கண்ணா 2 லட்டு தின்ன ஆசையா.. மீன ராசிக்கு ராகு கேது பெயர்ச்சி தரும் ராஜோகம்.. தொட்டதெல்லாம் ஹிட்டு
ராகு கேது பெயர்ச்சி 2026: வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி நடப்பு ஆண்டில் ராகு கேது பெயர்ச்சி நவம்பர் 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது. நிழல் கிரகங்களான இந்த ராகு கேது பெயர்ச்சியால் மீனம் ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இடங்களை மாற்றுவது வழக்கம்.ராகு மற்றும் கேது என்பது நிழல் கிரங்களாகும். சந்திரன் மற்றும் சூரியனால் கிரகணம் ஏற்படும் போது உருவாகும் நிழல் கிரகங்கள்தான் ராகு கேது. ஐப்பசி 27 ஆம் தேதி, நவம்பர் 13 ஆம் தேதி மாலை 5.14 மணியளவில் ராகு பகவான் கும்பத்தில் இருந்து மகரத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

கேது பகவான் சிம்ம ராசியில் இருந்து கடகத்திற்குப் பெயர்ச்சியாகிறார். இந்த ராகு கேது பெயர்ச்சி சமயத்தில் கடகத்தில் குருவும், மீனத்தில் சனியும் இருக்கின்றனர். சனியின் வீட்டில் ராகு, சந்திரனின் வீட்டில் கேது பகவான் இருக்கின்றனர். இந்த ராகு கேது பெயர்ச்சியால் சில ராசிகளின் வாழ்க்கையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களையும் அள்ளிக் கொடுக்கும்.
ராகு கேது என்றாலே பாதிப்புதான் என்று மக்கள் நினைக்கின்றனர். அப்படி நிச்சயமாக இல்லை. நல்லதும், தீமையும் சேர்ந்த கலவைதான் ராகு கேது பெயர்ச்சி. இந்த ராகு கேது பெயர்ச்சியில் மீனம் ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மீனம்
மீனம் ராசியினருக்கு 12 ஆம் இடத்தில் இருந்த ராகு 11 ஆம் இடத்துக்கும், 6 ஆம் இடத்தில் இருந்த கேது 5 ஆம் இடத்துக்கும் வருகின்றனர். ஆலங்குடி குரு பகவான் ஸ்தலத்துக்குச் சென்று வழிபாடு செய்து வருவது விசேஷ பலன்களைத் தரும். ஜென்ம சனி இருப்பதால் ஆரோக்கியத்தில் கழிவுப் பாதை, அடிவயிறு தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும்.
தொழில் தொடங்கும் யோகம்
தெய்வத்தின் அருளால் வியாபாரம், படிப்பு, தொழில், உத்தியோகத்தில் ஏற்றம் ஏற்படும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். திடீர் லாபம் ஏற்படும். தொழிலில் இருந்து வந்த சங்கடங்கள் நிவர்த்தியாகும். கூட்டுத் தொழிலில் இருந்து தனித்தொழில் தொடங்கக்கூடிய யோகம் ஏற்படும். அரசியலில் இருந்த கஷ்டங்கள் நிவர்த்தியாகும். சத்ருக்களின் பிரச்சனைகளில் இருந்து நிவர்த்தியாகும்.
வெற்றி, சந்தோஷம்
பிள்ளைகள் விஷயத்தில் அதீத கவனம் தேவை. பிள்ளைகளின் படிப்பு, தொழில், உத்தியோகத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. இதுவரை இருந்து வந்த சங்கடங்களில் இருந்து பரிபூரண நிவர்த்தி ஏற்படும். பெரும் வெற்றிகளும், சந்தோஷங்களும் உண்டாகும்.
ஆரோக்கியம்
உடற்பயிற்சியைத் தவிர்க்கும் மீன ராசியினருக்கு மன அழுத்தம் நிச்சயமாக ஏற்படும். வயிறு சம்பந்தப்பட்ட, பாதம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நிச்சயம் ஏற்படும். வலுக்கலான இடங்களில் மிகுந்த கவனம் தேவை. அபிராமி அந்தாதியில் உள்ள 40, 59, 75 ஆவது பாடல்களைக் கேட்பது, படிப்பது மேன்மையைத் தரும். பிள்ளைகள் விஷயத்தில் யோகத்தைத் தரும்.
செல்வாக்கு
பிள்ளைகள் விஷயத்தில் தவறான நடவடிக்கைகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. கர்ப்பிணிகள் மருத்துவர் ஆலோசனையையும், கணவர், பெற்றோர், உடன் பிறந்தோரின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது நன்மை பயக்கும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். முதுகுத் தண்டுவடப் பயிற்சிகளை செய்வது நன்மையைத் தரும். தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், படிப்பு மாற்றம் என அனைத்து வித நல்ல மாற்றங்களும் ஏற்படும்.
திடீர் அதிர்ஷ்டம்
லாட்டரி யோகம், திடீரென மிகப்பெரிய மாற்றங்கள், முதலீடுகள் உங்களைத் தேடி வரும். யோக பலன்களை அதிகளவில் பெற்றுத் தரும். பண வரவு அற்புதமாக இருக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும்


Click it and Unblock the Notifications
