ராகு கேது பெயர்ச்சி 2025: ராஜ யோகம் பெறப் போகும் 5 ராசிகள்.. உங்க ராசி இருக்கானு பாருங்க
ராகு கேது பெயர்ச்சி 2025: புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த வருடத்தின் சிறப்பாக சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய மூன்று பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. ராகு கேது பெயர்ச்சியால் இந்த ஆண்டில் ராஜ வாழ்க்கை வாழப்போகும் 5 ராசிகள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்...
இருள் கிரகம், நிழல் கிரகம் என்று அழைக்கப்படும் ராகு கேது பெயர்ச்சி 2025 ஆம் ஆண்டில் மே 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. பாம்பு கிரகங்களான இந்த கிரகங்கள் பெரும்பாலும் மோசமான பலன்களைத் தரும். சில சமயங்களில் இந்த கிரகங்கள் அமரும் ராசியைப் பொருத்து நல்ல பலன்கள் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. அந்த வகையில், 2025 புத்தாண்டில் ராகு மீனத்தில் இருந்து கும்ப ராசிக்கும், கேது கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாக உள்ளன. அந்த வகையில், எந்தெந்த ராசிகள் அற்புத பலன்கள் பெற உள்ளன என பார்க்கலாம்.

மேஷம் (Rahu ketu peyarchi for mesham): மேஷ ராசிக்காரர்களுக்கு இந்தப் புத்தாண்டு நல்ல முன்னேற்றத்தை தரும் ஆண்டாக அமையப் போகிறது. ராகு கேதுவின் பெயர்ச்சியால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். தொழில், வேலைகளில் செழிப்பு, முன்னேற்றம் உண்டாகும். ராகு கும்ப ராசிக்கு மாறுவதால் பொருளாதார சூழல் மேம்படும். பண வரவு அதிகரிக்கும். உங்களுடைய அனைத்து முயற்சிகளுக்கும் குடும்பத்தினர் ஆதரவு தருவார்கள். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது முக்கியம். தெய்வ காரியங்களில் கவனம் செலுத்த தொடங்குவீர்கள். தடைபட்ட அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பதோடு அதில் வெற்றியும் காண்பீர்கள்.
மிதுனம் (Rahu ketu peyarchi for midhunam): மிதுன ராசிக்காரர்களுக்கு 2025 புத்தாண்டு பல்வேறு சாதகமான, முன்னேற்றமான பலன்களைத தரவுள்ளது. நல்ல செய்திகள் உங்கள் வீடு தேடி வரும். திருமணம் போன்ற அனைத்து சுப நிகழ்ச்சிகளும் நடக்கும். தினந்தோறும் செய்து வந்த பணிகளிலேயே பல்வேறு சவால்களைக் கடந்து வந்த நீங்கள் வரும் ஆண்டில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். மதிநுட்பத்தால் குறைவான உழைப்பைக் கொடுத்து அதற்கு இரட்டிப்பான பலன்களைப் பெறும் யோகம் உண்டாகும். வெளிநாட்டுப் பயணங்கள் கைகூடி வரும். புதிய வண்டி, புதிய வாகன யோகம் உண்டு.
விருச்சிகம் (Rahu ketu peyarchi for Viruchigam): வரும் புத்தாண்டில் தொட்ட காரியங்கள் அனைத்தும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு துலங்கும். உங்களுடைய அனைத்து செயல்களிலும் அதிர்ஷ்டம் உண்டாகும். ராகு கேது பெயர்ச்சியால் பல்வேறு நற்பலன்கள் கிடைக்கும் ஆண்டாக இந்த ஆண்டு அமையும். திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் கட்டாயம் உண்டாகும். பண வரவு உண்டாகும். கடன்களைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவீர்கள். புதிய வீடு, மனை வாங்கும் வாய்ப்புள்ளது. பூர்வீக சொத்து தொடர்பான பிரச்னைகளில் நல்ல செய்திகள் வந்து சேரும். வாகனம் வாங்க வேண்டும் என நினைப்பவர்கள் கட்டாயம் வாகனம் வாங்குவீர்கள்.
மகர ராசி (Rahu ketu peyarchi for magaram): என்னதான் உழைத்தாலும் உழைப்புக்கு உண்டான ஊதியமோ, பதவி உயர்வோ கிடைக்காமல் இருந்திருக்கும். ஆனால், ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சி காரணமாக மகர ராசிக்காரர்களுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படப் போகிறது. பலவிதத்தில் நன்மை கிடைக்கும். குறிப்பாக வேலையில் உங்கள் கடின உழைப்புக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கும். 2025 ஆம் ஆண்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பல விதத்தில் அதிர்ஷ்டமான சூழல் ஏற்படும். பணபலம் உண்டாகும். இன்ப சுற்றுலா செல்ல வாய்ப்புள்ளது. குடும்ப உறவு வலுப்படும்.
மீனம் (Rahu ketu peyarchi for meenam): மீன ராசியினரின் ராசியில் இருந்து ராகு நீங்குவதால் இனி உங்களுக்கு பல்வேறு அனுகூலன்கள் உண்டாகும். ஆனாலம், உங்களுக்கு ஜென்ம சனி ஆரம்பிக்கப் போகிறது. எந்த செயலைச் செய்தாலும் அதில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. புதிய தொழில்கள், வேலைகளைத் தொடங்குவதைத் தவிர்ப்பது நல்லது. உங்களுடைய முயற்சிகளுக்கு ஏற்ற சாதக பலன்கள் உண்டாகும். எந்த ஒரு புதிய முதலீடு விஷயத்திலும் கவனத்துடன் இருப்பது நல்லது.
குறிப்பாக மேஷம், மீன ராசிக்கு ராகு கேது பலன்கள் கிடைத்தாலும் உங்களுக்கு ஏழரை சனியும் நடக்கிறது. எனவே, கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்ல பலன்களைத் தரும்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications