Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புரட்டாசி மாத ராசி பலன் 2023: சூரியன் தலைமையில் கன்னி ராசியில் கூட்டணி .. மகாலட்சுமி யோகம் யாருக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் பயணம் செய்வதால் கன்னிகா மாதம் என்று அழைக்கப்படுகிறது. கன்னி ராசியில் சூரியன், செவ்வாய் புதன் கிரகங்கள் கன்னி ராசியில் கூட்டணி சேருக்கின்றன. புதன் தனது ராசியில் உச்சம் பெற்று அமரப்போவதால் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். செவ்வாய் கன்னி ராசியில் அமர்ந்திருக்கிறார். புரட்டாசி 17 ஆம் தேதி துலாம் ராசிக்கு செல்கிறார். புதன் சிம்மத்தில் அமர்ந்திருக்கிறார். புரட்டாசி 15ஆம் தேதி கன்னி ராசிக்கு செல்கிறார். குரு மேஷ ராசியில் இருக்கிறார். சுக்கிரன் கடக ராசியில் நிற்கிறார். புரட்டாசி 15ஆம் தேதி சிம்ம ராசிக்கு மாறுகிறார். சனி கும்ப ராசியில் அமர்ந்திருக்கிறார். ராகு மேஷ ராசியில் இருக்கிறார். கேது துலா ராசியில் இருக்கிறார்.

Purattasi month rasi palan 2023 Purattasi matha rasi palan Thulam to Meenam

துலாம்: தர்ம அதர்மங்களுக்கு ஏற்ப பலன்தரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே...
விட்டதை பிடிக்க வேண்டும் என்று நினைத்து வீண் சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீங்க. யாரை மிக அதிகமாக நம்புகிறீர்களோ அவர்களால் பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு உண்டுங்க. நெருங்கிய நண்பராக இருந்தாலும் பண விஷயத்தில் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்க. மிகுந்த எதிர்பார்ப்போடு செய்யப்பட்ட திருமண ஏற்பாடுகளில் பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு இருக்குங்க. அடுத்தவர் பேச்சைக் கேட்டு குடும்பத்தில் கலகம் செய்யாதீங்க. விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது நல்லதுங்க. மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்பதற்காக ஆடம்பரமாக செலவு செய்யாதீங்க. இடம் வாங்கி விற்கும் தொழில் ஏற்றமாக நடக்குமுங்க. வீட்டுப் பெண்கள் ஆசைப்பட்ட நகையை வாங்கி கொடுத்து அழகு பார்ப்பீங்க. எதிர்பார்த்த இடத்தில் இருந்து உரிய நேரத்தில் பணம் கைக்கு வந்து சேருமுங்க. திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாளை வழிபடுங்க. சகல சௌபாக்கியங்களும் சித்திக்குமுங்க.

விருச்சிகம்: போர்க்குணம் கொண்ட பூமிகாரகன் செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே...
கில்லி மாதிரி சொல்லி அடித்து வியாபாரத்தை பெருக்குவீங்க. அரசாங்கத்தில் உயர் பதவியை அடைவீங்க. தொழில் துறைக்கு தேவையான முதலீடுகளை பெறுவீங்க. புதிய வீடு கட்டுவதற்காக ஏற்பாடு செய்வீங்க. மனைவி பிள்ளைகளின் சந்தோஷத்திற்காக பாடுபடுவீங்க. வியாபாரத்தில் புத்திசாலித்தனமாக முடிவெடுத்து எதிரிகளை திணறடிப்பீங்க. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவீங்க. மருத்துவ பரிசோதனை செய்து கொள்வீங்க. உறவினர்கள் மத்தியில் சின்ன சின்ன பிரச்சனைகளை சந்திப்பீங்க. ரியல் எஸ்டேட்டில் அதிக லாபம் கிடைக்குமுங்க. பெரிய மனிதரின் ஆசியால் வீட்டில் மங்கள நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வீங்க. பழனிமலை முருகனின் பாதம் பணியுங்க. கழனி செழித்து செல்வம் பெருகுமுங்க.

தனுசு: வினைப்பயனை அறுக்கின்ற வியாழ பகவானை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே...
பொறுமையாக செயல்பட்டு பொருளாதாரத்தில் மேம்பாடு அடைவீங்க. சீட்டு போடுவதன் மூலமாக செல்வ பெருக்கை ஏற்படுத்திக் கொள்வீங்க. அரசியலில் உங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்வீங்க. பூர்வீக சொத்தில் இருந்த வில்லங்கத்தை நீதிமன்றம் சென்று வெற்றிகொள்வீங்க. படிப்படியாக வியாபாரத்தை பெருக்கி போட்டியாளர்களை திணறடிப்பீங்க. பிள்ளைகளால் சின்ன சின்ன சிக்கல்களை சந்திப்பீங்க. வாங்கி போட்ட இடத்தை விற்க முடியாமல் சில சங்கடங்களில் சிரமப்படுவீங்க. வெளியூர் பயணங்களில் அலைச்சல் அதிகமாகி உடல் சோர்வு அடைவீங்க. உறவினர் ஒருவர் செய்யும் காரியத்தால் மன நிம்மதியை இழப்பீங்க. பட்டமங்கலம் சென்று தட்சிணாமூர்த்தியை வணங்கி வாங்க. தொட்டதெல்லாம் துலங்குமுங்க.

மகரம்: வியூகங்கள் மூலம் வெற்றிகளை காணும் மந்தனின் ஆதிக்கம் கொண்ட மகர ராசி அன்பர்களே....
வியாபாரத்தை நல்ல முறையில் நடத்த வேண்டும் என்றால் நிதானம் தவறக்கூடாதுங்க. கோபப்பட்டு காரியத்தை கெடுத்துக் கொள்ளாதீங்க. அசையா சொத்துகளை வாங்கி போட முன்னேற்பாடு செய்வீங்க. ரியல் எஸ்டேட் தொழிலில் சிறப்பான லாபம் பார்ப்பீங்க. கணவன் மனைவிக்கிடையே சின்ன சின்ன சச்சரவுகள் வந்து குடும்பத்தில் குழப்பம் ஏற்படுமுங்க. நீண்ட காலமாக வரன் பார்த்த சகோதரிக்கு திடீரென்று கல்யாண ஏற்பாடு நடக்குமுங்க. நீங்கள் சரியாக பேசினாலும் மற்றவர்கள் தவறாக எடுத்துக் கொள்வதால் கவனமாக வார்த்தையை விடுங்க. தாயாருக்கு மூட்டு வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கூட்டிச் செல்வீங்க. காதலியின் ஆசையை பூர்த்தி செய்ய முடியாமல் திட்டு வாங்குவீங்க.
திருநள்ளாறு தர்ப்ப ஆரண்ய ஈஸ்வரரை வழிபடுங்க. அவமிருத்த யோகம் விலகும்முங்க.

கும்பம்: சாணக்கியத்தனத்தால் சாதனை புரியும் சனிபகவானை அதிபதியாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே...
கண்ட இடத்தில் பணத்தை வைத்து விட்டு மற்றவர்கள் மீது எரிந்து விழுகாதீங்க. வண்டி வாகனங்களுக்கு வாங்கிய கடனை முறையாக திருப்பி செலுத்த தவறாதீங்க. பிடிவாதமாக பேசி மனைவி மக்களின் மனதை நோகடிக்காதீங்க. பைனான்ஸ் தொழிலை பக்குவமாக நடத்துங்க. கொடுக்கல் வாங்கலில் இரு மடங்கு கவனமாக இருப்பது நல்லதுங்க. வியாபாரத்திற்கு எதிர்ப்புகள் வந்தாலும் அதையும் தாண்டி சிறப்பாக நடத்துவீங்க. புதிய தொழில் தொடங்க திட்டம் போடுவீங்க. திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அலட்சியம் காட்டாதீங்க. எதையும் தெளிவாக பேசினால் பிரச்சனை வராதுங்க. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க. வயிற்றுப் பிரச்சினையால் அவதிப்பட வாய்ப்பு இருக்குங்க.
ஒத்தக்கடை யோக நரசிம்மரை வழிபடுங்க. ஆயுள் விருத்தியாகும்முங்க.

மீனம்: பார்வையால் பலன்களை அள்ளித்தரும் குரு பகவானை அதிபதியாகக் கொண்ட மீனராசி அன்பர்களே...
அரசு காண்ட்ராக்ட்களை பெறுவதில் வெற்றியடைவீங்க. மற்றவர்களுக்கு உதவி செய்து செல்வாக்கை உயர்த்தி கொள்வீங்க. யாருக்காகவும் உங்கள் முடிவை மாற்றிக்கொள்ள விரும்ப மாட்டீங்க. தொழில் துறையில் ஏற்படும் திடீர் போட்டிகளை சாமர்த்தியமாக சமாளிப்பீங்க. வெளிநாட்டு வியாபாரத்தை பெருக்கி அதிக லாபம் பார்ப்பீங்க. பழைய வீட்டை புதுப்பித்து கலைநயத்தோடு அழகுபடுத்துவீங்க. மருத்துவர்கள் வழக்கறிஞர்கள் தங்களுடைய தொழிலில் மிகப்பெரிய வெற்றியை காண்பீங்க. பங்குச்சந்தை வியாபாரத்தில் பக்குவமாக நடந்து அதிக லாபம் அடைவீங்க. வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி போட்டு மனைவியை மகிழ்ச்சிப்படுத்துவீங்க. குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்துப் போங்க. செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டாதீங்க. அழகர் கோவில் கள்ளழகர் பெருமானை வழிபடுங்க. தொழில் விருத்தி அடையும்முங்க.

உங்கள் ஜோதிடர் கவிஞர்
அ.பெர்னாட்ஷா, காரைக்குடி..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+