ராகு கேது பெயர்ச்சி 2026: கன்னி ராசிக்கு பணவரவு அதிகரிக்கும்.. புதிய வேலை, சொந்த வீடு யோகம்

Subscribe to Oneindia Tamil

ராகு கேது பெயர்ச்சி 2026: வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ராகு மகர ராசிக்குள்ளும், கேது பகவான் கடக ராசிக்குள்ளும் பெயர்ச்சியாகியுள்ளனர். நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படும் இந்த ராகு கேது பெயர்ச்சியால் கன்னி ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிடக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ராகு, கேது நேற்று மாலை 5.14 மணியளவில் பெயர்ச்சியடைந்துள்ளனர். 9 கிரகங்களில் ராகு கேது ஆகிய 2 பாம்பு கிரகங்களுக்கு கூடுதலான சக்தி, வலிமை உள்ளது. திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நிகழ்கிறது.

rahu-ketu-peyarchi-2026-kanni-rasi-palan-career-growth-new-business-opportunities-and-remedies

குரு பகவான், சுக்கிரனாக இருந்தாலும், ராஜ கிரகமாக இருந்தாலும் சரி, எந்த கிரகத்துடன் ராகு கேது சேர்கிறதோ அந்த கிரகத்தின் செயல்பாடுகளை இந்தப் பாம்பு கிரகங்களுக்கு முடக்கும் சக்தி உள்ளது. பெரிய கிரகங்களைக் கூட மடைமாற்றம் செய்யக்கூடிய வலிமை கொண்டது ராகு கேது. இன்று முதல் ஒன்றரை வருடங்களுக்கு ராகுவும் கேதுவும் பலனைத் தரப்போகின்றனர்.

கடந்த ஒன்றரை வருடமாக கும்ப ராசியில் ராகு பகவான் இருந்தார். கும்ப ராசியை விட்டு மகர ராசிக்குள் ராகு பகவான் அமர்ந்துள்ளார். அங்கு அமர்ந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பலன்களைத் தரப்போகிறார். சிம்மத்தில் அமர்ந்திருந்த கேது பகவான் கடக ராசிக்குள் நுழைந்துள்ளார். கடகத்தில் கேது அமர்ந்து அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பலன்களைத் தரப்போகிறார். அந்த வகையில், இந்த ராகு கேது பெயர்ச்சியில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசியினருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உங்கள் ராசிக்கு 6 ஆவது வீட்டில் அமர்ந்திருந்த ராகுவும், 12 ஆம் இடத்தில் இருந்த கேதுவும் பல்வேறு கஷ்டங்களைக் கொடுத்திருக்கும். நிம்மதியில்லாமல் இருந்திருப்பீர்கள். கேதுவால் தூக்கமின்மை, துக்கம் போன்றவை இருந்திருக்கும். எதைத் தொட்டாலும் செலவு, எங்கு சென்றாலும் கடன் தொந்தரவு என கவலையில் இருந்திருப்பீர்கள்.

ஆன்மீகத்தில் ஆர்வம்

ராகு பகவான் 6 ஆம் இடத்தில் இருந்து ஓரளவு நன்மைகளையும், எல்லாவற்றையும் சமாளிக்கக்கூடிய சக்தி, தைரியத்தைக் கொடுத்திருப்பார். இப்போது ராகு 5 ஆம் இடத்திலும், கேது 11 ஆம் இடமான லாப ஸ்தானத்திலும் அமர்கிறார். 5 ஆம் இடத்தில் ராகு இருப்பது ஒருவகையில் நல்லது. புத்தி தெளிவு, ஞானம், ஆன்மீகத்தில் நாட்டத்தைக் கொடுக்கும்.

கவனம்

பிள்ளைகளுடன் சண்டை, பிள்ளைகள் சரியாக பொறுப்பாக நடந்துகொள்ளவில்லை என்கிற ஆதங்கம் இருக்கும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவர்களின் ஆலோசனைகள் இல்லாமல் செயல்படுவது, மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. 5 ஆம் இடத்தில் ராகு இருப்பதால் பூர்வீக சொத்து விவகாரங்களில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நன்மை பயக்கும்.

திடீர் பணவரவு

கோர்ட், வழக்கு என வராமல் பார்த்துக் கொள்வது நன்மை பயக்கும். கேது லாப ஸ்தானத்தில் வந்து அமர்வதால் திடீர் பணவரவு, செல்வாக்கு அதிகரிக்கும். இதுவரை உழைத்த உழைப்பிற்கு பலன் கிடைக்கும். வியாபாரம், உத்தியோகம் போன்ற விஷயங்களில் அற்புதம் ஏற்படும். எங்கு சென்றாலும் நன்மைகள் நடக்கும். அடகில் இருந்த நகைகளை மீட்டெடுப்பீர்கள். வாடகை வீட்டில் இருந்து சொந்த வீட்டுக்குச் செல்லும் யோகம் உண்டு.

வழிபாடு

நல்ல உத்தியோகம் கிடைக்கும். மனதிற்குள் நிம்மதியும், சந்தோஷமும் ஏற்படும். நாகப்பட்டினத்தில் உள்ள காயாரோகனேஸ்வரராக காட்சிக் கொடுக்கும் சிவபெருமானை தரிசனம் செய்வது நன்மை பயக்கும். அங்கு அம்பாள் நீலயதாட்சியாக காட்சிக் கொடுக்கிறார். அங்கு சென்று மனதார வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். பச்சரிசி தானமாகக் கொடுப்பது மேன்மையைக் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+