ராகு கேது பெயர்ச்சி 2026: தனுசு ராசிக்கு திடீர் பணவரவு யோகம்.. கூடுதல் வருமானம் தரும் ராகு கேது
ராகு கேது பெயர்ச்சி 2026: வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ராகு மகர ராசிக்குள்ளும், கேது பகவான் கடக ராசிக்குள்ளும் பெயர்ச்சியாகியுள்ளனர். நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படும் இந்த ராகு கேது பெயர்ச்சியால் தனுசு ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிடக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ராகு, கேது நேற்று மாலை 5.14 மணியளவில் பெயர்ச்சியடைந்துள்ளனர். 9 கிரகங்களில் ராகு கேது ஆகிய 2 பாம்பு கிரகங்களுக்கு கூடுதலான சக்தி, வலிமை உள்ளது. திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நிகழ்கிறது.

குரு பகவான், சுக்கிரனாக இருந்தாலும், ராஜ கிரகமாக இருந்தாலும் சரி, எந்த கிரகத்துடன் ராகு கேது சேர்கிறதோ அந்த கிரகத்தின் செயல்பாடுகளை இந்தப் பாம்பு கிரகங்களுக்கு முடக்கும் சக்தி உள்ளது. பெரிய கிரகங்களைக் கூட மடைமாற்றம் செய்யக்கூடிய வலிமை கொண்டது ராகு கேது. இன்று முதல் ஒன்றரை வருடங்களுக்கு ராகுவும் கேதுவும் பலனைத் தரப்போகின்றனர்.
கடந்த ஒன்றரை வருடமாக கும்ப ராசியில் ராகு பகவான் இருந்தார். கும்ப ராசியை விட்டு மகர ராசிக்குள் ராகு பகவான் அமர்ந்துள்ளார். அங்கு அமர்ந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பலன்களைத் தரப்போகிறார். சிம்மத்தில் அமர்ந்திருந்த கேது பகவான் கடக ராசிக்குள் நுழைந்துள்ளார். கடகத்தில் கேது அமர்ந்து அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பலன்களைத் தரப்போகிறார். அந்த வகையில், இந்த ராகு கேது பெயர்ச்சியில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசியினருக்கு இதுவரைக்கும் 3 ஆம் இடத்தில் ராகுவும், 9 ஆம் வீட்டில் கேதுவும் அமர்ந்திருந்தனர். 3வது வீட்டில் அமர்ந்திருந்த ராகு புதிய முயற்சிகளில் வெற்றியையும், தைரியத்தையும் கொடுத்திருப்பார். ஆனால், கேது பல்வேறு சிரமங்களைத் தந்திருப்பார். இந்த நிலைமைகள் இப்போது மாறும். ராசிக்கு 2 ஆம் வீட்டுக்குள் ராகுவும், 8 ஆவது வீட்டுக்குள் கேதுவும் வந்து அமருகின்றனர்.
பேச்சில் கவனம்
மற்றவர்களிடம் பேசும்போது மிகுந்த கவனமாகப் பேசுவது நல்லது. கண் பார்வையை பரிசோதனை செய்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். யாராவது பணம் கேட்டால் யோசித்துக் கொடுப்பது நன்மை பயக்கும். பேசும்போது கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. உண்மையைப் பேசுகிறேன் என்று கூறி தேவையில்லாதவற்றை உளறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
திடீர் பணவரவு
அதேசமயம், குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது. வெளிமாநிலம், வெளிநாடு செல்வதற்கான யோகம் உண்டாகும். அதற்கான அமைப்புகள் உண்டு. திடீர் பண வரவு உண்டாகும். ஒரு தொழில் இருந்து கொண்டே இன்னொரு தொழில் செய்வதற்கான வாய்ப்புள்ளது. கூடுதல் வருமானம் ஏற்படும். கேது இதுவரைக்கும் 9 ஆம் வீட்டில் அமர்ந்து அப்பாவுக்கு சங்கடத்தைக் கொடுத்திருப்பார். இனிமேல் தந்தையின் உடல்நிலை சீராகும்.
வெளியூர் பயணம்
8 ஆம் வீட்டுக்குள் கேது வந்துள்ளதால் குடும்பத்தில் சிறு சிறு சண்டைகள் வரும். கணவன், மனைவிக்குள் சந்தேகத்தால் சங்கடம் வரும் வாய்ப்புள்ளது. வெளியூர் பயணம் மேற்கொள்ளும்போது பகல் பயணங்களை மேற்கொள்வது தவிர்ப்பது நல்லது. வண்டி, வாகனங்களைப் பார்த்து பயன்படுத்த வேண்டும். சிறு சிறு பயணச் செலவுகள், விபத்துகள், பராமரிப்புச் செலவுகள் வரும் வாய்ப்புள்ளது. மனதிற்குள் சிறு சிறு பயம் வந்து போகும்.
வழிபாடு
பெரிய பாதிப்புகள் எதுவும் இருக்காது. புதுக்கோட்டை திருமயத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பேரையூரில் அமைந்துள்ள ஸ்ரீநாகநாதர், பிரகாதாம்பாள் கோயிலில் வழிபாடு செய்வது சகலவித நன்மைகளையும் தரும். முடிந்தவரை அன்னதானம், ஆடை தானம் கொடுப்பது ஏற்றத்தைத் தரும்.


Click it and Unblock the Notifications
