கடக ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. இந்த ஒரு விஷயத்தில் ரொம்ப கவனம்

Subscribe to Oneindia Tamil

ராகு கேது பெயர்ச்சி 2026: வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ராகு மகர ராசிக்குள்ளும், கேது பகவான் கடக ராசிக்குள்ளும் பெயர்ச்சியாகியுள்ளனர். நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படும் இந்த ராகு கேது பெயர்ச்சியால் கடக ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ராகு, கேது நேற்று மாலை 5.14 மணியளவில் பெயர்ச்சியடைந்துள்ளனர். 9 கிரகங்களில் ராகு கேது ஆகிய 2 பாம்பு கிரகங்களுக்கு கூடுதலான சக்தி, வலிமை உள்ளது. திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்சி நிகழ்கிறது.

rahu-ketu-peyarchi-2026-kadagam-rasi-palan-career-growth-new-business-opportunities-and-remedies

குரு பகவான், சுக்கிரனாக இருந்தாலும், ராஜ கிரக இருந்தாலும் சரி எந்த கிரகத்துடன் ராகு கேது சேர்கிறதோ அந்த கிரகத்தின் செயல்பாடுகளை இந்தப் பாம்பு கிரங்களுக்கு முடக்கும் சக்தி உள்ளது. பெரிய கிரகங்களைக் கூட மடைமாற்றம் செய்யக்கூடிய வலிமை கொண்டது ராகு கேது. இன்று முதல் ஒன்றரை வருடங்களுக்கு ராகுவும் கேதுவும் பலனைத் தரப்போகின்றனர்.

கடந்த ஒன்றரை வருடமாக கும்ப ராசியில் ராகு பகவான் இருந்தார். கும்ப ராசியை விட்டு மகர ராசிக்குள் ராகு பகவான் அமர்ந்துள்ளார். அங்கு அமர்ந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பலன்களைத் தரப்போகிறார். சிம்மத்தில் அமர்ந்திருந்த கேது பகவான் கடக ராசிக்குள் நுழைந்துள்ளார். கடகத்தில் கேது அமர்ந்து அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பலன்களைத் தரப்போகின்றனர். அந்த வகையில், இந்த ராகு கேது பெயர்ச்சியில் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

கடக ராசி பலன்

கடக ராசியினருக்கு கடந்த ஒன்றரை வருடமாக ராசிக்கு 2 ஆம் இடத்தில் கேது அமர்ந்து வர வேண்டிய பணங்கள் வராதபடி தடுத்துக் கொண்டிருந்தார். பேச்சுவார்த்தை முடிந்து கைக்கு வர வேண்டிய பணம் கூட தடைபட்டிருக்கும். அந்த நிலைமைகள் எல்லாம் இனிமேல் மாறும். வர வேண்டிய தொகை கைக்கு வரும். எல்லா வகையிலும் செல்வாக்கு அதிகரிக்கும். ராசிக்கு 8 ஆம் வீட்டில் ராகு அமர்ந்திருந்து பயத்தைக் கொடுத்துக் கொண்டிருந்திருப்பார்.

ஆரோக்கியம் கவனம்

சிறிய உடல்நலக் கோளாறுகள் கூட பெரிய நோயைக் கொடுத்துவிடுமோ என்ற பயத்தைக் கொடுத்துக் கொண்டிருந்திருக்கும். இனி அந்த நிலைமைகள் எல்லாம் மாறும். நிறைய நேரங்களில் பயணங்களின்போது வண்டி பழுதாகி நின்றிருக்கும். எல்லா வகையிலும் உங்களுக்கு நன்மைகள் நடக்கும். அதேநேரத்தில் 8 வது வீட்டை விட்டு விலகி 7 ஆம் இடத்தில் ராகு அமருகிறார். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.

உணவில் கவனம்

கணவன், மனைவிக்குள் சந்தேகத்தால் சங்கடங்கள் வர வாய்ப்புள்ளது. அவற்றில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. ராசிக்குள் கேது வந்து அமருவதால் உப்பு, காரத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. தினந்தோறும் நடைப்பயிற்சி செய்வது அவசியம். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. இரவில் தாமதமாக சாப்பிடுவது, தேவையில்லாத உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

வழிபாடு

வாயு தொந்தரவு, அசிடிட்டி போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. முன்கோபத்தை தவிர்ப்பது ஏற்றத்தைத் தரும். ஏற்கனவே இருந்ததைவிட இந்த ராகு கேது பெயர்ச்சி ஓரளவு நன்றாக இருக்கிறது என்ற ஏற்றத்தைத் தரும். சென்னை கெருகம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ நீலகண்டேஸ்வரர், ஆதி காமாட்சியம்மன் கோயிலில் சென்று வழிபாடு செய்வது நன்மையைத் தரும். பேரீச்சம்பழம் தானமாகக் கொடுப்பது நன்மையைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+