ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: தீபாவளிக்கு முன் அதிர்ஷ்டம்.. கோடீஸ்வர யோகம் யாருக்கு தேடி வரும்
சென்னை: நவ கிரகங்களில் சர்ப்ப கிரகங்களான ராகு கேது கிரகங்கள் திருக்கணிதப்பஞ்சாங்கப்படி அக்டோபர் 30ஆம் தேதி இடப்பெயர்ச்சி அடைகின்றன. ராகு மீன ராசிக்கும் கேது கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைவதால் மேஷம், ரிஷபம்,மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய 6 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன் கிடைக்கும் கோடீஸ்வர யோகம் யாருக்கு தேடி வரும் என்று பார்க்கலாம்.
ராகு கேது: பொதுவாகவே ராகு கேதுகள் இருக்கும் இடத்துக்கேற்ப அந்த வீட்டின் அதிபதியைப் போல் பலன் தருவார். கன்னி புதன் வீட்டின் அதிபதி மீனம் குருவின் வீட்டின் அதிபதி என்பதால் ராகு அதிக காதலையும் கன்னி ராசியில் உள்ள கேது அதிக ஆன்மிகத்தையும் அளிப்பார். ராகு கேதுகள் எந்த நட்சத்திரத்தில் நிற்கிறார்களோ அந்த நட்சத்திரத்தின் அதிதேவதைக்கு அர்ச்சனை செய்வதும் நல்லது. பாம்பின் மேல் பள்ளிகொண்டிருக்கும் பெருமாள் கோயிலில் பரிகாரம் செய்துகொள்வது நல்லது. சுவாதி, சதயம், திருவாதிரை நட்சத்திரம் வரும் நாள்களில், அருகில் உள்ள சிவன் கோயிலில் பிரதோஷ காலத்தில் சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்ய வேண்டும்.

மேஷம்: உங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் வந்து விட்டது. 12 ஆம் இட ராகு ஆறாம் இட கேதுவினால் நன்மைகள் அதிகம் நடைபெறும். நீண்டநாள் உடம்பில் வாட்டி எடுத்த நோய்கள் நீங்கும். சம்பாதிக்கும் பணத்தினை முறையான வழியில் சேமிப்பது அவசியம். பண விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பணத்தை யோசித்து முதலீடு செய்யுங்கள். பத்திரமான இடத்தில் பணத்தை சேமிப்பது நன்மை தரும். உடல் ஆரோக்கியம் பெறும். கேது பகவான் எதிரிகளை வெல்வார். கடன் பிரச்னைகள் குறையும். பொறுமையுடன் இருந்தால் நன்மைகள் அதிகம் நடைபெறும். சங்கடகர சதுர்த்தி நாளில் விநாயகரை வழிபட நன்மைகள் அதிகம் நடைபெறும்.
ரிஷபம்: ராகு கேது பெயர்ச்சி உங்களுடைய வாழ்க்கையில் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரப்போகிறது. ராகு பகவான் லாப ஸ்தானமான 11வது வீட்டிலும் கேது பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாவது வீட்டிலும் அமர்ந்துள்ளதால் உங்களின் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். வேலை, தொழிலில் அசாத்தியமான வெற்றியைப் பெற்றுத் தருவார் ராகு. சிறப்பான தன லாபம் கிடைக்கும். மனதில் நினைத்ததை செயல்படுத்துவதில் வேகம் காட்டுவீர்கள். மனதில் நல்ல சிந்தனைகளையும், நல்லெண்ணங்களையும் கேது அருள்வார். பிள்ளைகளின் நலனில் அக்கறைக் காட்டுங்கள். கேதுவினால் விவேகமும், ராகுவினால் வேகமும் இணைவதால் எல்லா விஷயங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும்.
மிதுனம்: உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி புதிய அனுபவங்களை ஏற்படுத்தி கொடுப்பார். ராகு பகவான் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்திலும் கேது பகவான் நான்காம் வீடான சுக ஸ்தானத்திலும் அமர்ந்து உள்ளனர். சொத்து, சுகம் சேருவதோடு வாழ்வியல் தரமும் உயர்வடையும். நீங்கள் எடுக்க போகும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அம்மாவின் உடல் நலனில் அக்கறைக் காட்டுங்கள்.வேலையில் முன்னேற்றமும், ஊதிய உயர்வும் கிடைக்கும். முன்கோபத்தை குறையுங்கள். வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மன் கோவிலில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.
கடகம்: ராகு கேது பெயர்ச்சியால் உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும். ராகு பகவான் பாக்கிய ஸ்தானத்திலும் கேது பகவான் தைரிய ஸ்தானத்திலும் அமர்ந்து உள்ளனர். ராகு வெளிநாட்டு பயணத்திற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவார். கேதுவின் 3ஆம் இடத்துச் சஞ்சாரம் உடன்பிறந்தோருடன் சிறு சலசலப்பை ஏற்படுத்துவார். குடும்பத்தில் சுப காரியங்களில் ஏற்பட்ட தடைகள் விலகும். மறைமுக எதிரிகள் மாயமாவார்கள். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்னைகள் விலகும். புதிய சொத்து வாங்க முயற்சிப்போருக்கு கால நேரம் கூடிவரும். விலகியிருந்த உறவினர்கள் நெருங்கி வருவார்கள். செவ்வாய்கிழமைகளில் விநாயகரை வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.
சிம்மம்: கண்டச்சனி என்றாலும் கவலை வேண்டாம். ராகு பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திலும் கேது பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலும் அமர்ந்துள்ளனர். எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. வீண் வாக்குவாதத்தைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். குடும்ப பிரச்சினைகளை யாருக்கும் சொல்ல வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். அநாவசிய பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். வியாழக்கிழமைகளில் குருபகவானை வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.
கன்னி: ராகு கேது பெயர்ச்சி யோகத்தை அள்ளித்தரப்போகிறது. ராகு பகவான் ஏழாம் வீட்டிலும் கேது பகவான் ஜென்ம ராசியிலும் அமர்வதால் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். சொந்த வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் இதுநாள் வரை தடைபட்டு வந்த சுப காரியங்கள் கைகூடும். கணவன் மனைவிடையே இருந்த பிரச்சினைகள் நீங்கி நெருக்கம் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வருவாய் அதிகரித்தாலும் செலவுக்கு குறையிருக்காது. உங்கள் முக்கிய தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு சேமிப்பது அவசியம். புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செல்வீர்கள். ஜென்ம ராசியில் வந்து அமர உள்ள கேது பகவான் விரக்தியான மனநிலையைத் தருவார் என்றாலும் கவலைப்படாமல் செய்யும் வேலையில் கவனம் செலுத்துங்கள். உடல் நிலை பாதிப்புகள் வந்து போகும். ஞாயிறன்று பிரத்யங்கிரா தேவியை வணங்குங்கள். காகத்திற்கு எள் சாதம் வைப்பது நல்லது.












Click it and Unblock the Notifications