New Year Rasi Palan: குருவின் அருளால் துலாம் ராசிக்கு அள்ள அள்ள பணம் நகை.. ராஜவாழ்க்கை வாழப் போறீங்க
புத்தாண்டு பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. வரப்போகின்ற புத்தாண்டு புதுமையைத் தருவதாக அமைய வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்குமே இருக்கும். அந்த வகையில், இந்தப் புத்தாண்டில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
2026 புத்தாண்டின் ஆரம்பத்திலேயே குரு பகவான் வக்ர நிவர்த்தியில் மிதுனத்தில் இருக்கிறார். பிப்ரவரி மாதம் வரைக்குமே குரு பகவான் வக்ரத்துடன் தான் இருக்கிறார். குரு வக்கிரமடைந்து ராகுவுடன் இணையும் போது பொதுவாகவே அந்த அளவுக்கு பிரம்மாண்டமான துவக்கமாக இந்த ஆண்டு இருக்காது. மார்ச் மாதம் வரைக்குமே எல்லோருக்கும் ஒரு சுமாரான காலகட்டமாகவே இருக்கும்.

மார்ச் மாதத்திற்குப் பிறகும் நல்ல மாற்றம் ஏற்படும். ஜூன் மாதத்திற்குப் பிறகு முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தும். குரு பகவான் உச்சம் பெற்று புஷ்ய யோகத்துக்கு வருகிறார். குரு பூசம் நட்சத்திரத்திற்கு வரும்போது நாடே நன்றாக இருக்கும். அந்த அளவுக்கு செல்வம் வளரும். தங்கம் விலை அபரிமிதான விலை உயர்வை அடையும். இந்தப் புத்தாண்டில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
துலாம் புத்தாண்டு பலன்
துலாம் ராசிக்காரர்களுக்கு முக்கியமான ஆண்டாக உங்களுக்கு இருக்கும். இருக்கும் வேலையில் கட்டாய மாற்றம் உண்டாகும். ஒரு சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பது, அறிவுரை சொல்லக்கூடிய பாக்கியம், உற்பத்தி துறையில் அமருவது, வங்கிகளில் வேலை கிடைப்பது, ஆசிரியர் பணி, பேராசிரியர் பணி போன்றவை கிடைக்கும் அற்புதமான காலகட்மடாக இருக்கும்.
பணத்துக்கு நோ பஞ்சம்
வேலையில் இருப்பவர்கள் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லாமல் இருப்பது நல்லது. குருவுடைய ஸ்தானமாக இருப்பதால் அறிவுரை சொல்லக்கூடிய துறையில் இருப்பவர்களுக்கு நன்மை கிடைக்கும். ஜூன் வரைக்கும் எந்தவித மறைமுக விஷயங்களும் நடக்காது. ஜூனுக்குப் பிறகு வேலையில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும். உத்தியோகமே போனாலும் பணத்துக்குப் பஞ்சம் இருக்காது.
தங்க நகை வாங்கும் யோகம்
தங்க நகை வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். பணம், பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அடுத்த வேலைக்குத் தயாராகும் யோகம் ஏற்படும். உத்தியோகம் இல்லாமல் கொஞ்ச நாட்களாக இருந்தாலும் அடுத்த பயணம் பிரம்மாண்டமாக இருக்கும். உங்களைப் பொருத்தவரை எந்த விஷயத்தில் சுணக்கம் ஏற்பட்டாலும் அடுத்த அடி மிக வேகமாகவும், பலமாகவும் இருக்கும்.
வீடு வாங்கும் யோகம்
இந்த ஆண்டில் வீடு வாங்கக்கூடிய யோகம் உங்களுக்கு ஏற்படும். வீட்டில் நிறைய நல்ல காரியங்கள், சுப காரியங்களைச் செய்வீர்கள். புதிய உத்தியோகங்கள் கிடைக்கும். பணம் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் பிரம்மாண்டமான வெற்றிகளைப் பெறுவீர்கள். நிரந்தரமான வருமானம் கிடைக்கும். எதிரிகளை நினைத்து அச்சப்படத் தேவையில்லை.
வழிபாடு
எல்லா இடத்திலும் இனி உங்களைப் பற்றி பேசுவார்கள். 2 ஆம் இடத்துக்கு குருவின் பார்வை இருப்பதால் நீங்கள் பேசும் வார்த்தைக்கு மதிப்பு, மரியாதை ஏற்படும். எதிர்மறையான எந்த விஷயங்களும் நடக்காது. உத்தியோகம் விஷயத்தில், தொடை பகுதிகளில் கவனம் தேவை. நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை. சந்தோஷம் ரீதியாக 85 சதவீதம் நன்றாக இருக்கும். பொருளாதாரம் ரீதியாக 80 சதவீதம் நன்றாக இருக்கும். ஹயக்ரீவர் வழிபாடு செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications