Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிம்ம ராசி இனிதான் ஆட்டமே ஆரம்பம்.. லாப ஸ்தானத்தில் அமரும் குரு.. வாழ்க்கையே மாறப்போகுது

Subscribe to Oneindia Tamil

புத்தாண்டு பலன் 2025: இதுவரை ஏகப்பட்ட கஷ்டங்களால் பாதிக்கப்பட்டு வந்த சிம்ம ராசிக்காரர்களே மே மாதம் வரை கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால், அதன் பிறகு நடக்கப்போகும் ஒரு முக்கிய மாற்றம் உங்கள் வாழ்க்கையையே மாற்றப் போகிறது. இந்தப் புத்தாண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு எந்தவிதமான பலாபலன்களைக் கொடுக்கப் போகிறது, எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்... (Puthandu rasi palan for simmam)

2025 புத்தாண்டு மிகவும் ஸ்பெஷல். ஏனென்றால் இந்த வருடம் மூன்றுப் பெயர்ச்சிகள் நடக்கப் போகின்றன. சனிப்பெயர்ச்சி மார்ச் மாதத்திலும், குருப்பெயர்ச்சி மே மாதத்திலும், தொடர்ந்து அதே மாதத்தில் ராகு கேதுப் பெயர்ச்சி நடக்கப் போகிறது. இந்த மூன்று பெயர்ச்சிகளும் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களை அள்ளித் தரப் போகிறது. (Puthandu palan 2025)

puthandu rasi palan 2025 rasipalan astrology


அந்த வகையில், சிம்ம ராசிக்காரர்களைப் பொருத்தவரை போன ஆண்டை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்த ஆண்டு அவ்வளவு நன்மை பயப்பதாக இல்லை. ஆனாலும், மே மாதத்துக்குப் பிறகு பல்வேறு யோகங்களை அள்ளித் தரப் போகிறது. ஏழாம் இடத்தில் சனி உட்காருவதால் கணவன், மனைவிக்குள் பிரச்னை, மற்றவர்கள் மூலம் பிரச்னை, கணவன், மனைவியின் உடல் நலத்தில் பிரச்னை, குடும்பத்துக்குள் சண்டை போன்றவை ஏற்பட்டிருக்கும். (புத்தாண்டு ராசி பலன் சிம்மம்)

லாப ஸ்தானத்தில் குரு அமரப் போவதால் நண்பர்கள் மூலமாக நன்மைகள் நடக்கும். குழந்தைகளுக்கு நன்மை ஏற்படும். மூத்தவர்களுக்கு நன்மைகள் ஏற்படும். மூத்தவர்கள் மூலம் நன்மைகள் நடக்கும். நிறைய பேருக்கு பதவிகள் வரும், பதவிகள் உயர்வு வரும். பாராட்டு மழைகள் குவியும். மாலைகள் தேடி வரும். பெரிய பெரிய படிப்புகள் படிப்பீர்கள். மே மாதத்துக்குப் பிறகு சூப்பராக இருக்கும்.

குருவின் மாற்றம் அற்புதமான பலன்களை அள்ளித் தரப் போகிறது. உங்களுக்கு சொர்ண கவசம்போல நின்று காப்பார் குரு பகவான். குருவின் பார்வையால் உங்களுடையே வாழ்க்கையே மாறப்போகிறது. லாப ஸ்தானத்தில் குரு அமருவதால் மிகப்பெரிய மரியாதைகளைப் பெறுவீர்கள். பதினோறாம் இடத்தில் குரு உட்கார்ந்தால் தான் அதுபோன்ற மரியாதை கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை, திருமணம், புத்திர பாக்கியம் என எல்லாமே நடக்கும்.

மகம், பூரம் நட்சத்திரக்காரர்களுக்கும் நல்ல யோகங்கள் உண்டாகும். நிறைய வாய்ப்புகள் தேடி வரும். லைஃப் ஸ்டைல் மாறும். நல்ல பணம் காசு வந்தாலும் நீங்கள் வெளியில் போய் சொல்லக் கூடாது. எட்டாம் இடத்தில் 3 கிரகங்கள் உட்காரும்போது உங்களுடைய வளர்ச்சி குறித்து யாருடன் சொன்னாலும் திருஷ்டி பட்டுவிடும்.

2025 மார்ச் மாதம் வரை இந்தப் பிரச்னை தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். ஏப்ரல் மாதத்தில் இருந்து அஷ்டமத்து சனி ஆரம்பிக்கப் போகிறது. சிம்மத்தில் பிறந்த அரசியல்வாதிகள் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். சிம்மம் என்றால் சிவகங்கை, சிதம்பரம் போன்ற பகுதிகளில் இருக்கும் அரசியல்வாதிகள் சட்ட சிக்கல்களில் சிக்குவார்கள்.

அரசு நிறுவனத்தில் பணிபுரிபவர்கள், அரசியல்வாதிகள், மத்திய அரசு துறைகளில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேது லக்னத்திலும், அஷ்டமத்தில் சனி, ராகு, சூரியன், சுக்கிரன் அமர்ந்திருப்பதால் இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு மிக மிக கவனத்துடன் இருக்க வேண்டும். உங்களுடைய வீட்டில் இருப்பவர்களின் இரண்டு பேரின் உடல்நலனில் கட்டாயமாக பிரச்னை ஏற்படும்.

ராகு கேது பெயர்ச்சி பெரிதாக நல்லது செய்யாது. 7ஆம் இடத்தில் ராகு இருப்பதால் கணவன், மனைவிக்கிடையே பிரச்னை ஏற்படும். தேவையில்லாத சட்ட சிக்கல்கள் உண்டாகும். அமைதியுடன் இருப்பதும், அங்கிருந்து விலகிச் செல்வதும்தான் நல்லது. நிறைய மாற்றங்கள் ஏற்படும். மே மாதத்துக்குப் பிறகு இந்த கஷ்டங்கள் எல்லாம் தீரும்.

வண்டி, வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். பெண்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பெரியவர்களின் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். சிம்மத்தைப் பொருத்தவரை உடல்நலனில், உளவியல் பிரச்னை ஏற்படாமல் இருப்பது நல்லது. அனுமன் கவசத்தைக் கேட்பது நல்லது. வசதி இருப்பின் வீட்டில் ருத்ர ஜப ஹோமம் செய்வது நல்லது.

நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது. 2025 மார்ச் முதல் மே, நவம்பர் மாதங்களில் கவனமாக இருக்க வேண்டும். 100 சதவீதத்தில் 70 சதவீதம் நன்மை பயக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+