மேஷ ராசிக்கு அடுத்த ஒன்றரை ஆண்டுகள் எப்படி இருக்கும்?.. ராகு கேது பெயர்ச்சியில் வரும் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

ராகு கேது பெயர்ச்சி 2026: வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ராகு மகர ராசிக்குள்ளும், கேது பகவான் கடக ராசிக்குள்ளும் பெயர்ச்சியாகியுள்ளனர். நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படும் இந்த ராகு கேது பெயர்ச்சியால் மேஷ ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ராகு, கேது மாலை 5.14 மணியளவில் பெயர்ச்சியடைந்துள்ளனர். 9 கிரகங்களில் ராகு கேது ஆகிய 2 பாம்பு கிரகங்களுக்கு கூடுதலான சக்தி, வலிமை உள்ளது. திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்சி நிகழ்கிறது.

rahu-ketu-peyarchi-2026-mesha-rasi-palan-career-growth-new-business-opportunities-and-remedies

குரு பகவான், சுக்கிரனாக இருந்தாலும், ராஜ கிரக இருந்தாலும் சரி எந்த கிரகத்துடன் ராகு கேது சேர்கிறதோ அந்த கிரகத்தின் செயல்பாடுகளை இந்தப் பாம்பு கிரங்களுக்கு முடக்கும் சக்தி உள்ளது. பெரிய கிரகங்களைக் கூட மடைமாற்றம் செய்யக்கூடிய வலிமை கொண்டது ராகு கேது. இன்று முதல் ஒன்றரை வருடங்களுக்கு ராகுவும் கேதுவும் பலனைத் தரப்போகின்றனர்.

கடந்த ஒன்றரை வருடமாக கும்ப ராசியில் ராகு பகவான் இருந்தார். கும்ப ராசியை விட்டு மகர ராசிக்குள் ராகு பகவான் அமர்ந்துள்ளார். அங்கு அமர்ந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பலன்களைத் தரப்போகிறார். சிம்மத்தில் அமர்ந்திருந்த கேது பகவான் கடக ராசிக்குள் நுழைந்துள்ளார். கடகத்தில் கேது அமர்ந்து அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பலன்களைத் தரப்போகின்றனர். அந்த வகையில், இந்த ராகு கேது பெயர்ச்சியில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

மேஷ ராசி பலன்

மேஷ ராசியினருக்கு இதுவரை லாபத்தில் இருந்த ராகு பகவான் ஓரளவு வருமானத்தையும், வசதியையும் கொடுத்துக் கொண்டிருந்தார். நட்பு வட்டத்தையும் அதிகரித்திருப்பார். தற்போது, பெயர்ச்சியடைந்து ராசிக்கு 10 ஆம் இடத்தில் வந்து அமர்ந்துள்ளார். ராசிக்கு 10 ஆம் இடமென்பதால் உத்தியோகத்தில் மிகுந்த கவனமாகவும் இருக்க வேண்டும்.

மதிப்பு, மரியாதை

வேலைச் சுமை ஓரளவுக்கு இருந்தாலும், அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை கிடைக்கும். சிறிய சிறியதாக நல்ல வாய்ப்புகளும் உங்களுக்கு வந்து சேரும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உத்தியோகம் போய்விடுமா, இருக்குமா என்கிற பயம் அடிமனதில் இருந்து கொண்டே இருக்கும். மேலதிகாரிகள் உங்களை அழைத்தாலே பதட்டத்துடன் காணப்படுவீர்கள். ஆனால், உங்களை பாராட்டுவதற்கும், சிறு திருத்தங்களை சொல்வதற்குமான வாய்ப்புகள் ஏற்படும்.

சொந்த தொழில்

இருப்பினும், வேலைக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ என்கிற பயத்தை ஏற்படுத்திக் கொண்டே இருப்பார் ராகு பகவான். பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. சிலருக்கு சொந்தத் தொழில் தொடங்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும். தசாபுத்தி நன்றாக இருந்தால் 10 ஆம் இடத்தில் ராகு வருவதால் சொந்தமாக தொழில் தொடங்கலாம். அதற்கான வாய்ப்புகள், திறமைகள், வசதிகளையும் இந்த ராகு பகவான் கொடுப்பார்.

ஆன்மீக பயணங்கள்

வேண்டாம் என்று கூறினாலும் சில கெளரவ பொறுப்புகள் உங்களை வந்து சேரும். 10 ஆம் இடத்தில் ராகு வந்து அமர்வதால் புண்ணிய ஸ்தலங்கள், புனித நதிகளுக்குச் செல்வது போன்ற அமைப்புகள் ஏற்படும். நீண்ட வருடமாக செல்ல வேண்டும் என்று நினைத்த கோயில்களுக்குச் சென்று வருவீர்கள். 5 ஆம் இடத்தில் இருந்த கேது பகவான் பிள்ளைகளோடு சண்டை, சச்சரவுகளைக் கொடுத்திருப்பார். வேலை, திருமணம் போன்றவை தடைபட்டிருக்கும்.

பரிகாரம்

இப்போது 4 ஆம் இடத்தில் கேது வருவதால், நல்ல பலன்கள் கிடைக்கும். அம்மாவின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. வண்டி, வாகனத்தில் செல்லும்போது மிகுந்த கவனம் வேண்டும். இரவு நேரப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. நேரத்துக்கு சாப்பிட முடிவதில்லை, தூங்க முடிவதில்லை என்று சில நேரத்தில் ஆதங்கப்பட்டுக் கொண்டே இருப்பீர்கள். ஆம்பூர், வாணியம்பாடியில் உள்ள அபயவள்ளி சமேத நாகரத்தின சுவாமியை தரிசனம் செய்து வருவது நன்மை பயக்கும். தேங்காய் தானம் கொடுப்பது ஏற்றத்தைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+