ராகு கேது பெயர்ச்சி 2026: மகர ராசிக்குள் வரும் ராகு.. பேச்சு, பண விஷயத்தில் ரொம்ப கவனம்
ராகு கேது பெயர்ச்சி 2026: வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ராகு மகர ராசிக்குள்ளும், கேது பகவான் கடக ராசிக்குள்ளும் பெயர்ச்சியாகியுள்ளனர். நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படும் இந்த ராகு கேது பெயர்ச்சியால் மகர ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிடக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ராகு, கேது நேற்று மாலை 5.14 மணியளவில் பெயர்ச்சியடைந்துள்ளனர். 9 கிரகங்களில் ராகு கேது ஆகிய 2 பாம்பு கிரகங்களுக்கு கூடுதலான சக்தி, வலிமை உள்ளது. திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நிகழ்கிறது.

குரு பகவான், சுக்கிரனாக இருந்தாலும், ராஜ கிரகமாக இருந்தாலும் சரி, எந்த கிரகத்துடன் ராகு கேது சேர்கிறதோ அந்த கிரகத்தின் செயல்பாடுகளை இந்தப் பாம்பு கிரகங்களுக்கு முடக்கும் சக்தி உள்ளது. பெரிய கிரகங்களைக் கூட மடைமாற்றம் செய்யக்கூடிய வலிமை கொண்டது ராகு கேது. இன்று முதல் ஒன்றரை வருடங்களுக்கு ராகுவும் கேதுவும் பலனைத் தரப்போகின்றனர்.
கடந்த ஒன்றரை வருடமாக கும்ப ராசியில் ராகு பகவான் இருந்தார். கும்ப ராசியை விட்டு மகர ராசிக்குள் ராகு பகவான் அமர்ந்துள்ளார். அங்கு அமர்ந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பலன்களைத் தரப்போகிறார். சிம்மத்தில் அமர்ந்திருந்த கேது பகவான் கடக ராசிக்குள் நுழைந்துள்ளார். கடகத்தில் கேது அமர்ந்து அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பலன்களைத் தரப்போகிறார். அந்த வகையில், இந்த ராகு கேது பெயர்ச்சியில் மகர ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
மகர ராசி பலன்
மகர ராசியினருக்கு கடந்த ஒன்றை ஆண்டுகளாக 2 ஆம் வீட்டில் ராகுவும், 8 ஆம் வீட்டில் கேதுவும் அமர்ந்து உங்களுக்கு சிரமங்களையும், சில நேரங்களில் சந்தோஷத்தையும் கொடுத்திருப்பார்கள். தற்போது ராசிக்கு 2 ஆம் இடத்தில் ராகு தற்போது ராசிக்குள் வந்து அமர்கிறார். 8 ஆம் வீட்டில் அமர்ந்திருந்த கேது 7 ஆம் வீட்டுக்குள் வந்து அமர்கிறார். ராசிக்குள் ராகு வந்து அமர்வதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.
பேச்சு, பணத்தில் கவனம்
அவசரப்பட்டு எந்தவித முடிவுகளையும் எடுக்காமல் இருப்பது நன்மை பயக்கும். உணர்ச்சிவசப்பட்டு பேசுவது, கோபப்பட்டுப் பேசுவது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. தெரியாமல் பேசிவிட்டேன் என்று மன்னிப்பு கேட்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. பேசும்போது மிகுந்த கவனமாகப் பேசுவது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
கவனம்
அசிடிட்டி தொந்தரவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. சிறுநீர் தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனம் தேவை. நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொள்வது நன்மை பயக்கும். கோபம் கொள்வது, கோபத்தோடு பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. கேது 8 ஆம் வீட்டை விட்டு விலகி 7 ஆம் வீட்டில் வந்து அமர்ந்துள்ளார். கணவன் மனைவிக்குள் அவ்வப்போது சிறு சிறு விவாதம் வந்து போகும். அதனைத் தவிர்ப்பது நல்லது.
வழிபாடு
வியாபாரத்தில் கூட்டுத் தொழிலை தவிர்ப்பது மேன்மையைத் தரும். கேதுவால் சின்ன சின்ன தொந்தரவுகள், மனோபயம் இருக்கும். நாகப்பட்டினம் அருகே நாகூரில் அமைந்துள்ள ஸ்ரீ நாகவள்ளி சமேதரமாக அருள்பாலிக்கும் ஸ்ரீ நாகநாதரை வழிபாடு செய்வது நன்மை பயக்கும். ராகு கேதுவால் ஏற்படும் பாதிப்புகள் விலகும். பச்சரிசி தானமாகக் கொடுப்பது ஏற்றத்தைத் தரும்.


Click it and Unblock the Notifications
