மிதுன ராசிக்கு எச்சரிக்கை.. பேச்சிலும் பண விஷயத்திலும் கவனம்.. ராகு கேது பெயர்ச்சியில் வரும் மாற்றம்
ராகு கேது பெயர்ச்சி 2026: வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ராகு மகர ராசிக்குள்ளும், கேது பகவான் கடக ராசிக்குள்ளும் பெயர்ச்சியாகியுள்ளனர். நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படும் இந்த ராகு கேது பெயர்ச்சியால் மிதுன ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ராகு, கேது மாலை 5.14 மணியளவில் பெயர்ச்சியடைந்துள்ளனர். 9 கிரகங்களில் ராகு கேது ஆகிய 2 பாம்பு கிரகங்களுக்கு கூடுதலான சக்தி, வலிமை உள்ளது. திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்சி நிகழ்கிறது.

குரு பகவான், சுக்கிரனாக இருந்தாலும், ராஜ கிரக இருந்தாலும் சரி எந்த கிரகத்துடன் ராகு கேது சேர்கிறதோ அந்த கிரகத்தின் செயல்பாடுகளை இந்தப் பாம்பு கிரங்களுக்கு முடக்கும் சக்தி உள்ளது. பெரிய கிரகங்களைக் கூட மடைமாற்றம் செய்யக்கூடிய வலிமை கொண்டது ராகு கேது. இன்று முதல் ஒன்றரை வருடங்களுக்கு ராகுவும் கேதுவும் பலனைத் தரப்போகின்றனர்.
கடந்த ஒன்றரை வருடமாக கும்ப ராசியில் ராகு பகவான் இருந்தார். கும்ப ராசியை விட்டு மகர ராசிக்குள் ராகு பகவான் அமர்ந்துள்ளார். அங்கு அமர்ந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பலன்களைத் தரப்போகிறார். சிம்மத்தில் அமர்ந்திருந்த கேது பகவான் கடக ராசிக்குள் நுழைந்துள்ளார். கடகத்தில் கேது அமர்ந்து அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பலன்களைத் தரப்போகின்றனர். அந்த வகையில், இந்த ராகு கேது பெயர்ச்சியில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
மிதுன ராசி பலன்
மிதுன ராசியினருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக 3 ஆம் இடத்தில் கேது அமர்ந்து தைரியத்தைக் கொடுத்திருப்பார். எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்கிற நிலைமை இருந்திருக்கும். எல்லா வகையிலும் வெற்றி ஏற்பட்டிருக்கும். தற்போது கேது 2 ஆம் வீட்டில் நுழைவதால் சிக்கனமாக இருப்பது நன்மை பயக்கும். மற்றவர்களிடம் எதார்த்தமாகப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது.
கவனம்
நீங்கள் பேசுவதை பதிவு செய்து கொண்டு சென்று காட்டுவதற்கும் வாய்ப்புள்ளது. மற்றவர்களைப் பற்றி தாக்கியும், தூக்கியும் பேசுவதைத் தவிர்த்து அமைதியைக்கடைப்பிடிப்பது நல்லது. உண்மையை சொன்னால் கூட உங்கள் மீது பழி வரும் வாய்ப்பு ஏற்படும். உதவிகள் செய்தாலும் உங்களுக்குப் போக மற்றவர்களுக்குச் செய்வது நல்லது. செலவுகளைத் தவிர்ப்பது மேன்மை பயக்கும்.
வீண் செலவு வேண்டாம்
மற்றவர்களுக்கு வீண் வாக்குறுதிகளை கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. கண் பார்வையை பரிசோதனை செய்து கொள்வது நன்மை பயக்கும். உணர்ச்சிவசப்பட்டு பேசுவது, சவால் விட்டுப் பேசுவதைத் தவிர்ப்பது நன்மை பயக்கும். வீண் செலவுகளுக்கு கடன் வாங்குவது, ஆடம்பரத்துக்கு கடன் வாங்குவது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
வெளியூர் யோகம்
ராகு இதுவரைக்கும் 9 ஆம் இடத்தில் இருந்து அப்புவுக்கு நிறைய தொந்தரவுகளைத் தந்திருக்கும். ராகு 9 ஆம் இடத்தில் இருந்து அப்பாவுக்கு நிறைய பிரச்சனைகளைக் கொடுத்திருப்பார். சேமிப்புகள் கரைந்திருக்கும். தற்போது ராகு 8 ஆம் இடத்தில் வந்து அமர்ந்த்துள்ளதால் சிலருக்கு வெளிமாநிலம், வெளியூருக்கு செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும். இருந்தாலும் இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நன்மை பயக்கும்.
வழிபாடு
கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வது தவிர்ப்பது நல்லது. சில நேரம் உடல்நலனில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனம் தேவை. கோடகநல்லூரில் உள்ள காளத்தீஸ்வரரை மனதாரா வழிபாடு செய்வது சகலவித நன்மைகளைத் தரும். பயத்தம்பருப்பு தானமாகக் கொடுப்பது மேன்மையைத் தரும்.


Click it and Unblock the Notifications
