New Year Rasi Palan: வெற்றிக் கொடி கட்டப் போகும் "விருச்சிக ராசி".. இனி தான் ஒரிஜினல் ஆட்டமே ஆரம்பம்
புத்தாண்டு பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறக்கப் போகிறது. வரப்போகின்ற புத்தாண்டு புதுமையைத் தருவதாக அமைய வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்குமே இருக்கும். அந்த வகையில், இந்தப் புத்தாண்டில் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
2026 புத்தாண்டின் ஆரம்பத்திலேயே குரு பகவான் வக்ர நிவர்த்தியில் மிதுனத்தில் இருக்கிறார். பிப்ரவரி மாதம் வரைக்குமே குரு பகவான் வக்ரத்துடன் தான் இருக்கிறார். குரு வக்கிரமடைந்து ராகுவுடன் இணையும் போது பொதுவாகவே அந்த அளவுக்கு பிரம்மாண்டமான துவக்கமாக இந்த ஆண்டு இருக்காது. மார்ச் மாதம் வரைக்குமே எல்லோருக்கும் ஒரு சுமாரான காலகட்டமாகவே இருக்கும்.

மார்ச் மாதத்திற்குப் பிறகும் நல்ல மாற்றம் ஏற்படும். ஜூன் மாதத்திற்குப் பிறகு முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தும். குரு பகவான் உச்சம் பெற்று புஷ்ய யோகத்துக்கு வருகிறார். குரு பூசம் நட்சத்திரத்திற்கு வரும்போது நாடே நன்றாக இருக்கும். அந்த அளவுக்கு செல்வம் வளரும். தங்கம் விலை அபரிமிதான விலை உயர்வை அடையும். இந்தப் புத்தாண்டில் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
விருச்சிகம் புத்தாண்டு பலன்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இந்தப் புத்தாண்டு சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும். பாக்கிய ஸ்தானத்தில் குரு அமரப் போகிறார். குருவின் அருளால் அத்தனை நல்ல விஷயங்களும் உங்களுக்கு நடக்கும். தைரியம், தன்னம்பிக்கை, முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். பார்வை பலம் ராசி, லக்கினத்தில் இருப்பதால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
திருமண யோகம்
வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும். திருமண யோகம் உண்டாகும். 100 சதவீதம் வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். பூர்வீக சொத்துகள் உங்கள் பெயர்களில் ரெஜிஸ்டர் செய்யும் அமைப்பு உள்ளது. மனதிற்கு பெரிய தெம்பு, தைரியம் ஏற்படும். சகோதர, சகோதரிகளிடம் இருந்து வந்த பிரச்சனைகள், வாக்குவாதங்கள் நிவர்த்தியாகும்.
குரு, சனி இணைவு
அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் உங்களிடம் நன்றாகப் பழகுவார்கள். உறுதுணையாக இருப்பார்கள். 2026 மார்ச், ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு எந்த கெட்டப் பெயரும் இல்லாமல் அற்புதமார வாழும் யோகம் ஏற்படும். 5, 9 க்கு உரிய பாவங்களில் திரிகோணங்களில் சனி, குரு இணைவு ஏற்படுவதால் நல்ல காரியங்கள், திருமணங்கள் நடக்கும் யோகம் உள்ளது. வீடு கட்டி கிரகப் பிரேவஷம் செய்யும் யோகம் ஏற்படும்.
சொத்துகள் கிடைக்கும்
பூர்வீக சொத்துகள் வந்து சேரும். செல்வாக்குகள் அபரிமிதமாக அதிகரிக்கும். பெரிய பெரிய இடங்களுக்கு நீங்கள் செல்லும் யோகம் உண்டாகும். அடுத்த ஒன்றரை ஆண்டுகள் நீங்கள் ராஜாவாக மாறும் யோகம் ஏற்படும். பெரிய வளர்ச்சி, தன்னம்பிக்கை ஏற்படும். மடாதிபதிகள் உங்கள் வீட்டிற்கு வருவார்கள். பெரியவர்களின் ஆசிர்வாதங்களை நீங்கள் வாங்குவீர்கள்.
அடுத்தடுத்து யோகம்
பூஜை, புனஷ்காரம், ஆன்மீகம் என எல்லா விஷயங்களிலும் இறங்குவீர்கள். நிறைய விருச்சிக ராசியினர் நீதிபதிகளாகும் வாய்ப்புகள், வெளியூர், வெளிநாடுகளில் செட்டிலாகும் யோகம், பேராசிரியர்களாகும் யோகம் என அனைத்து அமைப்பும் உள்ளது. 2026 இல் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புள்ளது. பலமான ஸ்தானமாக உள்ளது. எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி உண்டாகும். எல்லா விஷயங்களும் நன்றாக இருக்கும்.
வழிபாடு
சந்தோஷம், பொருளாதாரம் ரீதியாக 95 சதவீதம் நன்றாக இருக்கும். குலதெய்வ வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தை தரும். தாய், தந்தையின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது அற்புதமான யோகத்தை கொடுக்கும். நீண்ட வருடங்களுக்குப் பிறகு இதுமாதிரியான நேரம் உங்களுக்கு அமைந்துள்ளதால் இந்த காலகட்டத்தைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.












Click it and Unblock the Notifications