ராகு கேது பெயர்ச்சி 2022: இந்த ராசிக்காரர்களுக்கு காசு மேல காசு வந்து கொட்டப்போகுது
ராகு பகவான் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். அதே போல கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.
சென்னை: பிலவ வருடம் பங்குனி மாதம் 7ஆம் தேதி மார்ச் 21ஆம் தேதி திங்கட்கிழமை வாக்கியப்பஞ்சாங்கப்படி ராகு கேது பெயர்ச்சி நிகழ உள்ளது. திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பங்குனி மாதம் 29ஆம் தேதி ஏப்ரல் 12ஆம் தேதி ராகு பகவான் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். அதே போல கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த இடப்பெயர்ச்சியால் தனுசு, மகரம், கும்பம், மீன ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். பிறந்த ஜாதகத்தில் ராகு- கேது மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், ஆகிய வீடுகளில் இருந்தால் வலுவான யோகம் உண்டு என்று நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. ஜனன ஜாதகத்தில் ராகு கேது 3, 6, 11 ,ஆகிய இடங்களில் நல்ல பலனை தரக்கூடியவை. ராகு கேதுவுக்கு 3, 7, 11, பார்வைகள் விசேசமானது.
நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள். மேஷத்திற்கு வரப்போகும் ராகு செவ்வாயை போலவும் துலாம் ராசிக்கு வரப்போகும் கேது சுக்கிரனைப் போலவும் பலன் தரப்போகிறார்கள்.

தனுசு
தனுசு ராசி நண்பர்களே இது வரை 6ல் இருந்த ராகு 5ம் இடத்திற்கும் 12ல் இருந்த கேது 11ம் இடத்திற்க்கும் வருகிறார்கள். 5ஆமிடம் என்பது புத்திரபாக்கியம்,தெய்வ அருள் புண்ணியங்கள் காதல் உல்லாசம் கேளிக்கை கதை கவிதைகளில் ஆர்வம் இவை அனைத்தும் 5 இடத்தின் காரகத்துவங்கள். 11ம் இடம் என்பது லாபம் மூத்த சகோதரம், எண்ணங்கள் நிறைவேறுதல் ஆகியவற்றை குறிக்கும். எற்கனவே ராகு இருந்த இடம் நல்ல இடமாக இருந்தாலும் 12ல் இருந்த கேது உங்களுடைய தூக்கத்தை கெடுத்து உங்களை விட்டார். ஓரு சிலர் தந்தைக்கு கர்ம காரியங்களையும். சிலர் பெற்றோர்களுக்கு நோய் நொடிகளுக்கு வைத்திய செலவுகளை செய்ய வைத்து கடன் சுமையை எற்படுத்தினார்கள். 5ம் இடத்திற்கு ராகு வருவதால் முன்னோர் வகையில் உள்ள தோஷம் நீங்கி சுகம் பெறலாம்.
கேது 11ல் வருவதால் தொட்டது துலங்கும். தேவையற்ற செலவுகள்கள் குறையும் செய்யும் முயற்சிகள் வெற்றி பெறும். இது வரை தடைபட்ட காரியத்தை செவ்வனே செய்து முடிப்பீர்கள். உற்றார் உறவினர் நண்பர்கள் மூலம் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். கடன் சுமை குறையும் தொழில் விசயங்கள் ஏற்றத்தை தரும். இது வரை திருமணம் ஆகி புத்திரபாக்கியம் தடைப்பட்ட தம்பதியினருக்கு புத்திரபாக்கியமும் குடும்பத்தில் அமைதியும் நிலவும்.
போதுமான வருமானம் வந்தாலும் நிம்மதி குறைந்த வாழ்க்கை வாழ்ந்த உங்களுக்கு ராகு கேது பெயர்ச்சி நிம்மதியை தரும்.

மகரம்
மகர ராசியில் பிறந்தவர்களே இது வரை உங்க ராசிக்கு 5ஆம் இடத்திலும்,11ஆம் இடத்திலும் இருந்த ராகு,கேது. இப்பொழுது 4ஆம் இடத்திற்கும்,10,இடத்திற்கும் மாறுகிறார்கள். ஏற்கனவே இருந்த இடம் யோகமான இடம்தான்.
4ஆம் பாவம் தாயார்,சுகம்,வாகனம் கல்வி,நிலபுலன்கள் ஆகியவற்றை குறிக்கும் இந்த 4ஆம் பாவத்திற்க்கு ராகு வருகிறார். கேந்திரத்தில் வரும் ராகு கேது இது வரை தடைப்பட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பதற்கு உதவுவார்கள். தாயார் வழியில் சில தேவைற்ற செலவுகள் உண்டாகலாம். பூமி வீடு வாகனம் வாங்கும் யோகத்தை கொடுப்பார். சிலருக்கு இடமாற்றம் தொழில் மாற்றம் வரலாம். பழைய கடன்கள் அடைப்படும். புதிய கடன் வாங்கி சுபகாரியம்,திருமணம்,பிள்ளைகள் படிப்புக்கு செலவு செய்ய நேரிடும். தொட்டது துலங்கும் நல்லவர்களின் ஆதரவு கிடைக்கும். பத்தாம் இடம் என்பது தொழில், மாமியார் வீடு, உத்தியோகம் வேலை வாய்ப்பு ஆகிய ஸ்தானங்களுக்கு கேது வருகிறார். லாப ஸ்தானத்தில் இருந்து யோகத்தை செய்த கேது இப்பொழுதும் யோககாரனாக செயல்பட்டு யோகபலனை வாரி வழங்குவார். தனம் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில் நிலை முன்னேற்றத்தை தரும். யோகம் வசதி வாய்ப்புகள் கூடும் எதிர்பாராத திருப்பத்தை தரும் தொழிலில் இடமாற்றம் உத்தியோக உயர்வு விரும்பிய வண்ணம் கிடைக்கும். நல்லதே நடக்கும்.

கும்பம்
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியில் இது வரை 4ஆம் இடத்தில் ராகு 3ஆம் இடத்திலும் 10ம் இடத்தில் இருக்கும் கேது 9ஆம் இடத்திலும் வருகிறார்கள். 3ம் இடம் என்பது இளைய சகோதரம், தைரியம், வீரம் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானங்களில் ராகு வருகிறார். ராகு பதினொன்று,முன்று,ஆறாம் இடத்திற்கு சேரின் பாகு தேன் பழமும் பாலும் வற்றாத தனமும் உண்டாகும். ராகு இப்பொழுது யோகத்தை வழங்க போகிறார். கடந்த முன்று ஆண்டுகளாக கஷ்டம், பலவிதமான பிரச்சனைகள் கடன், வம்பு, வழக்குகள் இதை எல்லாம் முறியடித்து தலைநிமிர்ந்து வாழ வழி செய்யும். கடந்த ஓன்றறை ஆண்டுகளாக வரன் தேடியும் அமையாத திருமண நிகழ்ச்சிகள் சுபமாக முடியும். செய்யும் தொழிலிலோ பார்க்கிற வேலையிலோ திருப்தி இல்லாத நிலைமாறி தைரியத்துடன் புது தெம்புடன் செழிப்பான வாழ்க்கை அமையும். புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும்.தேவைகள் பூர்த்தியாகும். உங்களுடைய நீண்ட கால கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் நீண்ட நாள் பிரச்சனைகள் தீரும்.மோட்சத்தை கொடுக்க கூடிய கேது 9ஆம் வீட்டிற்கு வருவதால் காரியத்தடைகள் நீங்கும்.கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி யாரை எல்லாம் தேடி தேடி உதவி கேட்டீர்களோ அவர்கள் எல்லாம் தானாக நாடி வந்து உதவி செய்வார்கள். புத்திர பாக்கியமும் அதனால் பெற்றோர்களுக்கு புகழ் பெருமை கிடைக்கும். எந்த பிரச்சினைகள் வந்தாலும் ராகு கேது உங்களை காப்பாற்றுவார்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களே, 2ஆம் இடத்தில் ராகுவும்,8ஆம் இடத்திற்கு கேதுவும் வருகிறார்கள். எற்கனவே ராகு கேது இருந்த இடமும் யோகமான இடம் தான். 2ம் இடம் என்பது செல்வம், குடும்பம்,பணம் கையிறுப்பு, அசையும் சொத்துக்கள், கண்கள்,வாக்கு, நாணயம் இவைகளை குறிக்கும் பாவமாகும். இதில் ராகு வருவதால் பூர்வீக சொத்து வீடு மனைகளால் பிரச்சனை வரலாம். எதிலும் நிதானமாக பேசியும் அமைதியாகவும் செயல்படுவது நல்லது. அரசு மற்றும் வெளிநாட்டு வேலைகளுக்கு காத்து இருந்தவர்களுக்கு வாய்ப்பு கை கூடிவரும். வீடு பூமி வாகனம் சம்பந்தபட்ட வகையில் சுப விரையம் வரலாம். அன்னிய இனத்தவர்களால் அனுகூலம் ஆதாயம் உண்டு. எதிர்பாராத அதிர்ஷ்டமும் ஆதாயம் வந்தாலும் யாரோ பட்ட கடனுக்கு நீங்கள் பொறுப்பேற்று கடனை அடைக்கும் நிலையும் வரலாம். தடைப்பட்ட காரியங்கள் சுபநிகழ்ச்சிகள் ஆரம்பத்தில் கலகத்துடன் ஆரம்பித்து இறுதியில் சுபமாக முடியும். கேது 8ல் இருப்பதால் தொட்டது துலங்கும். போட்டி பொறாமை எதிரி எல்லாவற்றையும் கேது பகவான் அழிப்பார். இந்த ஆண்டு வருமானம் சிறப்பாக இருக்கும்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications