Puthandu Palan: மேஷம் ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. புத்தாண்டில் புதையல் கன்ஃபார்ம்
புத்தாண்டு பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. வரப்போகின்ற புத்தாண்டு புதுமையைத் தருவதாக அமைய வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்குமே இருக்கும். அந்த வகையில், இந்தப் புத்தாண்டில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
2026 புத்தாண்டின் ஆரம்பத்திலேயே குரு பகவான் வக்ர நிவர்த்தியில் மிதுனத்தில் இருக்கிறார். பிப்ரவரி மாதம் வரைக்குமே குரு பகவான் வக்ரத்துடன் தான் இருக்கிறார். குரு வக்கிரமடைந்து ராகுவுடன் இணையும் போது பொதுவாகவே அந்த அளவுக்கு பிரம்மாண்டமான துவக்கமாக இந்த ஆண்டு இருக்காது. மார்ச் மாதம் வரைக்குமே எல்லோருக்கும் ஒரு சுமாரான காலகட்டமாகவே இருக்கும்.

மார்ச் மாதத்திற்குப் பிறகும் நல்ல மாற்றம் ஏற்படும். ஜூன் மாதத்திற்குப் பிறகு முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தும். குரு பகவான் உச்சம் பெற்று புஷ்ய யோகத்துக்கு வருகிறார். குரு பூசம் நட்சத்திரத்திற்கு வரும்போது நாடே நன்றாக இருக்கும். அந்த அளவுக்கு செல்வம் வளரும். தங்கம் விலை அபரிமிதான விலை உயர்வை அடையும்.
மேஷம் புத்தாண்டு பலன்
மேஷம் ராசிக்காரர்களுக்கு பிப்ரவரிக்குப் பிறகு பல பிரச்சனைகள் தீரும். எல்லா வகையான நோய்களும் நீங்கும். அதிக வட்டிக்கு வாங்கிய கடன்கள் அனைத்தும் நீங்கும். குருவுடைய பார்வை பலம் ஜூன் மாதத்திற்குப் பிறகு மாறுவது அதிர்ஷ்டத்தையும், வளர்ச்சியையும் கொடுக்கும். எதிர்பாராத விபரீத ராஜயோகம் உண்டாகும். வாழ்க்கையின் சுமை, குடும்பத்தின் சுமை தீரும்.
வீடு கட்டும் யோகம்
நிறைய பேருக்கு திருமண யோகம், வீடு கட்டும் யோகம் ஏற்படும். சுபகாரியங்கள் நடைபெறும். சொந்தபந்தங்கள் உங்கள் வீட்டுக்கு வருவது போன்ற மாற்றங்கள் ஏற்படும். ஸ்கூல் ஆரம்பிப்பது, கல்யாண மண்டபம் காட்டுவது, வீடு, நிலம், தோட்டம் வாங்கும் யோகம் உண்டாகும். வெளியூருக்கு சென்று செட்டிலாவது, சொந்த ஊரில் செட்டிலாகும் யோகம் உண்டாகும்.
ஏ கிளாஸ் யோகம்
மேஷ ராசி பெண்களுக்கு ஏ கிளாஸ் யோகம் ஏற்படும். இழந்த கெளரவத்தைப் பெறுவீர்கள். இடமாற்றங்கள் இருக்கும். திருமணத்துக்குரிய பாக்கியம் ஜூன் மாதத்திற்கு முன்பே உண்டாகும். பூர்வீக சொத்துகள் கிடைக்கும். ஜூலைக்குப் பிறகு அற்புதமான காலகட்டமாக இருக்கும். கெட்ட ஸ்தானங்களில் குரு பார்க்கும்போது அதிர்ஷ்டமாக மாறும்.
குரு பார்வை
8, 12 ஆம் இடம் மாறும்போது நல்ல தூக்கம் ஏற்படும். மாத்திரைகள் சரியாக செட்டாகும். சனியின் பார்வை தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் விழுவதால், குரு பார்வை வரும்போது லாபம் உண்டாகும். மேஷத்திற்கு அருமையான காலகட்டமாக இருக்கும். ஜூனுக்குப் பிறகு பொருளாதாரம் நன்றாக இருக்கும். மேஷ ராசி குடும்பத் தலைவர்களுக்கு ஜூன் மாதத்திற்குப் பிறகு வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். உங்கள் செல்வாக்கு கூடும்.
பண வரவு கொட்டும்
கையில் காசு பணம் சேர்க்கும் யோகம் உண்டாகும். உங்களை அவமானப்படுத்தியவர்கள் முன்பு கெத்தாக வாழும் யோகம் உண்டாகும். மேஷ ராசியில் பிறந்த பெண்கள் கண்டிப்பாக சுயதொழில் ஆரம்பிக்கும் யோகம் உண்டாகும். உற்பத்தி செய்வது, கடை போடுவது, பால் வியாபாரம் செய்வது, டெக்ஸ்டைல், பொட்டிக் வைப்பது போன்ற யோகம் உண்டு. இரண்டு கிளைகள் ஆரம்பித்து வேலை செய்வீர்கள்.
திருப்புமுனை
ஏப்ரல், நவம்பர் மாதத்தில் வாழ்க்கையில் திருப்புமுனை உண்டாகும். காவல் துறையில் வேலை கிடைக்கும். 4 ஆம் இடம் என்பது மாணவ, மாணவிகளுக்கான இடம். சுக ஸ்தானமாக இருந்தாலும் குரு, சனி அமரும்போது அதிர்ஷ்டம் உண்டாகும். அரசுப் பள்ளியில் ஆசிரியராகும் யோகம், பேராசிரியராகும் யோகம் உண்டாகும். இன்ஜினியரிங் கோர்ஸ் எடுத்து படிப்பது நன்மை பயக்கும்.
காதலிப்பவர்கள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. கலைத் துறையில் இருப்பவர்கள் நன்றாக சம்பாதிக்கும் யோகம் உண்டு. கொழுப்பு, நெஞ்சகம், மார்பகம் தொடர்பான பிரச்சனைகளில் கவனம் தேவை. பண வரவு சூப்பராக இருக்கும். கால் பாதம், முதலீடு விஷயம் போன்றவற்றில் கவனம் தேவை.












Click it and Unblock the Notifications