Puthandu Palan: புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கும் நடிகர்கள்?.. உச்சம் தொடப்போகும் ஷேர் மார்க்கெட்
புத்தாண்டு பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. வரப்போகின்ற புத்தாண்டு புதுமையைத் தருவதாக அமைய வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்குமே இருக்கும். அந்த வகையில், இந்தப் புத்தாண்டில் சினிமா துறை, கல்வி, தொழில், பெண்களுக்கு எப்படி இருக்கும், ஜாக்பாட் அடிக்கப்போகும் நடிகர்கள் யார் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
2026 புத்தாண்டின் ஆரம்பத்திலேயே குரு பகவான் வக்ர நிவர்த்தியில் மிதுனத்தில் இருக்கிறார். பிப்ரவரி மாதம் வரைக்குமே குரு பகவான் வக்ரத்துடன் தான் இருக்கிறார். குரு வக்கிரமடைந்து ராகுவுடன் இணையும் போது பொதுவாகவே அந்த அளவுக்கு பிரம்மாண்டமான துவக்கமாக இந்த ஆண்டு இருக்காது. மார்ச் மாதம் வரைக்குமே எல்லோருக்கும் ஒரு சுமாரான காலகட்டமாகவே இருக்கும்.

மார்ச் மாதத்திற்குப் பிறகும் நல்ல மாற்றம் ஏற்படும். ஜூன் மாதத்திற்குப் பிறகு முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தும். குரு பகவான் உச்சம் பெற்று புஷ்ய யோகத்துக்கு வருகிறார். குரு பூசம் நட்சத்திரத்திற்கு வரும்போது நாடே நன்றாக இருக்கும். அந்த அளவுக்கு செல்வம் வளரும். தங்கம் விலை அபரிமிதான விலை உயர்வை அடையும்.
பெண்களுக்கு எதிரான பிரச்சனைகள்
சனி எப்போது மேஷத்திற்கு செல்கிறாரோ அதுவரை பெண்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். ரிஷபம், கன்னி, தனுசு தொடர்பாகும் இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், வரதட்சணை பிரச்சனைகள் போன்றவை அதிகளவில் நடக்கும். குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் நடக்கக்கூடிய விஷயங்கள் பெரிதாக பேசப்படும்.
சனி தர்மத்தை நிலைநாட்டக் கூடிய இடம் என்பதால் அங்கு நடக்கும் பிரச்சனைகள் வெளிவரும். ரிஷபம் என்பது பெண்களுக்கான வீடு. அதனால், கண்டிப்பாக சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் வரைக்கும் நிறைய குற்றவியல் சம்பவங்கள், பெண்கள் தொடர்பான பிரச்சனைகள், சிறுமிகளுக்கு எதிரான பிரச்சனைகள் போன்றவை நடக்கும். லேடீஸ் ஹாஸ்டல், திருப்பதி போன்ற இடங்கள் அதிகளவில் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்புகள் 2027 மே மாதம் வரை தொடரும்.
தொழில் துறை எப்படி இருக்கும்?
சாஃப்ட்வேர் துறையில் இருக்கும் ஆட்குறைப்பு பிரச்சனை குறையும். குரு 4 ஆம் இடத்துக்கு வந்துள்ளதால் உற்பத்தித் துறையில் வேலை இழப்பு பிரச்சனை ஏற்படும். ஆசிரியர் துறையில் இருப்பவர்களுக்கு நிறைய பிரச்சனைகள் வேலை இழப்பு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. உற்பத்தி தொழிலில் இருப்பவர்களுக்கு வேலை போகும். ஆனால், சனி பகவானால் தனியாக தொழில் தொடங்கும் யோகம் ஏற்படும். முன்னேற்றப் பாதை அதிகமாக இருக்கும்.
கல்வி, ஷேர் மார்க்கெட்?
கல்வியில் இனி எளிமையான விஷயங்கள் நிறைய நடக்கும். ஏஐ போன்றவை பயன்படுத்தப்படும். சுயமாக செய்யக்கூடிய நிலை ஏற்படும். கற்பித்தலில் நிறைய முன்னேற்றம் ஏற்படும். ஷேர் மார்க்கெட் பொருத்தவரை அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். ஜூன் மாதம் வரை குரு ராகு இணைவில் இருப்பதால் நல்ல லாபம் உண்டாகும்.
பங்குச் சந்தையில் அநியாயமாக இருக்கக்கூடிய விஷயங்கள் எல்லாம் இனி நியாயமாக நடக்கும். கடகத்துக்கு குரு பூச நட்சத்திரத்தை தாண்டும் வரை தங்கத்தை வாங்கி குவிப்பார்கள். வங்கித் துறை, உற்பத்தி துறை போன்றவற்றில் நல்ல வளர்ச்சி ஏற்படும். ஜவுளித் துறை எளிமையாக நடக்கும்.
சினிமா துறையில் மாற்றம்
பெண்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். குழந்தைகளை மையப்படுத்தி வரும் படங்கள் வெற்றியடையும். சினிமா துறைக்கு நல்ல வளர்ச்சியடையும். டெக்னாலஜி வளர்ச்சியும் அற்புதமாக இருக்கும். சனி குரு காம்பினேஷனில் மீனாட்சி பெயர் கொண்ட நடிகைகள் வெற்றி பெறுவார்கள். புது நடிகர்கள் நிறைய பேர் வருவார்கள். ஹரீஸ் கல்யாண், சிவகார்த்திகேயன், பிரதீப் ரங்கநாதன், சிவகார்த்திகேயன், சூர்யா போன்ற நடிகர்களுக்கு சனி வக்கிர நிவர்த்தியாவதால் நல்ல நன்மைகள் நடக்கும்.
அதிர்ஷ்டம் பெறும் 5 ராசியினர்
2026 இல் மகர ராசிக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். 2026 இல் ஜாக்பாட் அடிக்கும் ராசி என்றால் மகர ராசியினர் தான். அதற்குப் பிறகு மீனம், நிறைய பிரச்சனைகளைச் சந்திக்கும் விருச்சிகம் அதிர்ஷ்டத்தை பெறும். நிறைய பேர் புதிய வேலை வியாபாரத்தை தொடங்கும் யோகம் என்றால் கடக ராசியினருக்கு உண்டு. கன்னி ராசியில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டத்தின் உச்சத்தைப் பெறுவார்கள். அந்த அளவுக்கு யோகமான காலகட்டமாக இருக்கும். இந்த 5 ராசியினருக்கு புத்தாண்டு யோகங்களை அள்ளிக் கொடுக்கும்.
திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அதிகளவில் முன்னேற்றமடையும். புதிய வேலை, தொழில், உத்தியோகம், வியாபாரம் போன்ற மாணவர்கள் உண்டாகும். மிகப்பெரிய சிக்கலைச் சந்தித்து வரும் சிம்ம ராசியினருக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும். மொத்தத்தில் 2026 ஆம் ஆண்டு நல்ல நிலையில் தான் ஆரம்பிக்கிறது.












Click it and Unblock the Notifications