New Year Rasi Palan: கன்னி ராசிக்கு கோடிகளில் புரளும் யோகம்..தொட்டதெல்லாமே பொன்னாகும் புத்தாண்டு
புத்தாண்டு பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறக்கப் போகிறது. வரப்போகின்ற புத்தாண்டு புதுமையைத் தருவதாக அமைய வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்குமே இருக்கும். அந்த வகையில், இந்தப் புத்தாண்டில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
2026 புத்தாண்டின் ஆரம்பத்திலேயே குரு பகவான் வக்ர நிவர்த்தியில் மிதுனத்தில் இருக்கிறார். பிப்ரவரி மாதம் வரைக்குமே குரு பகவான் வக்ரத்துடன் தான் இருக்கிறார். குரு வக்கிரமடைந்து ராகுவுடன் இணையும் போது பொதுவாகவே அந்த அளவுக்கு பிரம்மாண்டமான துவக்கமாக இந்த ஆண்டு இருக்காது. மார்ச் மாதம் வரைக்குமே எல்லோருக்கும் ஒரு சுமாரான காலகட்டமாகவே இருக்கும்.

மார்ச் மாதத்திற்குப் பிறகும் நல்ல மாற்றம் ஏற்படும். ஜூன் மாதத்திற்குப் பிறகு முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தும். குரு பகவான் உச்சம் பெற்று புஷ்ய யோகத்துக்கு வருகிறார். குரு பூசம் நட்சத்திரத்திற்கு வரும்போது நாடே நன்றாக இருக்கும். அந்த அளவுக்கு செல்வம் வளரும். தங்கம் விலை அபரிமிதான விலை உயர்வை அடையும். இந்தப் புத்தாண்டில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
கன்னி புத்தாண்டு பலன்
கன்னி ராசிக்காரர்களுக்கு ஆட்சி அமைக்கக்கூடிய பாக்கியம் கண்டிப்பாக உண்டாகும். அரசியலில் இருப்பவர்களுக்கு கட்டாயம் பதவி உயர்வு உண்டாகும். எந்த இடத்தில் நீங்கள் இருந்தாலும் அந்த இடத்தில் கட்டாயம் உங்கள் வெற்றியைப் பதவி செய்வீர்கள். வாழ்க்கையை மாற்றக்கூடிய தருணமாக இந்த ஆண்டு இருக்கும். இந்தப் புத்தாண்டில் டாப் கிளாஸ் யோகம் பெறும் ராசி என்றால் அது கன்னி ராசியினர் தான்.
புரோமோஷன் கன்ஃபார்ம்
பதவி உயர்வு கிடைக்கும். பாராட்டுகள் குவியும். மேடைகள் ஏறும் பாக்கியம், மாலைகள் கழுத்தில் விழும் யோகம் உண்டு. திருமண யோகம் உண்டாகும். நண்பரையே திருமணம் செய்யும் வாய்ப்பு, காதல் திருமணம் கைகூடும் யோகம் உள்ளது. பெரிய பணங்கள் வந்து சேரும் அற்புதமான காலகட்டம். உத்தியோகத்தில் நல்ல மாற்றங்கள், முன்னேற்றங்கள் ஏற்படும்.
தைரியம் ஏற்படும்
நண்பர்களுடன் இருந்து வந்த கோபம், சண்டை, சச்சரவுகள் நீங்கக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். மன தைரியம் உண்டாகும். நல்ல பெயர் ஏற்படும் சூழல் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புது வீடு கட்டி கிரகப் பிரவேஷம் செய்யும் யோகம் உண்டாகும். எல்லோரிடமும் நட்பு பாராட்டுவீர்கள்.
பண வரவு கொட்டும்
தொட்ட அனைத்து காரியங்களும் ஹிட்டாகும் யோகம். கிரகங்கள் எல்லாம் உங்களுக்கு சாதகமாக உள்ளன. மிகப்பெரிய பணம், பொருளாதாரம் உண்டாகும். நிறைய பேருக்கு அரசு வேலைகள் கிடைக்கும். அரசு அலுவலகங்கள், வங்கிகளில் வேலை கிடைக்கும். நிறைய பேருக்கு இடமாற்றத்துடன் வேலை கிடைக்கும். வெளியூர் சென்று செட்டிலாகும் யோகம் ஏற்படும்.
வழிபாடு
எலும்பு, தசை தொடர்பான பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மறைமுக ஸ்தானத்தில் பிரச்சனைகள் பெரும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. சந்தோஷம் ரீதியாக 95 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 98 சதவீதமும் நன்மைகளைப் பெறுவீர்கள். பண வரவு அபரிமிதமானதாக இருக்கும். ராஜகணபதி வழிபாடு செய்வது உங்களுக்கு அமோகமான முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications