சொல்லியடிக்கும் ராகு கேது.. தொழில், பணம், சொத்துகளை குவிக்கும் ராசியினர்.. உங்க ராசி இருக்கா
ராகு கேது பெயர்ச்சி 2025: அசுப கிரகங்களாக கருதப்படும் ராகு கேது கெடு பலன்களை மட்டுமே கொடுப்பதில்லை. இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும் உண்டாகும். ராகு கேது பெயர்ச்சியால் தொழில், பணம், சொத்துகளை குவிக்கும் ராசியினர் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இயக்கத்தையும், இடத்தையும் மாற்றுகின்றன. கிரகங்களின் இயக்க மாற்றம், ராசி மாற்றம் ஆகியவற்றின் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்படும். இந்த பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் தரும்.

பொதுவாக ராகு கேது என்பது நிழல் கிரகங்களாகும். ராகு கேது என்றாலே கெடு பலன்களை மட்டுமே கொடுக்கும் கிரகம் என்றுதான் கருதப்படுகிறது. ஆனால், எந்தவொரு கிரகமும் கெடு பலன்களை மட்டுமே கொடுப்பவை அல்ல. ராகு கேதுவின் பெயர்ச்சியால் சில ராசியினருக்கு நல்ல சுப பலன்களும் கிடைக்கும். கிரகங்களின் இயக்கம், அமர்ந்துள்ள இடம், கிரக சேர்க்கை போன்றவற்றை வைத்தே 12 ராசியினருக்கும் நன்மை, தீமை பலன்கள் கிடைக்கும்.
அந்த வகையில், பாம்பு கிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகு கேது கிரகங்கள் 2025 ஆம் ஆண்டில் ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் பெயர்ச்சியாவதால் எந்தெந்த ராசியினர் அதிர்ஷ்டமான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்று விரிவாகப் பார்க்கலாம்.
துலாம் - ராகு கேது பெயர்ச்சியாவதால் துலாம் ராசியினருக்கு அதிர்ஷ்டமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பொருளாதாரம் சார்ந்த முன்னேற்றம் ஏற்படும். சக ஊழியர்களிடம் இணக்கமாகச் செல்வது நல்லது. திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். அதிர்ஷ்டம் தரும் காலமாக இருக்கும். இழுபறியாக இருந்து வந்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு ஏற்றம் தரும் காலமாக இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு, உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.
கடகம் - ராகு கேது பெயர்ச்சியானது கடக ராசியினருக்கு நற்பலன்களைக் கொடுக்கும். வியாபாரம் தொழிலில் ஏற்றத்தைக் காண்பீர்கள். எடுத்த காரியங்களில் வெற்றியைப் பெறுவீர்கள். உங்களுடைய திறனை வளர்த்துக் கொள்வீர்கள். நிதி சார்ந்த விஷயங்களில் வளர்ச்சி ஏற்படும். முதலீடு மூலமாக லாபம் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்களுக்கு பதவி, சம்பளம் என உயர்வைத் தரும் சாதகமான காலமாக இருக்கும்.
கன்னி - ராகு கேதுவின் பெயர்ச்சியால் கன்னி ராசியினருக்கு சாதகமான காலமாக இருக்கும். நற்பலன்களை அனுபவிக்கும் நேரமாக இருக்கும். கடன் சார்ந்த விஷயங்களில் இருந்து விடுதலை அடைவீர்கள். நோய்களிலிருந்து விடுதலை அடைவீர்கள். அனைத்து முயற்சிகளிலும் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். நிதி சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். எதிர்பாராத வாய்ப்புகள் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த தொழில் புரிபவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.
மிதுனம்- ராகு கேது இடப்பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியங்களில் வெற்றியைத் தரும். மனதில் நம்பிக்கை பிறக்கும். புதிய புதிய விஷயங்களை செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் எடுத்த வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்களுடைய கடின உழைப்புக்கான பலனைப் பெறுவீர்கள். நோய் பாதிப்பில் இருந்து வந்தவர்கள் பூரணமாக குணமடைவீர்கள். குடும்பத்தில் அமைதி, மகிழ்ச்சி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பும் ஆதரவும் பெருகும்.
மேஷம் - ராகு கேது இடப்பெயர்ச்சி மேஷ ராசியினருக்கு யோகத்தை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இது நல்ல நேரமாக இருக்கும். உங்கள் வேலையால் மதிப்பு மரியாதையைப் பெறுவீர்கள். திட்டமிட்டு அனைத்து வேலைகளையும் உரிய நேரத்தில் முடிப்பீர்கள். வியாபாரம், தொழிலில் முன்னேற்றமான காலமாக இருக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பிள்ளைகள் வழி நல்ல செய்திகள் வந்து சேரும்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications