால உங்களுக்கு மரியாதையும் மகிழ்ச்சியும் உண்டாகுமுங்க. கூட்டு சேர்ந்து தொழில் தொடங்குவீங்க. அது வெற்றியும் பெறுவதற்கான எல்லா வேலைகளையும் முன்னெடுப்பீங்க. மனதுக்குப் பிடித்த பெண்ணை மனம் செய்து கொள்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்வீங்க. உணவுத் தொழில், இரும்பு கடை வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்குமுங்க. பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்ல விஷயம் நடக்குமுங்க. எதிர்ப்புகளை தூள் தூளாக்குவீங்க.
திருவண்ணாமலை சென்று வாங்க. பெருமையும் புகழும் அதிகரிக்குமுங்க.
மிதுனம்: எதிர்ப்புகளை புத்திசாலித்தனத்தால் முறியடிக்கும் புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே...
குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்தாதீங்க. அரசு வேலையில் இருப்பவர்கள் மிகுந்த கவனத்துடன் பணி செய்ய வேண்டுமுங்க. தொழிலுக்கு போட்டியாக எதிரிகள் வியூகம் வகுப்பாங்க. அதை வெற்றிகரமாக தாண்டி வருவீங்க. குழந்தை இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்குமுங்க. காதலியின் மனம் அறிந்து நடந்து கொண்டு அவருடைய அன்பை பேணுவீங்க. புத்திசாலித்தனமாக நடந்து வியாபாரத்தை பெருக்குவீங்க. குழந்தைகளால் மருத்துவ செலவு ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டுங்க. குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வீங்க. இரும்பு சம்பந்தப்பட்ட வியாபாரத்தில் அக்கறை காட்டுவீங்க. மருத்துவர்கள் வழக்கறிஞர்கள் போன்றவர்கள் தொழில் உயர்வு அடைவீங்க. நீண்ட காலமாக இழுபறியிருந்த வழக்குகள் ஒரு முடிவுக்கு வருமுங்க. திருமோகூர் காளமேகப் பெருமாளை வழிபடுங்க துன்பங்கள் தூர ஓடுமுங்க.
கடகம்: வளர்ச்சிகளை சீராக அள்ளித் தருகின்ற சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே...
புதிய தொழில் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வீங்க. அரசியலில் முனைப்பு காட்டி சமுதாயத்தில் செல்வாக்கை அதிகரிப்பீங்க. வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாட்டை செய்வீங்க. சகோதரியின் திருமணத்தை கோலாகலமாக நடத்துவீங்க. காலத்திற்கு ஏற்றவாறு வியாபார தந்திரங்களை கடைப்பிடிப்பீங்க. கூட இருந்தே குழி பறிக்கும் நபர்களை தக்க நேரத்தில் கண்டுபிடித்து விலக்கி வைப்பீங்க. வீடு கட்டுவதற்காக மனை இடம் வாங்குவீங்க. அரசாங்கத்திலிருந்து கிடைக்க வேண்டிய காண்ட்ராக்ட் தள்ளிப் போவதால் சங்கட்டப்படுவீங்க. கொடுக்கல் வாங்கலில் மிக எச்சரிக்கையாக இருந்தால் பிரச்சனைகள் வராமல் தப்பிக்கலாமுங்க. வாகனங்களில் போகும் போது மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது நல்லதுங்க. ஆலய திருப்பணிகளுக்கு பண உதவி செய்வீங்க. தஞ்சை பிரகதீஸ்வரர் பெருமானை வழிபடுங்க. நெஞ்சத்து ஆசைகள் எல்லாம் நிறைவேறுமுங்க.
சிம்மம்: அரசரைப் போல் கோலோச்சும் ஆற்றல்மிக்க சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே...
வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான நிலையை சந்திப்பீங்க. தொழில்துறையில் முன்னேற்ற பாதையில் நடை போடுவீங்க. காதலியின் மனதை புரிந்து கொள்ளாமல் கடுமையான வார்த்தைகளை பேசுவீங்க. சொத்து சம்பந்தப்பட்ட சிக்கலான பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண்பீங்க. எந்தக் காரணம் கொண்டும் அடுத்தவர் பிரச்சனையில் தலையிடாதீங்க. தொழில் சம்பந்தமாக வெளிநாட்டு பயணம் மேற்கொள்வீங்க. நீண்ட காலமாக எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேருமுங்க. உறவினர்களோடு ஒத்துப் போய் உறவு முறையிலிருந்த சிக்கல்களை கடந்து வருவீங்க. ஏதாவது ஒரு பிரச்சனையால் குடும்பத்தில் சின்ன சின்ன தகராறுகள் ஏற்பட வாய்ப்பு இருக்குங்க.
காளகஸ்திநாதரை வழிபடுங்க. கஷ்டங்கள் பறந்தோடுமுங்க.
கன்னி: அறிவுத் திறனை அள்ளித்தரும் புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே...
சொன்ன சொல்லை காப்பாற்ற கடுமையாக போராடி நல்ல பெயரை எடுப்பீங்க. நெருக்கமான நண்பருக்கு தொழிலுக்காக பண உதவி செய்வீங்க. ரியல் எஸ்டேட் தொழிலில் வெற்றிகரமாக லாபம் பார்ப்பீங்க. பழைய வீட்டை புதுப்பித்து தேவையான சாமான்களை வாங்கி போடுவீங்க. மகளுக்காக மனை இடம் வாங்கி கொடுப்பீங்க. வெளிநாட்டுக்கு அனுப்பி மகனை படிக்க வைக்க ஏற்பாடு செய்வீங்க. எந்த வகையில் எதிர்ப்புகள் வந்தாலும் அதை சமாளித்து வெற்றி பெறுவீங்க. லாபம் அதிகமாக கிடைக்கும் என்று எண்ணி அகலக்கால் வைக்காதீங்க. அதனால் சில நஷ்டங்களை சந்திக்க நேரமுங்க. மனைவிக்கு ஏற்பட்ட உடல்நல கோளாறுக்காக மருத்துவரை சந்திப்பீங்க. வேலை காரணமாக சில நாட்கள் குடும்பத்தை பிரிந்து செல்வீங்க.
காரைக்குடி முத்துமாரியம்மனை வழிபடுங்க. நிறைவான செல்வம் பெறுவீங்க.
உங்கள் ஜோதிடர் கவிஞர்
அ.பெர்னாட்ஷா, காரைக்குடி..
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications