Puthandu Palan: சொந்த வீடு வாங்கும் யோகம் பெறும் ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க
புத்தாண்டு பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. வரப்போகின்ற புத்தாண்டு புதுமையைத் தருவதாக அமைய வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்குமே இருக்கும். அந்த வகையில், இந்தப் புத்தாண்டில் சினிமா துறை, கல்வி, தொழில், பெண்களுக்கு எப்படி இருக்கும், ஜாக்பாட் அடிக்கப்போகும் நடிகர்கள் யார் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
2026 புத்தாண்டின் ஆரம்பத்திலேயே குரு பகவான் வக்ர நிவர்த்தியில் மிதுனத்தில் இருக்கிறார். பிப்ரவரி மாதம் வரைக்குமே குரு பகவான் வக்ரத்துடன் தான் இருக்கிறார். குரு வக்கிரமடைந்து ராகுவுடன் இணையும் போது பொதுவாகவே அந்த அளவுக்கு பிரம்மாண்டமான துவக்கமாக இந்த ஆண்டு இருக்காது. மார்ச் மாதம் வரைக்குமே எல்லோருக்கும் ஒரு சுமாரான காலகட்டமாகவே இருக்கும்.

மார்ச் மாதத்திற்குப் பிறகும் நல்ல மாற்றம் ஏற்படும். ஜூன் மாதத்திற்குப் பிறகு முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தும். குரு பகவான் உச்சம் பெற்று புஷ்ய யோகத்துக்கு வருகிறார். குரு பூசம் நட்சத்திரத்திற்கு வரும்போது நாடே நன்றாக இருக்கும். அந்த அளவுக்கு செல்வம் வளரும். தங்கம் விலை அபரிமிதான விலை உயர்வை அடையும்.
சொந்த வீடு கனவு
சொந்த வீடு வேண்டும் என்பது பெரும்பாலானோரின் கனவாக இருக்கும். ஆனால் அது எல்லோருக்கும் அமையுமா என்றால் அமையாது. கை நிறைய பணம் வைத்திருந்தும் இதுவரை என்னால் வீடு வாங்க முடியவில்லை என்று கூறுவோர் பல பேரை நாம் பார்த்திருப்போம். வீடு கட்ட முடியாது, வாங்க முடியாதது போன்ற நிலைகளில் இருப்பார்கள். இதுபோன்ற நிலை எப்படி மாறும் என்றால் திரிகோணங்கள் பொருந்திப் போகும்போது வீடு வாங்கும், கட்டும் யோகம் உண்டாகும்.
மேஷம், தனுசு, சிம்மம், கன்னி, மகர ராசியினருக்கு புத்தாண்டில் கண்டிப்பாக வீடு அமையும் யோகம் உண்டாகும். உங்கள் விருப்பத்திற்கேற்ப வீடு அமையும். அருகில் ஒரு நதி இருக்கும். கிராம தேவதை வீட்டின் அருகில் இருக்கும். பள்ளிகள் அருகில் அமையும். வீடு கட்டிச் செல்லும் யோகம் அதிகம் உள்ளது.
திருமண யோகம்
கடகம், விருச்சிகம், மீனம், மகரம், கன்னி ராசியினருக்கு இந்தப் புத்தாண்டில் கண்டிப்பாக திருமணம் நடக்கும். அல்லது உங்கள் வீட்டில், குடும்பத்தில் உள்ள மிதுனம், துலாம், கும்ப ராசியினருக்கு திருமணம் நடக்கும். வாழ்க்கை அற்புதமாக அமையும்
குழந்தை பாக்கியம்
மீனம், விருச்சிகம், கடக ராசியினருக்கு குழந்தை பாக்கியம் கட்டாயமாக கிடைக்கும். மகர ராசியினருக்கு இரண்டாம் குழந்தை பிறப்பதற்கான யோகம் உண்டாகும்.
காதல் கைகூடுமா..
குரு ராகு இருக்கும்போது காதலில் ஒருமாதிரியான நிலைமைகள் இருக்கும். வயது வித்தியாசம், ஜாதி மாறுபாடு போன்றவை இருக்கும். காதல் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடக்கும் யோகம் உண்டாகும். கடகத்துக்கு, மகரத்துக்கு 100 சதவீதம் காதல் உறுதியாகி, திருமணம் நடக்கும். கன்னி, ரிஷபம், மகரத்துக்கும் கேட்பதற்கு முன்னாலேயே காதல் கைகூடும் யோகம் உண்டாகும்.
சிம்மம், கும்ப ராசியினர் காதல் விஷயத்தில் பிரிவுகள், உடம்பு பாதிப்புகளைச் சந்திக்கும் நேரிடும். மேஷம், சிம்மம், தனுசு ஆகிய 3 ராசிகளும் குடும்பம் சார்ந்த விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்டம் பெறும் 5 ராசியினர்
2026 இல் மகர ராசிக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். 2026 இல் ஜாக்பாட் அடிக்கும் ராசி என்றால் மகர ராசியினர் தான். அதற்குப் பிறகு மீனம், நிறைய பிரச்சனைகளைச் சந்திக்கும் விருச்சிகம் அதிர்ஷ்டத்தை பெறும். நிறைய பேர் புதிய வேலை வியாபாரத்தை தொடங்கும் யோகம் என்றால் கடக ராசியினருக்கு உண்டு. கன்னி ராசியில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டத்தின் உச்சத்தைப் பெறுவார்கள். அந்த அளவுக்கு யோகமான காலகட்டமாக இருக்கும். இந்த 5 ராசியினருக்கு புத்தாண்டு யோகங்களை அள்ளிக் கொடுக்கும்.
திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அதிகளவில் முன்னேற்றமடையும். புதிய வேலை, தொழில், உத்தியோகம், வியாபாரம் போன்ற மாணவர்கள் உண்டாகும். மிகப்பெரிய சிக்கலைச் சந்தித்து வரும் சிம்ம ராசியினருக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும். மொத்தத்தில் 2026 ஆம் ஆண்டு நல்ல நிலையில் தான் ஆரம்பிக்கிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: ராஜாபகவத் போல மாறும் விருச்சிக ராசி.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கோடீஸ்வர யோகம் பெறும் சிம்ம ராசி.. அள்ளிக் கொடுக்கும் குரு, கேது பகவான் -
தமிழ் புத்தாண்டு பலன்: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருது.. இந்த விஷயத்தில் கவனம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது












Click it and Unblock the Notifications