Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகு கேது பெயர்ச்சி எப்போது? எந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பு? யாருக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்

ராகு கேது பெயர்ச்சி பங்குனி மாதம் நிகழ உள்ளது. ராகு மேஷ ராசிக்கும், கேது துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சியாகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரிஷப ராசியில் உள்ள ராகு மேஷ ராசிக்கும், விருச்சிக ராசியில் உள்ள கேது துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சியாகின்றனர். பிலவ வருடம் பங்குனி 7ம் தேதி திங்கள் கிழமை மதியம் 3.02 மணிக்கு திங்கட்கிழமை வாக்கியப்பஞ்சாங்கப்படி ராகு கேது பெயர்ச்சி நிகழ உள்ளது திருக்கணித பஞ்சாங்கத்தின்படி பிலவ வருடம், பங்குனி மாத 29ம் தேதி 12.04.2022 மதியம் 1.38 மணியளவில் ராகு கேது பெயர்ச்சி நிகழ உள்ளது.

ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். ஜனன ஜாதகத்தில் ராகு கேது 3, 6, 11 ,ஆகிய இடங்களில் அமரும் போது நல்ல பலனை தரக்கூடியவை. ராகு கேதுவுக்கு 3, 7, 11, பார்வைகள் விஷேசமானது.

பிறந்த ஜாதகத்தில் ராகு- கேது மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், ஆகிய வீடுகளில் இருந்தால் வலுவான யோகம் உண்டு என்பது ஜோதிட விதி. நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள். இந்த ராகு கேது பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் கோடீஸ்வர யோகம் பெறப்போகிறார்கள். அதே நேரத்தில் ரிஷபம், கடகம், துலாம், மகரம், ராசிக்காரர்கள் பரிகாரம் செய்தால் பாதிப்புகள் குறைய வாய்ப்பு உள்ளது.

ராகு கேது பெயர்ச்சி

ராகு கேது பெயர்ச்சி

ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள். ராகு இப்போது மேஷ ராசியில் செவ்வாய் வீட்டில் அமர்ந்து செவ்வாயைப் போல செயல்படப்போகிறார். கேது இனி துலாம் ராசியில் அமர்ந்து சுக்கிரனைப் போல செயல்படப்போகிறார்.

மேஷம்

மேஷம்

ராகு ஜென்ம ராசியில் அமர்ந்து 7ம் இடத்தை பார்ப்பதால் இது வரை செய்த பரிகாரங்களுக்கு இப்பொழுது தான் பலன் கிடைக்கும். திருமண யோகம் வரும். உத்தியோக உயர்வு கல்வி மேன்மையை பெற்று நல்ல வேலைக்கு போகலாம். உயர்கல்வியும் படிக்கும் வாய்ப்பு வரும். கேது 7ஆம் வீட்டில் இருப்பதால் வீண் விரைய செலவு அதிகரிக்கும் சுப செலவுகளாக மாற்றுங்கள். காரியங்களில் கவனமும் விழிப்புணர்வும் அவசியம்.

மிதுனம்

மிதுனம்

ராகு லாப ஸ்தானத்தில் அமர்ந்து வெற்றியை தருவார். தொழில் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபத்தை தருவார் ராகு பகவான். மறைமுக வழியில் பங்குச்சந்தை முதலீடுகளில் லாபம் தருவார் ராகு பகவான். எதிர்பார்ப்பு எண்ணங்கள் ஈடேறும். கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறார் ராகுபகவான்.

 சிம்மம்

சிம்மம்

ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் ராகு பயணம் செய்யப்போகிறார். நல்லது நிறைய நடக்கும் ராகு அள்ளித்தரப்போகிறார். புது வீடு கட்டலாம். புது தொழில் தொடங்கலாம். உங்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படப்போகிறது. யோகங்கள் நிறைந்த ராகு கேது பெயர்ச்சியாக உள்ளது. திடீர் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. எதிர்பாராத பண மழையில் நனையத் தயாராகுங்கள்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவு வரும். எட்டாவது வீட்டில் மறையப்போகும் ராகு பகவான் மறைமுக வழியில் திடீர் பண வரவைத் தரப்போகிறார். எதிர்பாராத வழிகள் மூலம் பணம், சொத்து கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் கோடீஸ்வரர் ஆக வாய்ப்பு உள்ளது. வரப்போகும் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கத் தயாராகுங்கள்.

 விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு ராகு ராசி நாதன் செவ்வாயைப் போல செயல்படப்போகிறார். ஜென்ம கேது மன ரீதியாக நிறைய வலிகளை கொடுத்து வந்தார். சில மாதங்களில் முடிவுக்கு வரப்போகிறது. புதிய தெம்பும் தைரியமும் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். திடீர் பண வரவு வந்து திக்கு முக்காட வைக்கப்போகிறது. ராகு கேது பெயர்ச்சி மிகப்பெரிய வெற்றியை தரப்போகிறது.

தனுசு

தனுசு

ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமரப்போகும் ராகு பகவானால் முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்துக்கள் கிடைக்கும். அந்த பணத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். ஏதாவது ஒரு வழியில் பணம் தேடி வரும். பிள்ளைகள் வழியில் யோகம் தேடி வரும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் அதிகரிக்கும். ஒன்றரை வருடத்தில் கோடீஸ்வர யோகத்தை தேடித்தருவார்.பணப்பிரச்சினை நீங்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் இருந்த மந்தத்தன்மை நீங்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் முடிவுக்கு வரும். போட்டி பொறாமைகள் விலகும் காலம் வரப்போகிறது.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு ராசிக்கு மூன்றாவது வீட்டிற்கு ராகு வருவதால் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இரட்டிப்பு லாபம் கிடைக்கும். பாக்ய ஸ்தானத்திற்கு வரப்போகும் கேது அப்பா வழி சொத்துக்களை தேடித்தருவார். முன்னோர் வழி சொத்துக்கள் மூலம் பண வரவு அதிகரிக்கும். வீண் விரைய செலவுகளைத் தவிர்த்தால் இந்த ராகு கேது பெயர்ச்சி காலத்தில் கோடீஸ்வரர் ஆகும் யோகம் தேடி வரும்.

மீனம்

மீனம்

ராகு அள்ளிக்கொடுப்பார். திடீரென கோடீஸ்வர யோகத்தையும் தருவார். கேது மோட்ச காரகன் தடை செய்வார்.
மீன ராசி மீன லக்னகாரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தருவார். ஏதாவது ஒரு விதத்தில் பணம் வரும். பேசியே காரியம் சாதிப்பார்கள். ராகு 2ஆம் வீட்டில் குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்து பயணம் செய்வதால் பணத்தை அள்ளிக்கொடுப்பார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+