Puthandu Palan: சிம்ம ராசிக்கு டிரான்ஸ்பர் கன்ஃபார்ம்.. வீடு, மனைனு செட்டிலாகும் யோகம்
புத்தாண்டு பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. வரப்போகின்ற புத்தாண்டு புதுமையைத் தருவதாக அமைய வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்குமே இருக்கும். அந்த வகையில், இந்தப் புத்தாண்டில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
2026 புத்தாண்டின் ஆரம்பத்திலேயே குரு பகவான் வக்ர நிவர்த்தியில் மிதுனத்தில் இருக்கிறார். பிப்ரவரி மாதம் வரைக்குமே குரு பகவான் வக்ரத்துடன் தான் இருக்கிறார். குரு வக்கிரமடைந்து ராகுவுடன் இணையும் போது பொதுவாகவே அந்த அளவுக்கு பிரம்மாண்டமான துவக்கமாக இந்த ஆண்டு இருக்காது. மார்ச் மாதம் வரைக்குமே எல்லோருக்கும் ஒரு சுமாரான காலகட்டமாகவே இருக்கும்.

மார்ச் மாதத்திற்குப் பிறகும் நல்ல மாற்றம் ஏற்படும். ஜூன் மாதத்திற்குப் பிறகு முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தும். குரு பகவான் உச்சம் பெற்று புஷ்ய யோகத்துக்கு வருகிறார். குரு பூசம் நட்சத்திரத்திற்கு வரும்போது நாடே நன்றாக இருக்கும். அந்த அளவுக்கு செல்வம் வளரும். தங்கம் விலை அபரிமிதான விலை உயர்வை அடையும். இந்தப் புத்தாண்டில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
சிம்மம் புத்தாண்டு பலன்
சிம்ம ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்தில் சனி, 7 ஆம் இடத்தில் ராகு அமர்ந்திருக்கிறார். விரயத்துக்கு குரு வரப்போகிறார். காலபுருஷனுக்கு 4 ஆம் வீடு. கடகத்துக்கு குரு ஜூன் மாதத்துக்குப் பிறகு வருவதால் இடமாற்றமாகும். சுபகாரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். வீட்டில் பெண்கள் இருந்தால் அவர்களுக்கு செலவுகள் செய்வீர்கள். மருத்துவமனை சார்ந்த செலவுகள் செய்யும் நிலை வரும்.
சுபச் செலவுகள்
பிள்ளைகளின் படிப்புகளுக்காக செலவு செய்வீர்கள். சுபச் செலவுகளை செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்படும். திரிகோணங்களில் சனி குரு வரும்போது வேறு ஊர்களுக்குச் செல்வது நன்மையைத் தரும். கடல் கடந்து ஒரு பயணத்தையாவது செய்வீர்கள். வெளியூர்களில் செட்டிலாகும் யோகம் உண்டாகும். வீடு, மனை வாங்கும் யோகம் ஏற்படும். வீடு கட்டும் யோகம் உண்டு.
கடன் தீரும்
கடன்கள் தீரும் நிலைமை ஏற்படும். ஏராளமான பிரச்சனைகள் நிவர்த்தியாகும். பொறுப்புகள் கூடும். பெரிய விஷயங்களைச் செய்து மகிழ்வீர்கள். தப்பான உறவுகளில் இருந்து வெளியில் வருவீர்கள். ஒரு சில பேருக்கு இதயப் பிரச்சனை, கண் பாதிப்பு போன்றவை ஏற்படும். ஒரு சிலருக்கு கால் முட்டி சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். பெரிய கடன்களை இந்த வருடத்தில் அடைத்து முடிப்பீர்கள்.
மறுமணம்
மறுமணம் நடக்கும் யோகம் உண்டாகும். விவாகரத்துக்கு காத்திருப்பவர்களுக்கு விவாகரத்தாகும். சிகிச்சையுடன் குழந்தை பிறக்கும் பாக்கியம் ஏற்படும். வியாழக்கிழமை தோறும் உபவாசம் செய்வது வியாசராஜரை வழிபாடு செய்வது நல்ல மாற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷம் 75 சதவீதம் நன்றாக இருக்கும். பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் 80 சதவீதம் நன்றாக இருக்கும்.












Click it and Unblock the Notifications