Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புத்தாண்டு ராசிபலன் 2022: தனுசு ராசிக்கு ஏழரை சனி முடிவு... மீன ராசிக்கு ஏழரை சனி ஆரம்பம்

புத்தாண்டு பிறக்கப் போகிறது. 2022ஆம் ஆண்டு புத்தாண்டில் தனுசு, மகரம், கும்பம்,மீன ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2022ஆம் புத்தாண்டு சனிக்கிழமை கேட்டை நட்சத்திரத்தில் பிறக்கிறது. புத்தாண்டு பிறக்க இன்னும் ஒன்றரை மாதம் மட்டுமே உள்ளது. 2021 ஆண்டில் கொரோனா இரண்டாவது அலையில் பல லட்சம் உயிர்கள் பறிபோனது. பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டது. மழை, வெள்ளம் என இயற்கை சீற்றங்களும் மக்களை பாதிப்புக்கு ஆளாக்கி வருகிறது. உலகமே கொரோனாவின் பிடியில் இருந்து முழுமையாக மீளவில்லை. இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் இருந்தாலும் பல நாடுகளில் கொரோனாவின் ஆதிக்கம் முடிவுக்கு வரவில்லை. பிறக்கப்போகும் 2022ஆம் புத்தாண்டிலாவது மக்களுக்கு விடிவு காலம் பிறக்குமா? நவ கிரகங்களின் சஞ்சாரம் பார்வை காரணமாக தனுசு, மகரம், கும்பம், மீன ராசிகளில் பிறந்தவர்களுக்கு 2022ஆம் புத்தாண்டு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

சனிபகவான் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு நுழைகிறார். ஜூலை 12ஆம் தேதி வரைக்கும் சனிபகவான் கும்ப ராசியில் பயணிப்பார். பின்னர் வக்ரகதியில் பின்னோக்கி செல்லும் சனிபகவான் மகர ராசியில் ஆறு மாத காலம் பயணிக்கிறார். பின்னர் நேர் கதியில் 2023ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி கும்ப ராசிக்கு மீண்டும் இடப்பெயர்ச்சியாகிறார். 2025ஆம் ஆண்டு வரைக்கும் சனிபகவான் கும்ப ராசியில்தான் பயணம் செய்வார்.

ராகு பகவான் 12.04.22 ஆம் தேதி மாலை 5.08 மணிக்கு ராசியிலிருந்து மேஷம் ராசிக்குக பெயர்ச்சி அடைகிறார்.
அதே சமயம் கேது பகவான் விருச்சிகம் ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். குருபகவான் ஏப்ரல் 14, 2022ஆம் ஆண்டு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு அதிசாரமாக செல்கிறார். 2022ஆம் ஆண்டில் ஜூலை 29ஆம் தேதி மீண்டும் கும்ப ராசிக்கு வக்ரகதியில் திரும்புகிறார். நவம்பர் 24ஆம் தேதியன்று மீண்டும் கும்ப ராசியில் இருந்து நேர்கதியில் மீன ராசிக்கு செல்கிறார் குரு பகவான். இந்த கிரகப்பெயர்ச்சியால் தனுசு, மகரம், கும்பம், மீன ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

தனுசு

தனுசு

ஏழரை சனியின் பிடியில் சிக்கித்தவிக்கும் தனுசு ராசிக்காரர்களுக்கு 2022ஆம் ஆண்டு அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது. சனிபகவான் இரண்டாம் வீட்டில் இருந்து மூன்றாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சியாகப்போகிறார். ஏழரை சனியால் கடந்த ஏழரை ஆண்டு காலமாக பட்ட துன்பங்கள் துயரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல இனி உங்களின் துன்பங்கள் துயரங்கள் முடிவுக்கு வரும் காலம் வந்து விட்டது. சனிபகவான் மூன்றாவது வீட்டில் மறைவது நிறைய நன்மைகளைத் தரப்போகிறது. வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். குடும்ப வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரப்போகிறீர்கள். ராகு பகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரப்போவதால் பிள்ளைகளால் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும். கேது பகவான் லாப ஸ்தானத்திற்கு வரப்போகிறார். திடீர் யோகங்கள் தேடி வரும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும் ஆன்மீக பயணம் செல்வதற்கான ஏற்ற நேரம். உங்கள் ராசி நாதன் குரு பகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருந்து நான்காம் வீடான சுக ஸ்தானத்திற்கு செல்கிறார். குரு பகவான் ஆட்சி பெற்று அமர்ந்து உங்களுக்கு ஹம்ச யோகத்தை தரப்போகிறார். குருபகவானின் பார்வையும் உங்கள் ராசிக்கு சாதகமாக உள்ளதால் புதிய வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும் புரமோசன் கிடைக்கும். மொத்தத்தில் 2022ஆம் ஆண்டு தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டங்கள் நிறைந்த ஆண்டாக அமையவுள்ளது.

மகரம்

மகரம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே, 2022ஆம் ஆண்டு நவ கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. குடும்ப குருவினால் உங்களுக்கு நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும் ஏப்ரல் மாதத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டிற்கு மறையப்போகிறார். குரு மறைந்தாலும் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு ஆறாம் வீடு, எட்டு, பத்தாம் வீடுகளின் மீது விழுவதால் நோய்கள் நீங்கும். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். திடீர் அதிர்ஷ்டத்தினால் பண வரும் நிதி நெருக்கடிகள், பொருளாதார நெருக்கடிகள் முடிவுக்கு வரும். பிரிந்திருந்த சொந்த பந்தங்கள் ஒன்று சேருவார்கள். மன ரீதியாக ஏற்பட்ட மன உளைச்சல்கள் முடிவுக்கு வரும். சனி பகவான் ஜென்ம ராசியில் இருந்து இரண்டாம் வீட்டிற்கு செல்வதால் பேச்சில் கவனமும் நிதானமும் தேவை. பண விவகாரங்களில் வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். ஐந்தாம் வீட்டில் உள்ள ராகு உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டிற்கு இடம் மாறப்போவதால் வேலையில் இட மாற்றம் உண்டாகும். புது வீட்டிற்கு செல்ல வாய்ப்பு வரும். சொத்து சேர்க்கை ஏற்படும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமும் நிதானமும் தேவை. கேது உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டிற்கு இடம் மாறுவதால் புதிய வேலை வாய்ப்பு உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். நெருக்கடிகள் முடிவுக்கு வரும். 2022ஆம் ஆண்டு நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்த ஆண்டாக அமையவுள்ளது.

கும்பம்

கும்பம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்குள் அமர்ந்துள்ள குரு பகவான் 2022ஆம் ஆண்டு இரண்டாம் வீட்டிற்கு சென்று குடும்ப குருவாக அமரப்போகிறார். விரைய ஸ்தானத்தில் உள்ள சனிபகவான் உங்கள் ராசியில் வந்து ஜென்ம சனியாக அமரப்போகிறார். இன்னும் ஐந்து ஆண்டு காலத்திற்கு ஏழரை சனியின் பிடியில்தான் இருக்க வேண்டும் என்பதால் வேலை தொழிலில் கவனமும் நிதானமும் தேவை. உற்சாகமான மனநிலையில் இருந்தாலும் ஏதோ ஒரு பாரம் வந்து மனதை அழுத்துவது போல உணர்வீர்கள். தொழிலில் அகலக்கால் வைத்து சிக்கிக்கொள்ள வேண்டாம். அதிக கடன் வாங்கவும் வேண்டாம். ராகு உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டிற்கு வருவதால் இளைய சகோதர சகோதரிகளின் உதவிகள் கிடைக்கும். காதில் பிரச்சினை வரலாம் கவனம் தேவை. பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்யும் கேதுவினால் ஆன்மீக பயணம் செல்வீர்கள். சொந்த பந்தங்களின் வீட்டு விஷேசங்களில் பங்கேற்பீர்கள். சொத்து சேர்க்கையும் ஏற்படும். சொந்த வீடு வாங்கும் யோகமும் உண்டாகும்.

மீனம்

மீனம்

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே, உங்கள் ராசி அதிபதி குரு பகவான் விரைய ஸ்தானத்தில் இருந்து உங்கள் ராசிக்கு வந்து அமரப்போகிறார். ஜென்ம குருவாக இருந்தாலும் யோகங்களைத் தரப்போகிறார். திடீர் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். வேலையில் புரமோசனும் சம்பள உயர்வும் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். குருவின் பார்வையால் திருமண சுப காரியங்கள் கைகூடி வரும். புத்திரபாக்கியம் கிடைக்கும். சனி பகவான் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்திற்கு வருகிறார். உங்களுக்கு ஏழரை சனி காலம் ஆரம்பிக்கப் போகிறது. குரு கூடவே இருந்து உங்களைக் காப்பாற்றுவார் என்றாலும் ஆணவமும், தலைக்கனமும் இருந்தால் சனிபகவான் தட்டித்தான் வைப்பார் கவனம் தேவை. இதுநாள் வரை சம்பாதித்த பணத்தை எல்லாம் சனிபகவான் செலவு செய்ய வைப்பார். சுப விரைய செலவுகளாக மாற்றுங்கள். ராகு உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டிலும் கேது உங்கள் ராசிக்கு எட்டாவது வீட்டிற்கும் வருவதால் குடும்பத்தில் சின்னச் சின்ன சண்டைச் சச்சரவுகள் வரும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பண விசயங்களில் யாருக்கும் வாக்குக் கொடுத்து சிக்கிக்கொள்ள வேண்டாம். கவனமும் நிதானமும் தேவைப்படும் ஆண்டாக அமைந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+