Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 மிதுனம்: மிதுன ராசிக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் இதோ !!

ராகு கேது பெயர்ச்சி மிதுனம் ராசிக்காரர்களுக்கு விரைய ராகுவாகவும், ருண ரோக சத்ரு ஸ்தான கேதுவாகவும் வந்து அமரப்போகின்றனர். ராகுவும் கேதுவும் மறைந்து நின்று யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் தரப்போகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜென்மத்தில் இருக்கும் ராகுவினால் கடந்த 18 மாதங்களாக மிதுனம் ராசிக்காரர்களுக்கு தினம் தினம் போராட்டம்தான். காரணம் கண்டச்சனி அதை தொடர்ந்து வரும் அஷ்டமத்து சனி குடும்பத்தை கூறு போட்டது. ஜென்மத்தில் இருந்த ராகு மன போராட்டம் வலிகள், குழப்பங்களை கொடுத்தது தெளிவான மனநிலை இல்லை ஒரே பிரச்சினைதான். ஒவ்வொரு நாட்களும் ரணமாக கடந்தது. இனி உங்களுக்கு நிம்மதி கிடைக்கப்போகிறது. விரைய ஸ்தானத்திற்கு வரப்போகும் ராகுவும் ஆறாம் வீட்டிற்கும் வரப்போகும் கேதுவும் நிறைய சந்தோஷங்களை கொடுக்கப் போகிறார்கள்.

உங்க ராசி மீது வந்து அமர்ந்த ராகு நிறைய பிரச்சினைகளை கொடுத்தார். தெளிவான முடிவு எடுக்க முடியாமல் இருந்தது. ஒரு முக்கிய நிகழ்வாக இப்போது ராகு உங்க ராசியை விட்டு நகர்கிறார். கேது உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் இருந்து நகர்ந்து விடுவதால் நல்லது நடக்கும். இதன் மூலம் குடும்பத்தில் நிம்மதி இழந்து இருந்தவர்களுக்கு சந்தோஷமான வாழ்க்கை அமையும்.

இனி உங்களுக்கு பணம் சார்ந்த விசயத்தில் நிறைவு ஏற்படும். உங்க முதலீடுகள் எல்லாம் நிறைய லாபமாக திரும்ப வரும். உங்க வார்த்தைக்கு மதிப்பு கிடைக்கும். உங்க மனதிற்கு பிடித்தமாதிரியான சம்பவங்கள் நடைபெறும்.

விரைய ராகு 6ல் கேது

விரைய ராகு 6ல் கேது

ராகு 12ஆம் வீட்டில் மறைகிறார் கேது 6ஆம் வீட்டில் மறைகிறார். இது யோக பலன்தான். மண் மனை யோகம் வரும் வீடு கட்டலாம். சந்தோஷம் தன்னிறைவை கொடுக்கும். அற்புதமான தெளிவான முடிவுகளை எடுக்கலாம். இனி விட்ட தொழிலை மீண்டும் தொடங்கலாம். செய்யும் பிசினஸ்ல லாபம் கிடைக்கும். தொழில் நஷ்டங்கள் நீங்கும்.

புத்திரபாக்கியம் கிடைக்கும்

புத்திரபாக்கியம் கிடைக்கும்

புத்திரபாக்கியம் கிடைப்பதில் ராகு கேதுவினால் ஏற்பட்டு வந்த தடைகள் நீங்கும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். ஒற்றுமை அதிகரிக்கும். காதலன் காதலிடையே இருந்த சிக்கல்கள் நீங்கி திருமணம் நடைபெறும். கோர்ட் வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும் பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வேலையில் இருந்த தடைகள், பதவி உயர்வில் இருந்த தடைகள் நீங்கும்.

யோகமான ராகு கேது பெயர்ச்சி

யோகமான ராகு கேது பெயர்ச்சி

கடன் சுமை நீங்கும். கடனால் ஏற்பட்ட நெருக்கடிகள் முடிவுக்கு வரப்போகுது. உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைளும் மறையப்போகிறது. உங்களுக்கு வரவேண்டிய பாக்கி பணம் வந்து சேரும். வெளிநாடு யோகம் தேடி வரும். நன்மைகளை தரக்கூடிய ராகு கேது பெயர்ச்சியாக அமையப்போகிறது. மிதுனம் ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி மிகச்சிறந்த மாற்றங்களை தரப்போகிறது.

புதிய வேலை கிடைக்கும்

புதிய வேலை கிடைக்கும்

துன்பங்கள் துயரங்கள் தீரப்போகிறது. நல்லது நடப்பதற்கான காலம் கை கூடி வரப்போகிறது. ராகுவின் பார்வை தன ஸ்தானத்தின் மீது விழுவதால் பணவரவு கிடைக்கும். தடைபட்டு கிடந்த பணம் வீடு தேடி வரும். ராகுவின் பார்வை பத்தாம் வீட்டின் மீது விழுகிறது. பலருக்கு புதிய வேலை கிடைக்கும். சிலருக்கு உயர் பதவி கிடைக்கும். வேலையில் உயரதிகாரிகளால் இருந்த தொந்தரவுகள் நீங்கும். தடைகள் நீங்கும்.

விநாயகர் வழிபாடு நன்மை தரும்

விநாயகர் வழிபாடு நன்மை தரும்

குடும்ப வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். விவாகரத்து வரை சென்ற தம்பதியர்கள் மனம் மாறி ஒன்று சேரும் வாய்ப்பும் காலமும் வரப்போகிறது. மகிழ்ச்சி பூக்கள் பூக்கத்தொடங்கும். அதே நேரத்தில் புதிய சொத்துக்கள் வாங்கும் முன்பாக நன்றாக விசாரணை செய்யவும். வில்லங்கமான இடங்களில் போய் மாட்டிக்கொள்ள வேண்டும். உணவில்கவனமாக இருங்க. வயிறு பிரச்சினை வரலாம் எச்சரிக்கை தேவை. விநாயகர் வழிபாடு நல்லது. தினசரியும் பூஜை அறையில் விநாயகருக்கு அருகம்புல் வைத்து வழிபடுங்க உங்களுடைய வேதனைகள் எல்லாம் தீரப்போகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+