ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 கடகம்: கடக ராசிக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் இதோ !!
ராகு கேது பெயர்ச்சி கடகம் ராசிக்காரர்களுக்கு லாப ஸ்தான ராகுவாகவும், பூர்வ புண்ணிய ஸ்தான கேதுவாகவும் வந்து அமரப்போகின்றனர். ராகுவும் கேதுவும் இனி உங்களுக்கு ராஜயோகத்தை தரப்போகின்றனர்.
சென்னை: ராகு கேது பெயர்ச்சி வாக்கியப்பஞ்சாங்கப்படி செப்டம்பர் 1ஆம் தேதி நடக்கிறது. அதே நேரத்தில் திருக்கணித பஞ்சாங்கப்படி செப்டம்பர் 23ஆம் தேதியன்று ராகு கேது பெயர்ச்சி நிகழ்கிறது. கடக ராசி கடக லக்னகாரர்களுக்கு ராகு லாப ஸ்தானத்திலும், கேது ஐந்தாம் வீட்டிற்கும் வருகின்றனர். இது யோகமான கால கட்டமாக அமையப்போகிறது. தடைகள் நீங்கப் போகிறது. உங்களின் முன்னோர்களின் அனுகிரகமும் கிடைக்கக் கூடிய கால கட்டமாக அமைந்துள்ளது.
கடக ராசிக்காரர்கள் கண்டச்சனியாலும் விரைய ராகு, ஆறாம் இட கேதுவினாலும் பல நெருக்கடிகளையும் சுமைகளையும் சந்தித்து வந்தீர்கள். உங்களுக்கு இதுநாள் வரை இருந்த பிரச்சினைகள் நீங்கப்போகிறது. காரணம் 12ஆம் வீட்டு ராகு ஆறாம் வீட்டு கேது பல சிக்கல்களை சந்தித்தீர்கள்.
இனி இந்த ராகு கேது பெயர்ச்சி ஒன்றரை ஆண்டுகாலம் உங்களின் வலிகளுக்கு மருந்தாக அமையப்போகிறது. குடும்பத்தில் நிம்மதி சந்தோஷம் ஏற்படும். உங்களின் பேச்சிற்கு மதிப்பு மரியாதை கூடப்போகிறது. இந்த ராகு கேது பெயர்ச்சியால் இன்னும் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

ராஜ யோக வாழ்க்கை
ராகு 11ஆம் வீட்டிற்கு வருவது அற்புதமான ஸ்தானம். ராஜவாழ்க்கை கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகிறது.
உங்களுக்கு ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடிகளும் தீரப்போகிறது. வரவேண்டிய பணம் தடைகள் இல்லாமல் வந்து சேரும். கணவன் மனைவி உறவில் நெருக்கம் கூடும் நன்மைகள் அதிகரிக்கும். பிரிந்து போனவர்கள் ஒன்றிணைவார்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

தொழில் லாபம் அதிகரிக்கும்
வெற்றி மீது வெற்றிகள் தேடி வரப்போகிறது. நீங்கள் எதிர்பார்த்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். வீண் விரைய செலவுகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நீங்கள் செய்யும் முதலீடுகள் எல்லாம் இனி லாபமாக மாறப்போகிறது. நிகர லாபம் அதிகரிக்கும்.

நெருக்கடிகள் நீங்கும்
வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட கஷ்டங்கள் நீங்கப்போகிறது. அலுவலகத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உங்க உயரதிகாரிகளால் இருந்த தொந்தரவுகள் நீங்கும். வேலை செய்யும் இடத்தில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். தொழில் முறையில் இருந்த போட்டி பொறாமைகள் நீங்கும்.

ஆரோக்கியம் அற்புதம்
ராகு யோக காரகன் இந்த ராகு கேது பெயர்ச்சியால் உங்களுக்கு ஜாக்பாட் அடிக்கலாம். வீடு கட்டும் யோகம் வரும், வண்டி வாகனம் வாங்கும் யோகம் வரும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பிள்ளைகள் இருந்த கஷ்டங்களும் மன உளைச்சலும் நீங்கும். உங்களின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்களும் நீங்கும்.

புத்திர பாக்கியம் கிடைக்கும்
வேலையில் கவனமும், விழிப்புணர்வும் தேவை. கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்தாலும் அது எல்லாம் விரைவில் நீங்கிவிடும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். பெண்களுக்கு இருந்த பிரச்சினைகள் நீங்கும். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கித் தவிப்பவர்களுக்கு சந்தான பாக்கிய வரம் கிடைக்கும்.

யோகமான கால கட்டம்
ராகுவின் பார்வை உங்க ராசிக்கு பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் விழுவதால் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வெளிநாட்டில் வசிப்பவர்கள் கவனமாக இருங்க. சிலருக்கு கல்வி, வேலைக்காக வெளிநாடு செல்லும் யோகம் வரும். தகவல் தொடர்பு துறையில் வேலை செய்பவர்களுக்கு சிறப்பு ஏற்படும்.

வேதனைகள் தீரும்
பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் வேதனைகள் நீங்கும். கோர்ட் பிரச்சினைகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் நீங்கும். சிலருக்கு இடம் மாற்றம் ஏற்படும். சிலருக்கு புதிய பதவிகள் தேடி வரும். இந்த ராகு கேது பெயர்ச்சி 18 மாதங்களுக்கு உங்களின் மன வேதனை, உடல் வேதனைகளை போக்கி சந்தோஷத்தையும், நிம்மதியையும் தரப்போகிறது. விநாயகருக்கு தினசரி அருகம்புல் வைத்து வணங்கலாம். துர்க்கை அம்மனுக்கு அரளி மாலை சாற்றி வணங்கலாம் கூடுதல் நன்மைகள் நடைபெறும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications